மறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

சரத் பொன்சேகாவிற்கு பிறந்த நாள் கேக் வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிறந்த தினம் இன்றாகும்.பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் சரத் பொன்சேகாவை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

கட்சியின் இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை பார்வையிட்டுள்ளனர்.

பிறந்த நாளை முன்னிட்டு பாலித ரங்கே பண்டாரவும், பாலித தெவரப்பெருமவும் கேக் ஒன்றை சிறைச்சாலைக்கு எடுத்து சென்றிருந்தனர்.

எனினும், இந்த கேக்கை சரத் பொன்சேகாவிற்கு வழங்கக் கூடாது என சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Content of Popup

வியாழன், 28 ஜூலை, 2011

சனல் 4 காணொளி : வழமைபோல இலங்கை மறுப்பு

சனல் 4 இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றத்துக்கு ஆதாரமென கூறி நேற்றைய தினம் ஒளிபரப்பிய 13 நிமிடக் காணொளித் தொகுப்பினை இலங்கை இராணுவத் தரப்பு முற்றிலும் பொய்யெனக் கூறி மறுப்புத் தெரிவித்துள்ளது.

சனல் 4வின் குற்றச்சாட்டுக் காணொளிகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டுள்ள காணொளியிற்கு இலங்கை இராணுவத் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டுள்ள குறித்த காணொளியில் இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் கருத்துகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 19 ஜூலை, 2011

சினிமாவை விட்டு விலகிவிட்டேனா?: நயன்தாரா மறுப்பு

தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்துடன் சினிமாவை விட்டு விடை பெறுவதாக வந்த செய்தியை நடிகை நயன்தாரா மறுத்துள்ளார்.

ரமலத்துக்கும், பிரபுதேவாவுக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதால், விரைவில் நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், கடைசியாக தெலுங்கில் நடித்த ”ஸ்ரீராம ராஜ்யம்” படத்தில் சீதா தேவி கதாபாத்திரத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் செய்திகள் வந்தது.

ஸ்ரீராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் மலர் தூவி நயன்தாராவுக்கு விடை கொடுத்தனர். அப்போது கண்ணீர் மல்க அனைவரிடமிருந்து விடைபெற்றார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகப்போவதாக நான் என்றுமே சொன்னதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவை விட்டு நான் விலகுவதாக வந்த செய்தி உண்மையில்லை. ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் அழுததற்கான காரணமே வேறு. அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் என்னை மீறி அழுகை வந்துவிட்டது. மற்றொரு பக்கம் படக்குழுவினர் பாட்டு பாடி, என்மீது பூக்கள் எல்லாம் தூவினர். இதுவும் என் அழுகைக்கு காரணம்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நான் நடித்த தமிழ், கன்னடம், மலையாள படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. என்னுடைய மார்க்கெட்டும் நன்றாக இருக்கிறது. அப்படி இருக்கையில், சினிமாவை விட்டு நான் விலகப்போவதாக யார் சொன்னது. அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இந்த அறிவிப்பிற்கு பிரபுதேவா என்ன சொல்லப் போகிறார்?