வியாழன், 28 ஜூலை, 2011

பொன்சேகா வைத்தியசாலை சென்றபோது இடையூறு - விசாரணை ஆரம்பம்

சரத் பொன்சேகாவை கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தங்களுடைய கடமைகளை செய்யமுடியாது இடையூறு விளைவித்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்றிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது கமராவுடன் வந்த ஒருவரும் அவருக்கு உதவிபுரிய வந்த மற்றைய நபரும் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்தவென எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பெற்றுத் தருமாறு உத்தரவிடும்படி பொலிஸார் நீதிமன்றில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன்படி குறித்த வீடியோ காட்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு உரிய தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்மாந்துறை, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்றில் 100 நாட்களுக்குள் வீடுகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட 81 குடும்பங்களிற்கு வீடுகளைக் கட்டுவதற்கான கட்டிடப் பொருட்கள் இன்று சம்மாந்துறை, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்று ஆகிய மூன்று இடங்களில் வைத்து இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இவ்வீடுகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் அமைக்கப்படவுள்ளது. இதன் முதலாவது வைபவம் சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 34 தமிழ், முஸ்லிம் குடும்பங்களிற்கான பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்பிற்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரேரா, 23 வது படைப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மஹிந்தமுதலிகே, 32வது படைப் பிரிவின் பொறுப்பதிகாரி கேர்ணல் குணசுமண, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் லியாக்கத் அலி, சம்மாந்துறை மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.எல்.ரஹ்மதுல்லாஹ், கல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மசூட், பொலிஸ் அதிகாரி எம்.சம்சுதீன் உட்பட இராணுவத்தினர், பொலிசார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 19 நபர்கள் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை, கல்முனைக்குடி, கல்முனை, மணல்சேனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 19 நபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பாரை பொலிசாரும் இலங்கை மின்சார சபையின் விஷேட பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெல்ஜியத்தால் இலங்கை மாணவர்களுக்கு கணினிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் அமைப்புக்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

பெல்ஜியம் நாட்டில் இயங்கிவரும் லங்கா மாதாவின் பிள்ளைகள் சங்கத்தினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கன்னங்குடா மகாவித்தியாலயத்துக்கு ஒரு தொகை கணினிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கன்னங்குடா மகாவித்தியாலய அதிபர் முரகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் லங்கா மாதாவின் பிள்ளைகள் சங்கத்தின் குடும்தை சேர்ந்தவர்கள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஐதேகவில் மீண்டும் பிளவு: தலைவர் கரு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித்?

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை கண்டதன் விளைவாக அக்கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடுமென கட்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மாலை கூடி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதோடு இன்று காலையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் முடிவுகள் குறித்து சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஏற்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை சஜித் பிரேமதாஸ விரும்புகிறார்.

எனினும் நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை இன்று நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக 17ற்கும் மேற்பட்ட தேர்தல்களில் படுதோல்வியை தழுவிக் கொண்டுள்ளது.

இதனை அடுத்து கட்சிக்குள் மறுசீரமைப்பு கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு அதற்கென விசேட குழு அமைக்கப்பட்டு மக்கள் ஆணையுடன் மறுசீரமைப்பும் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அதில் சஜித் பிரேமதாஸ தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது ஏமாற்றம் அளித்தது.

அதன் பின்னர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கி அனைவரும் ரணில் விக்ரமசிங்கவால் பழிவாங்கப்பட்டனர். சஜித் பிரேமதாஸவிற்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்ட போது அது பெயரளவிலான பதவியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பொறுப்புக் குறித்து மீண்டும் பேசுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் விரைவில் பாரிய பிளவொன்று ஏற்படலாம் என ஊகிக்கத் தோணுகிறது.

குறிப்பு*"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"

இலங்கை விடயத்தை வைத்து சனல் 4 பிரபல்யம் அடைய முயற்சி

சனல் 4 ஊடக அமைப்பானது கீழ்தரமான ஊடக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், காணொளில் கருத்து தெரிவித்த வீரர்கள் அவர்களின் கருத்து உண்மையானது எனில் அக்கருத்தினை தேசிய நீதிமன்றத்தின் முன்போ, சர்வதேச நீதிமன்றத்தின் முன்போ முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சனல் 4 இராணுவ வீரர்கள் எனக்கூறி காட்சிப்படுத்தியவர்கள் குறித்து எதுவித தகவல்களையும் அறிவிக்காமை, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாது போலியான தகவல்களை வழக்குவதற்கு சமன் என கூறியுள்ள பாதுகாப்பு நெயலாளர் அது நீதிக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தை வைத்துக்கொண்டு சனல் 4 ஊடக பிரபல்யம் அடைய முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழில் பறிபோகக் கூடிய 4 ஆசனங்கள்

யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு ஆறாக குறைக்கப்படலாம் என தேர்தல் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

2009 ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யாழில் மக்கள் தொகையில் 320,000 வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைக்கப்படும் 4 ஆசனங்களும் பதுளை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம்

ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து 3.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை பாதுகாப்பாக விடுவிக்க முயற்சித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த அதிகாரி கொழும்பு தரைப்படை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

சனல் 4 நிறுத்த முடியாத பயணம் : சவாலை எதிர்கொள்வோம்

சனல் 4 தொலைக்காட்சியின் நடவடிக்கைகள் நிறுத்த முடியாத ஒன்று என்பதால் அதன் சவால்களை பொறுப்பேற்று முன்னோக்கிச் செல்வோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில் :-

தீவிரவாதிகளின் தாக்குதலில் அவருடைய தாயின் கண் பாதிக்கப்பட்டமை அறிந்தும் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது போல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மகன் விமுக்தி பண்டாரநாயக்க இலங்கையர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதையிட்டு நான் மிகுந்த கவலையடைகிறேன். நான் அவரை எண்ணி வெட்கப்படுகிறேன்.

முதலாவதாக சனல் 4 காணொளி வெளியிட்டதன் பின்னர் இன்னும் மூன்று தயாரித்து வைத்திருப்பதாக நான் கூறினேன். அன்று எமது நடவடிக்கையால் அவர்கள் அதனை வெளியிடவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்து அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

ஜனநாயக கோட்பாட்டுக்குள் செயற்படும் போது தெரியாத்தனமாக அவதூறான காணொளிகள் வெளிவருவதுண்டு. ஏற்பது ஏற்காதது அல்ல இங்குள்ள பிரச்சினை நாம் எமது கருத்தக்களை கூற வேண்டியவர்களுக்கு கூறுவோம். இது நிறுத்த முடியாத பயணமாகத் தெரிகிறது. அதனால் நாம் அந்த சவாலுக்கு முகங்கொடுப்போம், என்றார்.

ஓமந்தையில் ரயிலுடன் லொறி மோதி விபத்து: இருவர் பலி

ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து 3.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை பாதுகாப்பாக விடுவிக்க முயற்சித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த அதிகாரி கொழும்பு தரைப்படை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

சனல் 4 காணொளி : வழமைபோல இலங்கை மறுப்பு

சனல் 4 இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றத்துக்கு ஆதாரமென கூறி நேற்றைய தினம் ஒளிபரப்பிய 13 நிமிடக் காணொளித் தொகுப்பினை இலங்கை இராணுவத் தரப்பு முற்றிலும் பொய்யெனக் கூறி மறுப்புத் தெரிவித்துள்ளது.

சனல் 4வின் குற்றச்சாட்டுக் காணொளிகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டுள்ள காணொளியிற்கு இலங்கை இராணுவத் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டுள்ள குறித்த காணொளியில் இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் கருத்துகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருசுவில் மனிதப் புதைகுழி - பகுப்பாய்வாளர்கள் சாட்சி

யாழ்ப்பாணம் மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது என பீபீசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தது.

புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது ஆடைகளே அவை என்பதை அவர்களின் உறவினர்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணை இன்று வியாழக்கிழமை மீண்டும் நடத்தப்படவுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு 17ம் திகதி, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்து மலசலக் கூட குழியொன்றுக்குள் புதைத்ததாக இலங்கை இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில், ஐந்து இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

130 இலங்கைத் தமிழ் அகதிகள் தடுத்து வைப்பு

130 இலங்கைத் தமிழ் அகதிகள் துனி கிராமப்புர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் அமைந்துள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு கிழமையின் முன்பு இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக துனி கிராமத்தில் உள்ள தளுபுளம்மா லோவா கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என பெத்தபுரம் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் நேற்றையதினம் அகதிகளை அழைத்து அடையாள அட்டை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகதிகளுள் ஒருசிலரிடம் அடையாள அட்டை காணப்பட்டதாகவும் ஒருசிலரிடம் அடையாள அட்டை காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அகதிகளின் முன்னையகால நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 27 மணிநேர நீர்வெட்டு

எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேலியகொட, வத்தளை, ராகம, ஜா-எல, வெலிசர, களனி, பியகம, கிரிபத்கொட மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிவரையான 27 மணித்தியாலங்களுக்கு இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

களனியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்சுத்திகரிப்பு தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாக இந்நீர்வெட்டு செயற்படுத்தப்படவுள்ளது.

நேரில் கண்ட சாட்சியத்துடன் சனல் 4வின் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்களுக்கு ஆதாரமென கூறி சனல் 4 மற்றுமொரு 13 நிமிட காணொளித் தொகுப்பினை ஒளிபரப்பியுள்ளது.

இந்த காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாளர்கள் என இரு யுத்த வீரர்களது நேர்காணல்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

குறித்த காணொளியில் சாட்சியம் எனக் கூறப்பட்ட இருவரது முகங்களும் அடையாளம் காணமுடியாது மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெயர் பெனாண்டோ மற்றும் சுஸ்ரத எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளிடமிருந்தும் சிவில் உயரதிகாரிகளிடமிருந்தும் "முடித்துவிடுங்கள்" என உத்தரவிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளியின் நிறைவில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உரையில் சிறுபகுதியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தன் மகன் யுத்தகுற்ற ஆவணப் படத்தை பாரத்துவிட்டு, தான் இலங்கையர் மற்றும் சிங்களவர் என்று சொல்லுவதற்கு வெட்கப்படுவதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக உரையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியிருந்தார்.

யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரி மாணவர்கள் இருவர் திடீர் மாயம்

யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.

இம் மாணவர்களை கண்டுபிடித்து தருமாறு யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 27 ஜூலை, 2011

யாழில் தங்கச்சங்கிலி அறுப்பு

யாழ். இராமநாதன் நுண்கலைப்பீட மாணவி ஒருவரின் தங்கச் சங்கிலி இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடியபாதம் வீதியில் உள்ள புகையிரதச் சந்தியில் இன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் கற்கும் மாணவிகள் மோட்டார் சைக்கிள்களில் ஆடியபாதம் வீதியின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றதுடன் மாணவியைக் கீழே தள்ளி விழுத்திவிட்டு சென்றுள்ளனர்.

கீழே விழுந்த மாணவியின் தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்குப் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட கிழக்கு சிறார்களின் எதிர்காலத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உதவும் (படம்)

அமெரிக்க பாராளுமன்ற வெளிவிவகார குழு இலங்கை அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவியினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளி கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளிவிவகார குழுவை குறிப்பாக ஹாவர்ட் பெர்மன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறது. சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையில் கொலைக்களம் என்னும் குறுந்தகட்டின் மூலம் இத்தகைய மனமாற்றத்திற்கு அமெரிக்க ஐக்கிய அரசு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதார தடையாக இல்லாமல் போர்குற்றங்களை விசாரிப்பதற்குரிய ஒரு முன்நிபந்தனை அறிவிப்பாகவே விளங்குகிறது. எனினும் அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு இத்தகைய முடிவெடுத்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர்கள் மீது கருணை கொண்டு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கலாம் என்று அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது தனிமனித அரசியலில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவுகளா அல்லது சர்வதேச வலைப்பின்னலின் அடிப்படையிலான வெளிப்பாடா என்பது தெரியவில்லை. ஆயினும் சந்திரிகாவின் அறிவிப்பும் அமெரிக்க பாராளுமன்றத்தின் முடிவும் சற்று ஆறுதல் அளிக்கிறது.

இதிலிருந்து தமிழ் இனத்திற்கு ஆதரவான நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்துள்ளது. குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்து அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பை பெரும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்சியினுள் காணப்பட்ட பிணக்கே தேர்தல் தோல்விக்கு காரணம்

ஐக்கிய தேசிய கட்சியினுள் காணப்பட்ட பிணக்குகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பாரிய விளைவினை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் கட்சிக்குள் இடம்பெற்ற மோதல் காரணாமாக கட்சியினர் தேர்தல் தொடர்பான தெளிவான குறிக்கோளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தவறியமையே தோல்விக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியினுள் காணப்படும் பிணக்குகளை வெளிப்படையாக இன்றி கட்சி ரீதியாக கையாளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இனந்தெரியாதோர் குடிசைகளுக்கு தீ வைப்பு

வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 150 ற்கு மேற்பட்ட குடிசைகளில் 15 குடிசைகள் இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்தகால சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சாத்திகள் பரீட்சை காலத்தில் பஸ் கட்டணம் செலுத்த தேவையில்லை

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையினை பயன்படுத்தி பரீட்சைக் காலகட்டத்தில் ( ஓகஸ்ட் 8ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 3ம் திகதி வரை) தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கோல்டன் கீ மோசடி வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க அனுமதி

கோல்டன் கீ மோசடி வழக்கின் சந்தேக நபர்கள் என கருதப்படும் லலித் கொத்தலாவல உட்பட ஏனைய ஏழு பேருக்கும் பிணை வழங்க கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கும் அதேவேளையில் குறித்த சந்தேகநபர்கள் கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் வழக்கிற்கு சமூகமளிக்காத மற்றுமொரு சந்தேக நபரான சிசிலி கொத்தலாவலவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சக இராணுவத்தினராலேயே தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக தாய் சந்தேகம்

இலங்கையின் வடக்கே இராணுவக் கடமையில் இருந்த போது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மதுசங்க என்ற படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தும்மோதர என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத் தீவு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

தனது மகனின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ஜனாதிபதி முதற்கொண்டு சகல மட்டங்களிலும் தான் முறைப்பாடு செய்தும் பலன் கிட்டவில்லையென உயிரிழந்த சிப்பாயின் தாய் கூறுகிறார்.

உயிரிழந்த சிப்பாயின் உடலில் குறிப்பாக தலை, கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் பெருமளவு அடிகாயங்கள் இருப்பதாகவும் எலும்பு முறிவுகள் காணப்படுவதாகவும் வவுனியா வைத்தியசாலையிலிருந்து கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்ததன் பின்னணியிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

தனது மகன் சக இராணுவத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவே உயிரிழந்த சிப்பாயின் தாய் தெரிவித்துள்ளார்.

உயிராபத்தை ஏற்படுத்தும் காயங்கள் இருந்த நிலையில், ஐந்து மணிநேரம் கழித்தே சிப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சகோதரர் முறையிட்டுள்ளார்.

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என பீபீசியில் செய்தி வெளியாகியுள்ளது.

செவ்வாய், 26 ஜூலை, 2011

வாகரையில் பஸ் விபத்து: 3 கர்ப்பிணிகள் உட்பட 12 ஆசிரியர்கள் படுகாயம்

மட்டக்களப்பு வாகரையில் இருந்து வாழைச்சேனைக்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் ஒன்று வாகரை இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 12 ஆசிரியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பகல் 1.30 அளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாகச் சென்ற பஸ் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் காயமடைந்த 12 ஆசிரியர்களில் 8 பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு ஆசிரியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கவலைக்குரிய விடயம்தான், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நால்வரில் மூவர் பெண் ஆசிரியர்கள் என்பதோடு அவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பில் வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரணில் - லியாம் பொக்ஸை சந்திக்கத் திட்டம்

லண்டன் சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பானது இன்று லண்டனில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது பொதுநலவாய நாடுகளின் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என தெரியவருகிறது.

பொதுநலவாய நாடுகளின் 57ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் வெளிவிவகார தொடர்பு செயலாளர் சாகல ரட்நாயக்க மற்றும் பொருளாலர் செனரத் கப்புகொட்டுவ ஆகியோரும் லண்டன் சென்றுள்ளதோடு, உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

28ம் திகதி வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைத் தலைவர் உபதலைவர் நியமனம் - த.தே.கூ

வெற்றிபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர், உபதலைவர், மேயர், பிரதிமேயர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 28ம் திகதி முன்பதாக அறிவிக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நியமனங்கள் தொடர்பில் கட்சி விரைவில் ஒன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வீண் பிரசாரங்களையும் கோரிக்கைகளையும் கைவிடுத்து வெற்றியீட்டிய உள்ளூராட்சி சபைகளில் தமது சிறந்த பணிகளை வெளிப்படுத்த வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை - பட்டபொல வீதியில் விபத்து - ஒருவர் பலி இருவர் காயம்

அம்பலாங்கொடை - பட்டபொல பகுதிக்கு இடைப்பட்ட வீதியில் தலகஸ்கொட பாலத்துக்கு அருகாமையில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கு ஒன்று மோதூண்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு லட்சம் கப்பம் செலுத்தி மகனை காப்பாற்றிய தந்தை

கல்கிஸ்ஸையில் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தந்தையார் கடத்தல்காரர்களுக்கு கப்பம் கொடுத்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்களுக்கு இவர் 2 லட்சம் கப்பமாக செலுத்தியே தனது மகனை பாதுகாப்பாக மீட்டுவந்ததாக இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கல்கஸ்ஸையில் கடத்தப்பட்ட சிறுவன் இன்று வீடு திரும்பியதும் சிறுவனிடமும் தந்தையாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் கல்கஸ்ஸையில் இனம்தெரியாத நார்களால் வீடு புகுந்து கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்தியாவில் தடுத்துவைப்பு

இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லபை பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரிஸா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததினாலேயேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இவர்களையும் இவர்கள் படகுளையும் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த ரோலர்படகுகள் குறித்து இந்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரசின் வாக்குறுதிகள் மீது விரிவுரையாளர்களுக்கு சந்தேகம்

தாம் முன்னெடுத்துவந்த பணிநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில் அதற்கென அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் நிலவுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார்.

பிரச்சினைகள் இன்றி ஏகமனதாக தாம் இத்தீர்மானத்தை எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், பெரும்பான்மை அடிப்படையில் இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கையில் இறங்குவோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நேரத்தில் வாக்குறுதிகளுடன் விளையாட வேண்டாம் எனவும் எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவும் - முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முடியும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுடன் அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளைப் போன்றே வடக்கு கிழக்கிலும் மாகாண சபைகள் இயங்குவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் பலம் குன்றுவதாகக் கருதக் கூடாது எனவும் பல்வேறு இன சமூகங்கள் ஒன்றிணைவதனால் பலம் மேலும் அதிகரிக்கும் எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நீதவான் கே. பாலகிட்னார்வின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போது அவர் இதனைக் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காது போனமையின் ஊடாக தான் தவறிழைத்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.

பண்டமாற்றம் போன்று அகதிகள் கை மாற்றும் - மலேஷியா அவுஸ்திரேலியா ஒப்பந்தம்

மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று கைச்சாத்தாகியுள்ள தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

மலேஷியா அகதிகளை மிக மோசமாகவே பராமரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

தஞ்சங்கோரிகளாக பிடிபடுவர்கள், ஏற்கனவே ஆட்கள் நிரம்பி வழியும் தடுப்பு முகாம்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அனேகமானோர் குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக கடுமையான தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டி ஏற்படுகின்றது.

ஆனால், ஐநாவின் அகதிகள் தொடர்பான சமவாயத்தின் படி, தமக்குள்ள கடப்பாட்டிலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சிக்கின்றது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தாம் அக்கறை எடுக்காதுள்ள, படகுகளில் வந்து குடியேற முயலும் மக்களை அனுப்புவதற்கான ஒரு ஒதுக்குப்புறமாகவே அவுஸ்திரேலியா மலேஷியாவைப் பயன்படுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

மற்ற நாடுகளில் சென்று குடியேறக் காத்திருக்கின்ற சுமார் 93 பேர் வரையில், அனேகமாக பர்மா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அகதிகள், மலேஷியாவில் தற்போது இடைத் தங்கியிருக்கின்றனர்,

இங்கிருந்து தான் மிகவும் அபாயகரமான, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கிய படகுப் பயணத்தையும் பெரும்பாலானவர்கள் ஆரம்பிக்கின்றனர்.

புதிய உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்பை எட்டுகின்ற அடுத்த 800 பேர் மலேஷியாவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.

பதிலுக்கு செல்லுமிடம் தெரியாது, மலேஷியாவில் தடுப்பு முகாம்களிலுள்ள ஆயிரக்கணக்கானோரில், நாலாயிரம் பேரை மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள இருக்கின்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்பாடு, எவரும் தஞ்சங்கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபடுவோரின் வலையமைப்பையும் முறியடிக்க இது உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தகம் வாசிக்கச் சென்றால் இலவசமாக பால் குடிக்கலாம்

கொழும்பு பொது நூலகத்துக்கு சென்று நாளாந்தம் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இலவச பால் பைக்கற் வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

நாளாந்தம் 200 தொடக்கம் 300 வரையிலான மாணவர்கள் கொழும்பு பொது நூலகத்தில் வந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவர்களில் சிலர் தொலைவில் இருந்து வருபவர்கள் எனவும் கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் நூலகத்துக்குள் நுழையும் போது பால் பைக்கற்றுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இத்திட்டத்துக்கு சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் உதவி புரியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக கையொப்பமிட மறுத்தார் - விஜய்

இலங்கை அரசுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகளின் கையெழுத்து இயக்க ஆவணத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கையொப்பம் இடமறுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் 12.07.2011 அன்று சென்னையில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், விடுதலைச் செல்வன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கூறியதாவது,நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

இலங்கைத் தலைவர் குற்றவாளி என்பதை வலியுறுத்தத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார். விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திங்கள், 25 ஜூலை, 2011

வாழு, வாழவிடு வன்னித் தமிழர்களின் தேர்தல் செய்தி - மனோ

இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்; நீங்களும் வாழுங்கள்; எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலே வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுள்ள தேர்தல் வெற்றிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாரிய அரச வளங்களின் சட்டவிரோத பயன்பாடு, இராணுவ கெடுபிடி, திட்டமிட்ட வன்முறை ஆகியவற்றுக்கு மத்தியில் வடக்கு, கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கூட்டமைப்பின் வெற்றியை முறியடித்து, வடகிழக்கில் கணிசமான வெற்றிகளை குவித்து, தமிழ் மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என உலகத்திற்கு அறிவிப்பதற்கு இந்த அரசாங்கம் பகீரதபிரயத்தனம் செய்தது.

இன்றைய சர்வதேச சூழலிலே அரசாங்கம் முகங்கொடுக்கும் நெருக்கடிகளிலிருந்து இதன் மூலம் தப்பிவிடலாம் என அரசாங்கம் கணக்குபோட்டது. இதற்காகவே முழுமையான அரசாங்க இயந்திரமும் வடக்கு மாகாணத்திலே முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது. இந்த உண்மைகளை தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும், நாங்களும் விளக்கப்படுத்தினோம்.

இப்பின்னணியிலேதான் வடகிழக்கிலே தமிழ் மக்கள் தெளிவான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்கள். தெற்கிலே சிங்கள மக்கள் வாழுகின்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்குத் தேவையென தமிழ் மக்கள் எடுத்து கூறியுள்ளார்கள்.

எங்கள் கிராமங்களும், பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். ஆனால் அபிவிருத்தி தொடர்பிலான முடிவுகளை நீங்கள் கொழும்பிலே இருந்து எடுக்காதீர்கள். அந்த அதிகாரங்களை எங்களிடம் தாருங்கள் என தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கூறியுள்ளார்கள்;. இந்த தீர்ப்பை இலங்கை அரசாங்கம் மதிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது நடத்திக்கொண்டுவரும் பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ள தீர்வுகளை கொண்டுவருவதற்காக பயன்படுத்தவேண்டும்.

இனிமேலும் புலிகள் கேட்பதை கூட்டமைப்பு கேட்கக்கூடாது என்று தேவையற்ற குற்றச்சாட்டை சுமத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். புலிகளின் கோரிக்கைக்கும், இன்றைய கூட்டமைப்பின் கோரிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய தருணம் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும். போரின் இறுதிக்கட்டத்தின் போது தமிழ் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அச்சுறுத்தல்களையும், உயிர் ஆபத்துகளையும் இன்றளவும் சந்தித்துவருகிறார்கள். இந்த பின்புலத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியான ஆதரவை வழங்கி தேர்தல் பிரசாரங்களில் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான எங்களது ஆதரவு எந்தளவிற்கு பயன்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நேர்மையுடன் கூட்டமைப்பு தலைவர்களுடன் இணைந்து பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாங்கள் செயற்பட்டோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மென்மேலும் வெற்றிகளை குவித்து வடக்கிழக்கிலே வாழ்கின்ற மக்களின் தேசிய சக்தியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அச்சமின்றி வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில்

கலர் ஒவ் கறேஞ் நம்பிக்கை நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் இன்று பகல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. கடந்த முதலாம் திகதி தெய்வேந்திர முனையில் இருந்து சிறுவர்களுக்கான புற்று நோய் வைத்தியசாலையை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைப்பயணம் 25வது நாளான இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

கடந்த 25 நாட்களில் சுமார் 640 கிலோ மீற்றர் தூரத்தை கடந்துள்ளதுடன் சுமார் 127 மில்லியன் ரூபா இன்று வரை சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுகிறது. புற்று நோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதறக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவை இலக்காகக் கொண்டே இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான டில்சான், மஹேல ஜெயவர்தன, சங்கக்கார, மத்தியூஸ், குத்துச்சண்டை வீரர் வன்னி ஆராய்ச்சி உட்பட பலரும் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. --

போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவர் உரிய சாட்சியங்களுடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.

சட்டமா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஹெரோயின் வகை போதைப் பொருள் 543 கிரேம் குறித்த நபரிடம் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பால் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இந்த வழங்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மத் சுரசேன மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வாக்குகளின் அடிப்படையில் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தனிநபர் வாக்குகள் அதிகம் பெற்றவர்களே உள்ளூராட்சி சபைகளுக்கான உயர்பதவிகளில் அமர்த்தப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரையில் தனக்கு தனிநபர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவ்வாறான ஆவணம் எதிர்வரும் 27ம் திகதி கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஆவணம் கிடைக்கப்பெற்ற பின்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டோர் வாக்குகளின் அடிப்படையில் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்து 14 நாட்களுள் அவ்வாறு பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாவிட்டால், தேர்தல் ஆணையாளருக்கு வாக்குகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டியில் குடியால் வேலையை இழந்த பொலிஸார் ஆறு பேர்

கண்டியில் வீதி போக்குவரத்து பொலிஸார் 6 ஆறுபேர் கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய பொலிஸ் வீடமைப்பு தொகுதியில் குடித்துவிட்டு அநாகரிகமாக இவர்கள் ஆறு பேரும் நடத்தனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவரால் தலைமைகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டே அடுத்தே அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்களிப்பின் மூலம் சர்வதேச விசாரணை வழிமொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை வழிமொழிந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது எனவும் இது தொடர்பாக நீதியான விசாரணை தேவையெனவும் வற்புறுத்திவரும் மிகமுக்கியமான காலகட்டத்திலே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

சர்வதேச சமூகம் கொடுத்துவரும் இந்நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தல்களில் வென்று தமிழ் மக்கள் தம்பக்கம் என்று காட்டுவதற்காகப் பெரும்பாடுபட்டது.

அரச இயந்திரம் முழுவதையும் களமிறக்கி உள்ளூராட்சித் தேர்தலை ஒரு யுத்தம் போல எதிர்கொண்டது. இலவசங்களை அள்ளி வீசியது. வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்தது. வேட்பாளர்களை என்னை விலைகொடுத்தேனும் வாங்க முயற்சித்தது.

அவர்களை அச்சுறுத்தி தேர்தலிலிருந்து விலக வைக்க முயற்சித்தது. உளவியல் ரீதியான பீதியை ஏற்படுத்திப் பொதுமக்களை வாக்களிப்பில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தது. வாக்காளர்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றித் தாக்குதலும் நடத்தியது.

ஆனால் ஆசை வார்த்தைகளையும் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரும் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

வடக்குக் கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சுயாட்சி வேண்டும் என்பதே தமிழ்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

எந்த சலுகைகளுக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் தங்கள் அரசியல் அபிலாசையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் ஜனநாயகபூர்வமான தீர்வுக்குத் தலை வணங்கி இனிமேலும் காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவையென்பதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வற்புறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கபூரில் இலங்கையரிடம் தண்டப்பணம் அறவீடு

சிங்கப்பூரில் இலங்கை வணிகர் ஒருவரிடம் 5000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிறையிலும் பார்க்க அதிகமாக பொருட்களை கொண்டு செல்வதற்காக இவர் பயணிகள் உதவியாளருக்கு 700 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட நிறையிலும் பார்க்க அதிகமாக பொருட்களை கொண்டு செல்ல 5060 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் குற்றத்தை ஒப்புகொண்டதுடன் இருவருக்கும் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டது.

மரக்கறி விலைகளில் வீழ்ச்சி ஏற்படுமாம்

எதிர்வரும் சில வாரங்களில் மரக்கறியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்காத விதத்தில் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது அரசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு கண்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாம் பயிரிடுவோம் நாட்டை மேம்படுத்துவோம் என்ற திட்டத்தின் மூலமே இந்த நிலை சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர் தியாகம்

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார். ஆனால் தி.மு.கவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விக்குறியாக உள்ளது என்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பாதயத்திரை மேற்கொண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாரட்டுவிழா ஈரோட்டில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கி, உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்பு அவர் உரையாற்றுகையில்:-

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர்தியாகம் செய்தார். ஆனால் திமுகவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விகுறியாக உள்ளது.

தவறு மேல் தவறு செய்து விட்டு டெல்லி திகார் சிறையில் தற்போது உள்ளே இருப்பது யார் என்று உங்களுக்கு நன்கு தெரியும். எத்தனை பொதுக் கூட்டம் போட்டலும் உண்மையை நிச்சயம் மறைக்க முடியாது என்றார் என்றார்.

இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ. விடியல் சேகர்,மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்பாஸ் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கல்பிட்டிய சிங்கள மஹா வித்தியாலத்தின் பின் உள்ள பற்றைக் காட்டுப் பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு நிரூபிப்பு - சிவாஜிலிங்கம்

தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் : -

2004ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவினால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டியதாக பலர் தெரிவித்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லை இப்போதுகூட தமிழ் மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையினை அரசும் சர்வதேச சமூகமும் மதித்து ஏற்றுநடக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக்கூடிய தீர்வு குறித்து மக்களால் ஆணை வழங்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேசப்பட வேண்டும். என்றார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் - அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ்

இலங்கைக்கான உதவிகள் நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வொஷிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை பொறுப்பு கூறாதபட்சத்தில் அபிவிருத்திக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கநேரிடும்.

அவசரகால நடமுறைகளை மீளப்பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூறாதிருப்பதால் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயற்குழு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் எடுத்திருந்தது.

ஒபாமாவின் நிர்வாக்குழுவின் உயரதிகாரியான அமெரிக்க காங்கிரஸ் கொவார்ட் பேர்மன் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்திருந்தார்.

காங்கிரஸ் அரங்கத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்தே இவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் – திமுக

இன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கிடையில் கோவையில் துவங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,000 மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தங்களுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளையும் ஐநா அவையையும் நிர்பந்திக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும் என்று இதற்கு சர்வதேச அழுத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதி முக்கியமான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளதோடு, கச்சத்தீவை மீட்கவும், சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும் சட்டரீதியான முயற்சிகளை இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும்,சமச்சீர் கல்வியில் நீதிமன்றங்களின் உத்தரவை அவமதிக்கும் வகையில் நடக்கும் தமிழக அரசுக்கு கண்டனமும், முல்லை அணையில் தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்க நடவடிக்கை கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களோடு மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட கலைஞருக்குப் பின்னர் திமுகவின் தலைமை ஸ்டாலினுக்கா? அழகிரிக்கா என்ற சர்ச்சைக்கு பொதுக்குழு தற்காலிக ஒய்வு கொடுத்துள்ளது. நேற்று கோவை சென்ற கலைஞரை அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசியதில் கலைஞர் இப்போதைக்கு கட்சி கடும் நெருக்கடிகளை சந்திப்பதால் தலைமை தொடர்பான விவாதங்களை இப்போதைக்கு எவரும் பொதுக்குழுவில் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்பெக்டரம் வழக்குகள்,கைதுகள், ராஜிநாமாக்கள் என கட்சியின் சூழலை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கும் படி கலைஞர் இரு புதல்வர்களிடமும் கேட்டுக் கொண்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கட்சியின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ஆலோசனைக்குழு ஒன்றை அறிவித்திருக்கிறது.

பொதுக்குழு பாராளுமன்ற உறுப்பினரான டி.கே.எஸ், இளங்கோவன் தலைமையிலான அக்குழுவில் ஷா,பிச்சாண்டி, முக்கமது கனி, வி,பி.ராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தமிழகம் முழுக்க கட்சி சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் குறித்து விசாரித்து தலைமைக்கு கொடுக்கும் அறிக்கை தொடர்பாக கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்படுள்ளது.

தமிழ் மக்கள் ஒன்றிணைவே த.தே.கூவின் வெற்றி - சந்திரநேரு சந்திரகாந்தன்

தமிழ் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஓரணியின் கீழ் ஒன்றிணைந்து தமது அபிலாசைகளை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நன்குணர்த்தியுள்ளனர் என தமிழ் தேசியகூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு ஆகிய இரு பிரதேச சபைகளுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெற்று இரு சபைகளையும் கைப்பற்றியுள்ளது எனவே தமிழ்த் தேசியகூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் வெளயிட்டுள்ளார்.

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அரசு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்து அமைச்சர்கள் பட்டாளத்துடன் குடிகொண்டு செயற்பட்டனர் ஆனால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்பதைஎள்ளளவும் மாறாது தமிழ் மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து உணர்த்தியுள்ளனர்.

தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை சின்னாபின்னமாக்கி அதனை உடைத்தெறிய பலவழிகளிலும் அரசும் அதன் அருவருடிகளான தமிழ் அரசியல் வாதிகள்ஊதுகுழலாக செயற்பட்டனர் இவைகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சிறுபொருட்டாக மதித்து செயற்பட்டு தமது நீண்டகால அபிலாசைகளை அடைவதற்கான முதல் படியில் கால் வைத்துள்ளனர்.

எனவே தமிழ் மக்கள் இவ்வாறே எதிர்காலத்தில் ஓரணியில் திரண்டு எமது அபிலாசைகளையும் இலட்சியத்தையும் அடைய ஒற்றுமையாக தடம்புரளாது செயற்படவேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக தடமபுரண்டு செயற்படுகின்ற தமிழ் அரசியல் வாதிகளே இனியாவது யதார்த்தத்தை உணர்ந்த தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகசெயற்பட முன்வரவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்ட தமிழ் பிரதேச சபைகள் அனைத்தையும் கைப்பற்றி நாங்கள் தமிழர்கள் என தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த என் அன்பான இனிய தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்

தேர்தல் தொடர்பில் அரசின் மீது குற்றம் சொல்கிறது ஐ.தே.க

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்றைய தினம் சுதந்நதிரமாக நடைபெறவில்லை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், தேசிய ஊடகம் மட்டுமல்ல தேசிய வளங்கள் மற்றும் சில தேசிய நிறுவனங்கள் கூட இலங்கை அரசின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, வராலாற்றில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தீங்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகம் கருதி தமது கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஐக்கிய தேசிய கட்சி நன்றிகளை தெரிவித்துள்ளது.

ஏழு மாதக் குழந்தையை கிணற்றில்வீசி கொலை செய்த தாய் கைது (படம்)

ஏழு மாத கைக்குழந்தையை கிணற்றுள் வீசி படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தாயை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரில் நடைபெற்றுள்ளது.

காத்தாதன்குடி கைறாத் வீதியிலுள்ள வீடொன்றில் கிணற்றிலிருந்தே கைக்குழந்தையின் சடலம் கைப்hற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தாயே குழந்தையை கிணற்றில்வீசி படுகொலை செய்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனனர்.குறித்த தாய்க்கு மேலும் 4வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளதும் குறிப்படத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி: 4 பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, திருமலை பிரதான வீதியிலுள்ள முறக்கொட்டாஞ்சேனையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த கென்டைனர் ரக லொறி முறக்கொட்டாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகிச் சென்ற நிலையில், அப்பகுதியில் சைக்கிள்களில் பயணித்து கொண்டிருந்த மேசன் தொழிலாளர்கள் மீது மோதியது.

வந்தாறுமூலையிலிருந்து கல்குடா நோக்கி தொழிலுக்காக சென்ற மேசன்தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்குண்டவர்கள் ஆவார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வந்தாறுமுலை, லேக்கவுஸ் வீதியை சேர்ந்த கனகசபை(47வயது) அவரது மகன் ஜீவராஜ்(18வயது), ரி.சுவேந்திரன்(32வயது), ரி.சதீஸ்(30வயது) ஆகியோரே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியும் உதவியாளர்களும் ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 23 ஜூலை, 2011

சிவகங்கையில் புலியா?

இந்திய சிவகங்கை அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடுருவியிருக்கலாம், என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட 5 இடங்களில் அகதிகள் முகாம் செயல்படுகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இவர்களது நடவடிக்கைகளை உள்ளூர் பொலிஸார் மட்டுமின்றி, கியூ பிரிவு பொலிஸாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்பவர்கள் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால் அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்று பல்வேறு விபரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

முதலாவது தேர்தல் முடிவு - தலவாக்கலை லிந்துல நகர சபை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் - 2011 மாவட்டம் நுவரெலிய சபை தலவாக்கலை லிந்துல நகர சபைகட்சிவாக்குகள்ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1988 7 ஐக்கிய தேசிய கட்சி 1002 2 ஜனநாயக மக்கள் முன்னணி 75 0 மக்கள் விடுதலை முன்னணி 6 0

இந்தியாவிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி இன்றி திருப்பம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இராணுவ கல்லூரியின் தமிழர் ஆதரவாளர் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இலங்கை இராணுவ வீரர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு பஸ் மூலம் செல்லும் இவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு செல்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஆதவுக்குழுக்கள் நேற்றைய தினம் இந்த பயிற்சி முகாமுக்கு எதிராக பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

முல்லைத்தீவில் 58 சதவீத வாக்குகள் பதிவு

முல்லைத்தீவில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தலைவரை காப்பாற்ற இந்தியா முயற்சி

ஈழத் தமிழர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அவர் உரையாற்றுகையில் :-

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அக்குழு இலங்கைத் தலைவரை போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் இலங்கைத் தலைவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

இது குறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இலங்கைத் தலைவரை காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என்றார்.

வாக்கெடுப்பு நிறைவு - முல்லைத்தீவில் 65 % வாக்களிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புகள் 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்ஸில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இம்முறை மாவட்ட செயலகத்தியே வாக்கெடுப்புகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில் ஊர்வாகத்துறை வாக்குபெட்டிகள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பஸ்ஸில் மாவட்ட செயலகத்துக்கு செல்லவுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவில் 65 சதவிகித வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சுமூகமான முறையில் நிறைவு

எதுவித பாரிய அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் சுமூகமான முறையில் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நிறைவு - கிளிநொச்சியில் 65 % வாக்களிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புகள் 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்ஸில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இம்முறை மாவட்ட செயலகத்தியே வாக்கெடுப்புகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில் ஊர்வாகத்துறை வாக்குபெட்டிகள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பஸ்ஸில் மாவட்ட செயலகத்துக்கு செல்லவுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவில் 65 சதவிகித வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவு

யாழ் மாவட்டத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

யாழில் ஒரு உள்ளூராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிவு

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்புகளில் ஒரு உள்ளூராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவுகள் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எதிர்ப்பு

இலங்கை இராணுவ வீரர்களுக்கு குன்னூர இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெரியார் தி.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் குன்னூரில் நேற்றுமாலை போராட்டம் நடத்தினர்.

இதனால் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

குன்னூர் வெலிங்டன் இராணுவ மையம் முன்பு நாம் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுதது பொலிஸாருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் வடபகுதியின் உண்மை நிலைவரத்தை பார்வையிடுவதற்காக அங்கு விஜயம் செய்யுமாறு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எமது உயர்ஸ்தானிகர் எனது அழைப்பை அனுப்பினார். அவர் தயாரில்லை என்றால் அல்லது அவருக்குள்ள வேலைப்பளு அதிகமிருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கமுடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைப்பது குறித்து அவர் மத்திய அரசாங்கத்துடன் கதைக்கமுடியும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயார். தமிழ்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவர்கள் பார்வையிடமுடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்

ஆளும்கட்சி ஆதரவார்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் - சந்திரநேரு சந்திரகாந்தன்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விநாயகபுரம் வாக்கு நிலையத்தின் முன் நின்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மக்களை அச்சுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், அது தொடர்பில் தான் பொலிஸாரிடம் முறையிட்ட போதும் பொலிஸார் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் குறித்து தமது கட்சி உறுப்பினர்குக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 12 மணி வரையிலான தேர்தல் நிலவரம் (குரல்பதிவு)

வடக்கில் நண்பகல் 12 மணி வரையிலான தேர்தல் நிலவரங்கள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அறிய தருகிறார் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் குறித்த முழு நிலவரங்களையும் தெரிந்து கொள்ள காணொளியினை பார்க்கவும்.

யாழில் இதுவரை 22.4 சதவீத வாக்குப்பதிவு

தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு 12.45 மணிவரையில் யாழ் மாவட்டத்தில் 22.4 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 52 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவகப்பகுதிகளில் 30 தொடக்கம் 40 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பம்

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமானது. இவ்வாக்குப் பதிவுகள் மாலை நான்கு மணிக்கு நிறைவுபெறும். ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

நேரகாலத் தோடு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

65 உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெறும் தேர்தலில் 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் 875 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

5619 பேர் இந்த 65 சபைகளிலும் போட்டியிடுகின்றனர். 20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கு கடந்த ஆண்டு (06.01.2010) தேர்தல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள், பெப்ரல், சி.எம்.சி.வி. போன்ற அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டு நீதவான் இலங்கையில் மரணம்

பிரான்ஸ் நாட்டு நீதவான் ஒருவர் தங்காலை கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாவிற்காக இலங்கை வந்திருந்த மேற்படி நீதவான் கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையில் அடித்துச் செல்லப்பட்டே இவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த மேற்படி பிரான்ஸ் நாட்டு நீதவான் தன் குடும்பத்தாருடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயத்திலேயே அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிசொச்சி மக்களின் வாக்களர் அட்டைகளை எவரோ பெற்றுச் செல்கின்றனர் - கபே

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் ராமநாதபுரம் மலையாளபுரம் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்களின் வாக்கட்டகளை சிலர் வந்து வாங்கிச்செல்வதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதும் அவ்விடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பியதாகவும் அவ்விடத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறையில் ஒரு உயிரிழப்பு - பவ்ரல்

தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவத்தில் முதலாவது உயிரிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு சற்றுமுன்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அநுராதபுர ஐக்கிய மக்கள் சுதர்திர முன்னணி கட்யிசின் ஆதரவாளர்களுக்குள் இடம்பெற்ற மோதலின் போதே ஒருவர் உயிரிழந்துட்டதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவு மக்கள் வாக்களிக்க ஆர்வம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தற்போதே நூறு சதவீத வாக்காளர்களும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், நெடுந்தீவு பகுதியில் நூறுசதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தின் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வருவதாக யாழ். உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

யாழ். கிளிநொச்சியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றவும்

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் ஒட்டப்பட்டுள்ள சகலவிதமான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்தல் அதிகாரிகள் அவற்றை அகற்ற தவறும் பட்சத்தில் பொலிசாரை பயன்படுத்தி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெடிப்புச் சம்பவம்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் மத்திய பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதம மந்திரியின் அலுவலகம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் சில கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

459 வாக்கு பெட்டிகளும் உரிய இடங்களை சென்றடைந்தன

தேர்தலுக்காக யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் உரிய இடங்களை சென்றடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலை அனுப்பி வைக்கப்பட்ட 459 வாக்குப்பெட்டிகள் உரிய இடங்களை 12.55 மணியளவில் முழுமையாக சென்றடைந்துள்ளன என அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை தீவகப்பகுதிகள் கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குபெட்டிகள் வாக்களிப்பின் பின் விமானப்படையினரின் உதவியுடன் கெலிகொப்டர் மூலம் வாக்கு எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி ரயில் நிலையத்தில் தீ

கண்டி ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தீப்பற்றிக் கொண்டுள்ளது. தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயற்சி செய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வாக்கு நிலையங்களை சென்றடைந்தது வாக்கு பெட்டிகள்

கிளிநொச்சில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான தேரதல் வாக்கெடுப்புகள் 35 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

பச்சிளப்பள்ளி, பூநகரி, மற்றும் கரச்சி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலே நடைபெறவுள்ளது. இம்முறை அனைத்து தேர்தல் செயல்பாடுகளும் கிளிநொச்சி மாவட்டத்திலேயெ முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பை தனியார் பங்களிப்புடன் அழகுபடுத்த திட்டம்

யுத்தம் மற்றும் சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தை தனியார்துறையினரின் பங்களப்புடன் பாரியளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் நேற்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மேயர் சிவகீதா தலைமையில் நடைபெற்றது. பிரதிமேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகர ஆணையாளர் உட்படபல உயர் அதிகாரிகளும் தனியார் துறையினரும் கலந்து கொண்டனர்.

வீதி அபிவிருத்தி நகரை அழகுபடுத்தல் உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகள் இத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

வட மாகாணத்திற்கு பல்வேறு கடன் திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி

யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து வட மாகாணத்திற்கு பல்வேறு கடன் திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரையில் சுமார் 4.6 பில்லியன் ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பல்வேறு வர்த்தக திட்டங்களுக்காகவும் இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதக நிறசுவையூட்டியினை பயன்படித்தினால் கடும் நடவடிக்கை

உடல் நிலைக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய சில நிறச்சுவையூட்டிகளை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உணவுக் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறச்சுவையூட்டிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை அடுத்தே கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளை அரிசியினை சிகப்பு நிற அரிசியாக உருமாற்ற உடலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்கை நிறச்சுவையூட்டிகளை ஒரு சில உணவு விடுதியினர் பயன்படுத்துவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

வட மாகாணத்தில் 96 சதவீதம் தபால் மூல வாக்களிப்பு

வட மாகாணத்தில் நேற்று மாலை வரை 96 சதவீதம் தபால் மூல வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டங்களில் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் 20 உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. இதற்கான தபால் மூலவாக்களிப்பு இந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 4 ஆயிரத்து 902 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 264 பேரும் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கு 30 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று மாலை வரை யாழ்.மாவட்டத்தில் 4 ஆயிரத்து 540 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 251 பேரும், துணுக்காய் பிரதேச சபைக்கு சகலரும் தமது தபால் மூல வாக்களிப்பை அளித்துள்ளனர்.

பிலிபைன்ஸிக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை

பிலிபைன்ஸிக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக பிலிபைன்ஸின் சமூக விமான சேவைகள் சபையின் பணிப்பாளர் கார்மெலோ ஆர்சிலா தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் கீழ் திறந்த வான் கொள்கை பின்பற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எந்த விமான சேவையையும் ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையாம்

வடக்கில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பதாகைகள் சில இன்னமும் அகற்றப்படாது இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் கடந்த 20ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் நிமித்தம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை நேற்று மாலை 4 மணிக்கு முன்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் 30 யுத்த குற்றவாளிகள் தலைமறைவு

யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றவாளிகளான இலங்கையர்கள் இருவர் உட்பட முப்பது பேர் கனடாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக பிரதமர் ஸ்டீபன் ஹர்பர் தெரிவித்துள்ளார்.

புஞ்சா என அழைக்கப்படும் ஜெரோம் பெனாண்டோ மற்றும் அசோகா குலத்துங்க இளந்தரிதேவகே ஆகிய இரண்டு இலங்கையர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் இணையத்தில் சந்தேக நபர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பினை நிலை நிறுத்துவதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள வயல்வெளியில் உள்ள வேப்பை மரம் ஒன்றிலேயே இந்த சடலத்தை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

செட்டிபாளையம் தெற்கு பிரதான வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை யோகேஸ்வரன் (21வயது) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து அந்த திருமணம் தொடர்பில் ஏற்பட்ட குடும்பத்தகராரு காரணமாகவே இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் இவர் தன்னைத்தானே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் குணசிங்கம் சுகுணனின் வைத்திய பரிசோதனையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு மூன்று வருடமாக பதவி உயர்வு இல்லை

ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என அகில இலங்கை ஐக்கிய ஆசிரிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆசிரியர் சேவையில் வகுப்பு 3 இல் இருந்து வகுப்பு 2 வரையும், 2ஐஐ இல் இருந்து வகுப்பு 2ஐ வரையும் வகுப்பு ஒன்றின் பதவி உயர்வுகளும் வழங்கப்பட வில்லை எனத் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகரதேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவயலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மனிதை உரிமை மீறல்கள் தொடர்பில் 11,732 முறைப்பாடுகள்

மனிதை உரிமை மீறல்கள் தொடர்பில் 11,732 முறைப்பாடுகள் உள்ளதாக ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அம்முறைபாடுகளில் 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவற்றுள் 2691 பொலிஸாருக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்வாகசேவை பயிற்சியாளர்களை தேர்தல் கடமையில் இருந்து நிறுத்துக

யாழ்.குடநாட்டில் அரச நிர்வாகசேவையில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் 30 பேர் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை உடனடியாக தேர்தல் கடமைகளில் இருந்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் மு.அ.கருணாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர்களான சுரேஷ்பிரேம சந்திரன், சரவணபவன்,அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் வேட்பாளர்களான சிவாஜிலிங்கம் உட்பட பலரும், ஈ.பி.டி.பி கட்சி சார்பில் சட்டத்தரணி ரங்கன் மற்றும் ஐ.ம.சு.கூ , ஐ.தே.க வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

யாழில் தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை

யாழில் நீதியான நேர்மையான தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முறைப்படுகள் செய்த போது அவை எவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அதற்கான காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பி கட்சியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் இராமலிங்ம் சந்திரசேகரன் நியாயமான தேர்தல் நடைபெறாவிட்டால் ஜே.வி.பி செய்யும் சேவைகளில் இருந்து விலகிக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து சுவரொட்டிகளும் 4 மணிக்கு முன் அகற்றப்பட வேண்டும்

அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் நிமித்தம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இலங்கையருக்கு சீதனக் கொடுமை: கணவர் மற்றும் மாமனார் கைது

இலங்கை அகதியான மனைவிடம் சீதனம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மதுரை வைத்தியசாலை பணியாளரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மதுரை, ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராம்கணேஷ் (30). இவரது மனைவி புஷ்பா (29). இலங்கை அகதியான இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில்:-

எனக்கும், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் வெங்கட்ராஜ் (56) என்பவரது மகன் ராம் கணேசுக்கும் (30) கடந்த 6.5.2005 அன்று திருமணம் நடந்தது. எனது பெற்றோர் தரப்பில் 8 பவுன் நகைகள் மற்றும் இந்திய ரூபா 2 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தனர்.

ராம் கணேஷ் மதுரை பெரிய வைத்தியசாலையில் உள்ள சத்திரசிகிச்சை பிரிவின் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே அவரது அத்தையான லட்சுமியின் மகள் ராஜகுமாரியை திருமணம் செய்ய முடிவு செய்தார்களாம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை.

ராஜகுமாரிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கும் எனது கணவருக்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. இதனால் என் கணவர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

இதற்கிடையே எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனை என் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு லெபனான் நாட்டுக்கு நான் வேலைக்கு சென்றேன்.

ராஜகுமாரியை என் கணவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க எனது சம்பளத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்டதால், நான் இந்திய ரூபா 2 லட்சத்து 30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

தற்போது நான் திரும்பி வந்த நிலையில் என்னிடம் இருந்த இந்திய ரூபா 75 ஆயிரத்தையும் அவர் வாங்கிக்கொண்டார்.

ஆனால் என் கணவரும், அவரது தந்தை மற்றும் தஞ்சையில் வசிக்கும் ராஜகுமாரி, அவரது தாயார் லட்சுமி, பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.

நான் வீட்டைவிட்டு வெளியேறினால்தான் ராஜகுமாரிக்கும், என் கணவருக்கும் திருமணம் செய்ய முடியும் என்று நினைத்து இப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், ராம்கணேஷ், அவரது தந்தை வெங்கட்ராஜ் ஆகியோரை கைது செய்து, மதுரை 2-வது ஜுடிசியல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை எதிர்வரும் 2ம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதவான் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

கொட்டாவ - காலி அதிவேக வீதியில் பயணிக்க 300 ரூபா கட்டணம்

விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ - காலி அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு 300 ரூபா கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி பின்னதுவ வரையான வீதி எதிர்வரும் மாதத்தில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும் ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் கடமையில் 25000 பொலிஸார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பாதுகாப்புச் சேவைக்கு 25 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கடமைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

இனிவரும் இரண்டு நாட்களில் தேர்தல் சட்டங்களை மீறி எவரேனும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 114பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 78 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் சட்டங்களை மீறி பிரச்சாரத்துக்கு பயன்படுத்தபட்ட பஸ் மற்றும் வான் உட்பட 25 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் 13 வயது சிறுமி மரணம்

நிக்கவெரட்டிய அம்பன்பொல பிரதான வீதியில் டக்டர் வண்டி ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி விபத்து இடம்பெற்றவுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என மஹாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இன்று மஹாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

அனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு

எண்ணற்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல மென்பொருட்களும் பல இணையதளங்களும் உதவுகின்றன.

இருப்பினும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றன.

TUBGET தளம் அவ்வாறில்லாமல் YOUTUBE, MEGA VIDEO, VIMEO, META CAFE என 27க்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய உதவுவதுடன் வீடியோக்களை விரும்பிய வடிவிலும், விரும்பிய பகுதியினையும் தெரிவு செய்து தரவிறக்கம் செய்ய உதவுகிறது.

நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய URL ஐ கொப்பி செய்து இந்த தளத்தில் உள்ள ENTER THE VIDEO URL என்பதன் கீழ் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து START என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்யும் வீடியோ TUBGET தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும். பதிவிறக்கம் முடிந்ததும் தோன்றும் புதிய பக்கத்தில் நீங்கள் விரும்பிய வடிவத்தினையும், தேவையான பகுதியையும் தெரிவு செய்து உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யலாம்.

இணையதள முகவரி

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்

எண்ணற்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல மென்பொருட்களும் பல இணையதளங்களும் உதவுகின்றன.

இருப்பினும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றன.

TUBGET தளம் அவ்வாறில்லாமல் YOUTUBE, MEGA VIDEO, VIMEO, META CAFE என 27க்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய உதவுவதுடன் வீடியோக்களை விரும்பிய வடிவிலும், விரும்பிய பகுதியினையும் தெரிவு செய்து தரவிறக்கம் செய்ய உதவுகிறது.

நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய URL ஐ கொப்பி செய்து இந்த தளத்தில் உள்ள ENTER THE VIDEO URL என்பதன் கீழ் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து START என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்யும் வீடியோ TUBGET தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும். பதிவிறக்கம் முடிந்ததும் தோன்றும் புதிய பக்கத்தில் நீங்கள் விரும்பிய வடிவத்தினையும், தேவையான பகுதியையும் தெரிவு செய்து உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யலாம்.

இணையதள முகவரி

விஜய்க்கு புதிய தோற்றம்: இயக்குனர் ஷங்கர் எடுத்த முடிவு

”த்ரீ இடியட்ஸ்” இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ”நண்பன்” படத்தில் விஜய் வித்தியாசமான தோற்றத்தை காட்டி நடித்துள்ளார்.

இயக்குனர் ராஜா இயக்கும் ”வேலாயுதம்” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர், ”நண்பன்” படத்துக்காக புது மாதிரி சிகை அலங்காரத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடிவெடுத்தார். ஆனால், ”வேலாயுதம்” படத்திலும் விஜய் நடிக்கிறார் என்பதால் பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு சிவாஜி, எந்திரன் படங்களில் பல வித தோற்றத்தை போட்டு அழகு பார்த்தவர் தான் இயக்குனர் ஷங்கர். ”நண்பன்” படத்தில், இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் தமிழில் நடிக்கிறார் என்பதால் விஜய்யை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார் அவர்.

விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரையும் கல்லூரி இளசுகளின் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார் என்கிறது பட வட்டாரம்.

தமன்னாவின் ரகசிய திட்டம்

தென்னிந்திய பட உலகில் முன்னணி நாயகர்களுடன் இலியானா, காஜல் அகர்வால், சார்மி, டாப்சீ ஆகிய நாயகிகள் நடிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் பாலிவுட் நாயகர்களுடன் இணைய சென்றுவிடுவதை கவனித்த தமன்னாவும் இந்தி பட வாய்ப்புகளுக்காக ரகசிய திட்டத்தோடு காய் நகர்த்தி வருகிறார்.

மும்பையில் படித்து, வளர்ந்த தமன்னா ஆரம்பத்தில் இந்தி படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு, கொலிவுட் வந்தார். அடுத்தடுத்து, வாய்ப்புகள் குவிய தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

முன்னணி நாயகிகள் பட்டியலில் தமன்னா இடம் பிடித்தார். தற்போது, பாலிவுட் கனவில் மூழ்கி திளைக்கிறார். தெலுங்கு வெற்றி படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நாயகன் அஜய் தேவ்கன் உடன் தமன்னா இணைய போவதாக பட வட்டாரம் தெரிவிக்கிறது.

தனது பால் வெள்ளை பளிச் அழகும், பளீர் சிரிப்பழகும் பாலிவுட்டின் முன்னணி நாயகர்களை ஈர்க்கும் என உறுதியாக தமன்னா நம்புகிறாராம்.

சினிமாவை விட்டு விலகிவிட்டேனா?: நயன்தாரா மறுப்பு

தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்துடன் சினிமாவை விட்டு விடை பெறுவதாக வந்த செய்தியை நடிகை நயன்தாரா மறுத்துள்ளார்.

ரமலத்துக்கும், பிரபுதேவாவுக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதால், விரைவில் நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், கடைசியாக தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்தில் சீதா தேவி கதாபாத்திரத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் செய்திகள் வந்தது.

ஸ்ரீராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் மலர் தூவி நயன்தாராவுக்கு விடை கொடுத்தனர். அப்போது கண்ணீர் மல்க அனைவரிடமிருந்து விடைபெற்றார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகப்போவதாக நான் என்றுமே சொன்னதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவை விட்டு நான் விலகுவதாக வந்த செய்தி உண்மையில்லை. ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் அழுததற்கான காரணமே வேறு. அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் என்னை மீறி அழுகை வந்துவிட்டது. மற்றொரு பக்கம் படக்குழுவினர் பாட்டு பாடி, என்மீது பூக்கள் எல்லாம் தூவினர். இதுவும் என் அழுகைக்கு காரணம்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நான் நடித்த தமிழ், கன்னடம், மலையாள படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. என்னுடைய மார்க்கெட்டும் நன்றாக இருக்கிறது. அப்படி இருக்கையில், சினிமாவை விட்டு நான் விலகப்போவதாக யார் சொன்னது. அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இந்த அறிவிப்பிற்கு பிரபுதேவா என்ன சொல்லப் போகிறார்?

கூகுளில் முழுவதுமாக புத்தகத்தை தரவிறக்கம் செய்வதற்கு (வீடியோ இணைப்பு)

கூகுள் வழங்கும் கூகுள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

கூகுள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER என்ற மென்பொருள் உதவுகிறது.

ANDROID மற்றும் IOS இயக்க முறைகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டதை வாசிக்க முடியும்.

இது விண்டோஸ் மற்றும் 2000, விஸ்டா, XP ஆகிய இயங்கு தளங்களில் செயற்படும்.

இந்த மென்பொருளை பயன்படித்தி கூகுள் புக் தளத்தில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்க சுட்டி

கரண் தான் எனக்கு பொருத்தமான ஜோடி: நடிகை அஞ்சலி

நடிகர் கரண் தான் எனக்கு பொருத்தமான ஜோடி என்றும், அவருக்கும், எனக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்தார்.

கரண் - அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கம் படம் ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்”.

நாகர்கோவில் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கியிருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது நடிகை அஞ்சலி கூறுகையில், ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு மூத்த நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை.

எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார். எனக்கும், அவருக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ”கொலைகாரா” என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணி, படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் கரண் பேசும் போது, ”தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும் என்றார்.

உங்களது கணணியின் இணைய வேகத்தை அறிந்து கொள்வதற்கு

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணணியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும்.

நாம் இணையத்தில் இருந்து எதையும் தரவிறக்கம் செய்தாலோ அல்லது நாம் இணையத்தில் பதிவேற்றம் செய்தாலோ அனைத்தும் நம் கணணியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆகவே நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம்.

1. Speed Test: கணணியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

Speed Test

2. Bandwidth Place: இந்த தளத்தில் தரவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளமாகும்.

Bandwidth Place

3. Mcafee Speed Test: பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணணியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

Mcafee Speed Test

4. Auditmypc Internet Speed Test: இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

Auditmypc Internet Speed Test

எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி

பெண்களின் பேச்சை பெரும்பாலான நேரம் புரிந்து கொள்ள முடியாது. நண்பன் என்று நம்பிக் கொண்டிருப்பவர் பக்கத்திலேயே குழி வெட்டிக் கொண்டிருப்பார்.

இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு எச்சரிக்கும் மூக்கு கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

மூளை மற்றும் நரம்புகளின் ஒருவித பாதிப்பு ஆட்டிசம் எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பேச முடியாமல், பழக முடியாமல் சிரமப்படுவார்கள். சமூகத்தில் இருந்து சற்று விலகியே இருப்பார்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேச வருகிறார்கள் என்பதை அவர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநில தொழில்நுட்ப கல்லூரி(எம்.ஐ.டி) தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தற்பொழுது அவர்கள் எக்ஸ்ரே மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகின்றனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: நமது மூளை நன்றாக செயல்படும் பட்சத்தில் அடுத்தவர்களின் முக பாவத்தை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இவ்வாறு உணர முடியாது. அவர்களுக்கு வசதியாக மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகிறோம். இதில் அரிசி அளவே உள்ள கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இது பாக்கெட் அளவு கணணியுடன்(பிராசசர்) இணைக்கப்பட்டிருக்கும்.

மனிதர்களின் 24 விதமான முக பாவங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒருவருடன் பேசுகிறோம் என்றால் இந்த எக்ஸ்ரே கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். அவரது முகத்தில் ஏற்படும் சிறு அசைவுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை கண்ணாடியில் இருக்கும் கமெரா கண்காணித்துக் கொண்டே இருக்கும். நேரில் எதிராளி சிரித்தாலும்கூட அவரது முகத்தில் ஏற்படும் துல்லிய அசைவுகளை வைத்து அவரது மனோபாவத்தை பிராசசர் கணக்கிடும்.

அவரிடம் பாசிட்டிவ் உணர்வுகள், முகபாவங்கள் தென்பட்டால் கண்ணாடியின் உள் பகுதியில் இருக்கும் சிக்னலில் பச்சை விளக்கு எரியும். தொடர்ந்து பேசலாம், ஆபத்தில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

அவர் நமக்கு ஆதரவானவர் அல்ல என்றாலோ, இனிக்க இனிக்க பேசி வேட்டு வைக்கிறார் என்றோ தெரியவந்தால் இந்த சிக்னலில் மஞ்சள், சிவப்பு விளக்கு எரியும். உஷாராகி பேச்சை நிறுத்திக் கொள்ளலாம்.

எதிராளி எந்த நோக்கத்தில் பேசுகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். "உஷாரா பேசு" என்று பிரத்யேக ஸ்பீக்கர் மூலம் காதுக்குள் எச்சரிக்குமாறும் வடிவமைத்துக் கொள்ளலாம்.

கண்ணாடி வடிவமைப்பு பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தற்போதைய அளவில் கண்ணாடி 64 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுகிறது. உரிய மாற்றங்கள் செய்த பிறகு கண்ணாடி அறிமுகமாகும்.

திங்கள், 18 ஜூலை, 2011

ஏழு வகை அரிய எலிகள் கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கண்ணில் அகப்படாத புதிய வகை எலிகள் பிலிப்பைன்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழக விலங்கியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஸ்டீபன் தலைமையில் பிலிப்பைன்சின் லூசான் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குள்ள காடுகளை சுற்றி பல்வேறு உயிரினங்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருகின்றனர். இவர்களது ஆய்வில் 7 அரிய வகை எலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற எலிகளைவிட இவற்றின் ஜீன்கள் வித்தியாசமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில்,"இந்த எலிகள் பெரும்பாலும் காடுகளில் வாழ்பவை. ஜீனஸ் அபோமிஸ் என்பது இவற்றின் விலங்கியல் பெயர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவை தோன்றியுள்ளன" என்றனர்.

இயற்கைச்சூழல் பாதுகாக்கப்படும் இடங்களில் இத்தகைய உயிரினங்கள் அதிகம் இருக்கும் என்பதால் பிலிப்பைன்சில் மேலும் பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அங்கு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரியாவின் திருப்பங்கள்

'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா, அதனையடுத்து செல்வராகவனின் இயக்கத்தில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தார்.

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா சில காட்சிகளில் மட்டும் நடித்தார்.

சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

தமிழில் கைவசம் இருந்த 'மங்காத்தா' விற்குப் பிறகு வேறு படங்கள் ஏதுமில்லாமல் இருந்த ஆண்ட்ரியா தற்போது 'திருப்பங்கள்' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில் நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சுர்வின் என்ற மும்பை அழகி நடிக்கிறார்.

குழந்தை நட்சத்திரம் தாரணி, இந்தி நடிகர் கவுதம் குரூப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அமிதாப்பச்சன்-மோகன்லால் நடித்த 'காந்தகார்' என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்தவர் கவுதம் குரூப் "திருப்பங்கள்'" படத்திலும் வில்லனாகவே நடிக்கிறார்.

நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார்.

நிமிடத்துக்கு நிமிடம் திருப்பங்களும், சஸ்பென்ஸ் காட்சிகளும் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது.

கும்கியில் அறிமுகமாகும் மலையாள நடிகை

மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகைகள் எல்லாருமே மலையாள நடிகைகள் தான். அந்த வரிசையில் புதிதாக இடம் பிடிக்கிறார் லட்சுமி மேனன்.

பிரபு சாலமன் தனது ”கும்கி” படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவரை அறிமுகப்படுத்துகிறார். 15 வயதே நிரம்பியுள்ள லட்சுமி மேனன் கொச்சியைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். அதற்கு மேல் எப்போதாவது நேரம் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம், இப்போதைக்கு கோடம்பாக்கத்துக்கு கலைச்சேவை தான் முக்கியம் என குடும்பத்தினர் முடிவெடுத்ததால், இங்கே வந்திருக்கிறார்.

இதற்கு முன் மலையாளத்தில் ஒரே ஒரு படம் நடித்துள்ளார். அந்தப் படத்தை இயக்கியவர் வினயன். ஆனால் சின்ன வேடம் என்பதால் லட்சுமி மேனன் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அந்த ஒரே படம் தன்னை, தென்னகத்தின் சினிமா தலைநகரமான சென்னை வரை கொண்டு வந்துவிட்டதை நினைத்து வினயனுக்கு நன்றி சொல்கிறாராம் லட்சுமி.

சவாலான ரோலில் நடிக்க விரும்பும் ஜனனி ஐயர்

இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பெண் பொலிஸ் பேபிமாவாக ஜனனி அய்யர் நடித்துள்ளார், இதற்காக கோலிவுட்டே ஜனனியை உச்சி மோந்து பாராட்டியதாம்.

த்ரிஷா மாதிரி தமிழ் பேசி நடிக்கும் நடிகையாக கோலிவுட்டில் வலம் வருவதை எண்ணி பெருமையடைகிறாராம் ஜனனி.

"அவன் இவன்" படத்தில் என்னோட கதாபாத்திரத்தை பற்றி மட்டும் இயக்குனர் பாலா சார் சொல்லியிருக்கிறார்.

என் நடிப்பு பற்றி மனம் விட்டு அவர் பாராட்டியுள்ளார். மற்றபடி, அவர் எனக்கு அறிவுரை எதுவும் சொன்னதில்லை.

நான் நடிக்கும் இரண்டாவது படத்தில் வேறு பரிமாணத்தில் என்னுடைய நடிப்பை பார்க்கலாம்.

சவாலான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கேன் என்று தெரிவித்துள்ளார் ஜனனி ஐயர்.

”அவன் இவன்” படத்தை பார்த்து தனது நடிப்பை பாராட்டியவர்களுக்கு ஜனனி மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஏ.வி.எம்மின் முதல் படம்

கோலிவுட்டில் படத் தயாரிப்பில் சரித்திர சாதனை புரிந்து வரும் படக் கொம்பெனியான ஏ.வி.எம் தனது 175-வது படைப்பாக 'முதல் இடம்'  படத்தை எடுத்துள்ளது.

இதில் ”மைனா” பட நாயகன் வித்தார்த், கேரளா நாயகி கவிதா நாயர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் சுந்தர்.சி. யின் உதவியாளர் குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக செல்லத்துரை பணியாற்றியுள்ளார். படத்தின் நாயகி தமிழுக்கு புதுசாகவும், நடிப்பு திறமையை காட்டக்கூடியவராக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தோம்.

கவிதா நாயரை நாயகியாக தேர்வு செய்தோம். பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் தஞ்சாவூரை போல படப்பிடிப்பு தளம் அமைத்து படம் எடுத்துள்ளோம்.

அக்சன், கொமெடி என எல்லாம் உள்ள படமாக வந்துள்ளது.

வசனக்காட்சிகள் முழுவதையும் படமாக்கியதும் போஸ்ட் புரடக்சன் பணியில் முழுமூச்சாக இறங்க யோசித்துள்ளோம்.

இந்த படத்தின் ஆறு பாடல்களுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்ப்பார்ப்பு உள்ளது என்கிறது படக்குழு.

”முதல் இடம்” படத்தின் வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க போவதாக கூறுகிறார்கள்.

நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு

இணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம்.

கூகுள் பல வசதிகளை நமக்கு வழங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய புகைப்படங்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது.

நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதற்கு முதலில் இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும் அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி தரவிறக்க வசதி வரும். அந்த தரவிறக்க பட்டனுக்கு அருகில் உங்கள் கோப்பு மொத்த அளவு, எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும். அடுத்து நீங்கள் Download என்ற பட்டனை அழுத்தவும்.

Download பட்டனை அழுத்தியவுடன் உறுதிபடுத்த உங்களின் பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கும். அதை சரியாக கொடுத்தால் போதும். அடுத்த வினாடி உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.

இணையதள முகவரி

வைரஸ்கள் பற்றிய சில தகவல்கள்

கணணிக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில் பிரச்சனை எத்தகையது என்பதை வரையறை செய்வது தான் கடினமான ஒரு சிக்கலாகும்.

பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன.

ஒரு சிலருடைய கணணிகளில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமையானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் கணணிகளிலும், மேக் கணணிகளிலும் கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கணணிக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.

மேக் கணணி பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று தவறாக கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில மின்னஞ்சல்களை திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கணணியில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.

இரண்டு வகைக் கணணிகளை பொறுத்தவரை சில விடயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள் இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.

நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் கோப்புக்களை தரவிறக்கம் செய்து இணைத்து இயக்கிவிட்டால் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்த வரை அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.

சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே பெரும்பாலானவர்கள் தங்களின் கணணிகளில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கணணிகளில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவதில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான் உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை.

பின் வந்த காலங்களில் மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில் அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி கணணியின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து நேராக கணணியை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன.

இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் 2008 ஆம் ஆண்டிலேயே இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் கோப்பாக தரப்பட்டது. ஆனால் பலர் அதனைக் கொண்டு தங்கள் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே.

ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் நிறுவப்படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பொக்ஸ் ஒன்றைக் காட்டி அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை நிறுவச் செய்வதே இதன் வழிமுறையாகும்.

தற்போது கணணி, மேக் என்ற பாகுபாடு இன்றி வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் கோப்புக்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கணணியை பாதுகாத்திடும் வழியாகும்.

நந்திதாதாஸ் மாதிரி நடிக்க துடிக்கும் வைஷாலி

ஹொலிவுட்டில் ரென்யா என்ற தனது பெயரை வைஷாலி என்று மாற்றி, தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் லலிதா ஜுவெல்லரி, உதயம் வேட்டிகள், மெட்ரோ பர்னீச்சர் போன்ற விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.

என் சொந்த ஊர் கொச்சின். நான் நடித்த 'ஒரு மழை நான்கு சாரல்', 'பூத பாண்டி'  ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

கதக் நடனம், ஓவியம் ஆகிய கலைகளில் என் மனம் லயித்து ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளேன்.

எனக்கு பிடித்த உடை ஜீன்ஸ், டொப்ஸ். எனக்கு பிடித்த நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன்.

பழம்பெரும் நடிகை சுதா பட்டேல் தான் என் ரோல் மொடல்.

திரையுலகில் நந்திதா தாஸ் மாதிரி நடிப்பில் சிறந்து விளங்க துடிக்கிறேன்.

அது மட்டுமின்றி பெர்ஃபார்மான்ஸ் நடிகையாக பெயரெடுக்க விரும்புகிறேன் என்றும் வைசாலி கூறியுள்ளார்.

கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி

”சில்லுன்னு ஒரு காதல்” எனும் படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா அடுத்து ஆர்யாவின் தம்பியை வைத்து படமெடுக்கிறார்.

நீண்ட நாட்களாக எந்தப் பட வாய்ப்புகளும் கிருஷ்ணாவுக்கு அமையவில்லை.

பல வருட காத்திருப்புக்குப் பின் கிடைத்திருக்கிறது அவர் திறமையை காட்ட இன்னொரு வாய்ப்பு.

இந்தப் படத்தில் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

சத்யா வேறு யாருமில்லை, நடிகர் ஆர்யாவின் தம்பி.

”காதல் 2 கல்யாணம்” என்ற படத்தில் தான் சத்யா முதலில் அறிமுகமானார்.

இந்நிலையில் கிருஷ்ணாவிடமிருந்து அழைப்புவர உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புதிய படத்துக்கு நல்ல பெயராக தேடி வருகிறார்கள்.

மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்: விவேக்

24 பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" கரண், அஞ்சலி நடிக்கிறார்கள், வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது.

விழாவில் நடிகர் விவேக் பேசியது:

வெற்றி பெற்றால்தான் சினிமா உலகம் கை கொடுக்கும். மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என விசாரிக்க கூட மாட்டார்கள்.

நடிகர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என நினைக்கிறார்கள்.

அவ்வளவு சம்பளம் வாங்கும் நிலையை அடைய அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை.

அவர்கள் வடித்த ரத்தகண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை, இவ்வாறு விவேக் பேசினார்.

விழாவில் இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், சுசீந்திரன், ராஜேஷ், சீனு ராமசாமி, பிரபுசாலமன், பேரரசு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தனஞ்செயன், சிவா, சிபு ஐசக், நடிகர்கள், சரவணன், நகுலன், நடிகை அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நட்சத்திராவை கண்டு பயந்த டூ பட நாயகன்

"முன்தினம் பார்த்தேனே" படத்தில் நடித்த நாயகன் சஞ்சய் ஹொலிவுட்டின் புதுமுக நாயகி நட்சத்ரா இருவரையும் இணைத்து ''டூ' படத்தில் நடித்துள்ளனர். 

இப் படத்தை இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கியுள்ளார்.

இயல்பாகவே கலகலப்பாக பழகக்கூடிய நபர்தான் இப்படத்தின் இயக்குனர்.

சீரியசான காட்சியை எங்களுக்கு விவரித்து விட்டு கடைசியில் கொமெடியை சொல்லி சிரிக்க வைத்துவிடுவார்.

அந்த சீரியஸ்நெஸ் மறந்து போகும், பின்னர் காட்சியுடன் இயல்பாக ஒன்றி நடித்து விடுவோம்.

படக்குழுவின் கடின உழைப்பால் படப்பிடிப்பு 45 நாட்களில் முடிந்தது.

படப்பிடிப்பில் நாயகி நட்சத்ராவை பார்த்த போது பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மகள் நம்மிடம் எப்படி பழுகுவாரோ என்ற பயம் இருந்தது.

ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் இயல்பாக என் கூட நடிச்சாங்க.

சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு, என்று "டூ" படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திராவை கண்டு பயந்து, பழக தயங்கி நின்ற அனுபவத்தை நாயகன் சஞ்சய் கூறியுள்ளார்.

அனிமேஷன் படமாக உருவாகவிருக்கும் முகமூடி

நாயகன் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் 'முகமூடி'  படத்தை பிரபல கார்பரேட் நிறுவனமான யூ.டி.வி தயாரிக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ்சை சேர்ந்த அனிமேஷன் கம்பெனியை அணுக உள்ளதாம் படக்குழு.

ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ”முகமூடி” படத்துக்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிரடி நாயகன் வேடத்தில் நடிக்கும் ஜீவா உடன் இணைந்து நடிக்க பொருத்தமான நாயகியை தேர்வு செய்து வருகிறார்கள்.

முக்கியமான வேடங்களில் நடிக்க நடிகர்-நடிகைகளை பரிசீலித்து வருகிறார் இயக்குனர் மிஸ்கின்.

”கோ” பட வெற்றிக்கு பிறகு ஹொலிவுட்டின் முன்னணி கொமெர்சியல் நாயகனாக ஜீவா வலம் வருகிறார்.

தற்போது இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்'  படத்தில் நடித்து வரும் ஜீவா, அதற்க்கு பிறகு ”முகமூடி” யில்  கவனம் செலுத்த போகிறாராம்.

கூகுள் + மூலம் வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை நிறுத்துவதற்கு

சமூக இணைய தளங்களின் குறிப்பிட்ட ஒரு பிரச்சினை என்னவென்றால் Notification மின்னஞ்சல்கள் வந்து நம்முடைய இன்பாக்சை குப்பை கூடையாக மாற்றி விடும்.

அதே நிலைமை தான் கூகுள் பிளசிலும். இதற்கு இடையில் நம்முடைய முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவதில் சிரமமாக உள்ளது. ஆகவே இந்த தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி தடை செய்வது என காண்போம்.

இதற்கு முதலில் கூகுள் + தளத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்று வலது பக்க மேல் மூலையில் உள்ள Google + Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள டிக் மார்க்கினை உங்கள் வசதிகேர்ப்ப நீக்கி விடுங்கள்.

இதில் ஒவ்வொரு வசதிக்கு நேராக உள்ள டிக் மார்க்கினை நீக்கி விட்டால் அது சம்பந்தமான மின்னஞ்சல்கள் உங்களுக்கு இனி வராது.

இதில் உள்ள அனைத்து டிக் மார்க்கினையும் நீக்கினால் கூட எந்த பிரச்சினையும் இல்லை. இனி உங்கள் இன்பாக்சும் மிக சுத்தமாக இருக்கும்.

நினைவூட்டும் இணையதளம்

இணைய நினைவூட்டல் சேவைகளில் முன்னணி தளம் என்றோ நட்சத்திர அந்தஸ்து மிக்க தளம் என்றோ குறிப்பிடக்கூடியவையாக‌ எந்த தளமும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் 2ரிமைன்ட்ரஸ் தளத்தை விரிவான நினைவூட்டல் சேவை என வர்ணிக்கலாம். காரணம் இந்த தளம் பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதில் துவங்கி செய்ய வேண்டியவை, திட்டமிட்டவை எம எல்லாவறையும் நினைவில் வைத்திருக்க உதவுகிற‌து.

வண்ணமயமான பின்னணியில் அமைந்திருக்கும் இந்த தளம் தலைவாசல் இலையில் சாப்பாடு போடுவது போல நினைவூட்டல் வசதியை பலவித அம்சங்களோடு வழங்குகிறது. அடிப்படையில் பிறந்தநாளுக்கான நினைவூட்டல் சேவை என்ற‌ போதிலும் இதன் இதர அம்சங்களையும் பயன்பாட்டையும் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம்.

இதற்கு மாறாக எளிமையான நினவூட்டல் சேவையை விரும்புகிற‌வர்கள் எம் எஸ் ஜி மீ.அட், பார் லேட்டர் போன்ற‌ சேவைகளை பயன்படுத்தலாம்.

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது போல இந்த தளங்கள் மிக எளிமையாக நினைவூட்டல் சேவையை வழங்குகின்றன. மின்னஞ்சல் மூலம் குறித்த நேரத்தில் நினைவூட்டும் பணியை இவை மேற்கொள்கின்ற‌ன.

எந்த விஷயத்தை மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த விவரத்தை இந்த தளத்தில் குறிப்பிட்டு அதனை நினவூட்ட வேண்டிய நாள் மற்றும் நேரத்தையும் தெரிவித்து விட வேண்டும். பின்னர் நாம் குறிப்பிட்ட நாளில் மின்னஞ்சல் மூலம் நினவூட்டல் அனுப்பி வைக்கப்ப‌டுகிறது.

எம் எஸ் ஜி மீ.அட் இணையதளத்தை பொருத்தவரை முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிற‌கு நினைவூட்டல் வாசகத்தையும் நினைவூட்டல் தினத்தையும் குறிப்பிட்டால் போதுமானது.

பார் லேட்டர் தளம் இன்னும் கூட எளிமையானது. பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் வடிவமைப்பும் மின்னஞ்சல் போலவே இருப்பதால் கொஞ்சம் சுவையானது.

மின்னஞ்சல் போல உள்ள பகுதியில் நினைவூட்டல் தலைப்பையும் அதன் கீழ் நினைவூட்டல் விவரத்தையும் டைப் செய்து விட்டு மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் நாம் குறிப்பிடும் நேரத்தில் அந்த மின்னஞ்சல் நம் இன்பாக்ஸ் தேடி வரும்.

நட்ஜ்மெயில் இணையதளமும் இதே போன்ற‌ சேவையை வழங்குகிறது. நட்ஜ் மெயிலை எளிமையானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் மின்னஞ்சல் மூலம் நினைவூட்டலை பெறலாம் என்பதோடு நமக்கு வந்த மின்னஞ்சலை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களிலும் செயல்படகூடியது. மீண்டும் மீண்டும் கூட நினைவூட்டலை பெறலாம். கூகுள் நாட்காட்டியுடன் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன. கட்டண‌ சேவையும் உள்ளது.

இணையதள முகவரி