புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2011

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணம்: ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Content of Popup

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம்

உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும்.
16 January 2010
[இணைப்பு 2]தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.  ஒலிநாடா கேட்க முடியாதவர்களிற்காக எழுத்து வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
15 January 2010
[ஒலி] புறக்கணியுங்கள் சிறீலங்கா என்று புலம்பெயர் தமிழீழ மக்கள் கூறிக்கொண்டு சிறீலங்கா தயாரிப்பு பொருட்களையே இப்பொழுதும் வாங்கி பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு எழுச்சிப்பெற்றுவருகிறது.
14 January 2010
[3ஆம் இணைப்பு] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை  அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
14 January 2010


ஏனைய செய்திகள்

எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடுநிலையானது என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 January 2010
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
17 January 2010
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து ஊடகங்களும் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதித்து நடக்குமாறு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 January 2010
எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டதாக தபால் மா அதிபர் தெரிவிக்கின்றார்.
16 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக்
16 January 2010
[படங்கள்] மெல்பேர்ணில் நடைபெற்ற தமிழ் தேசியத் தலைவருடைய தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில வணக்க நிகழ்வுகள் என்று 15.01.2010 அன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
16 January 2010
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்."  என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
16 January 2010
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
16 January 2010
அயர்லாந்து டப்ளின் நகரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு நோர்வே தமிழர் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
15 January 2010
இழந்த எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் உறுதியை நிறுத்தி தமிழ்த்தேசியம் காப்போம் என தமிழர் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவையொட்டிய ஊடக அறிக்கை
15 January 2010
அடிப்படை வசதிகளின்றி அலை மோதும் கூலாய் பெசார் தோட்டத் தமிழ் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டும் திட்டம் காலம் கடந்து போனால் அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் பெரும் வீழ்ச்சி அடையக்கூடும் என்று பள்ளித் தலைமையாசிரியர் கே. முனுசாமி எச்சரித்துள்ளார்.
15 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும் அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
15 January 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
15 January 2010
பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ளார்.
15 January 2010
அரசியல்வாதி என்பதனை  விடுத்து தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சகல இனங்களுடனான தமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறைக்கலாசாரத்தால் தடுத்து விடமுடியாத எனவும் அவர் தெரிவித்தார்.
15 January 2010
நாட்டின் எதிர்காலத்தில் இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையென தாம் உறுதியளிப்பதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறையில் நகர சபை மைதானததில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
15 January 2010
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்ட மாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
15 January 2010
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும்  அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல.  அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.   நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
15 January 2010
இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உதவியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் மேலதிக விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
14 January 2010


மேலதிக செய்திகள்


ஞாயிறு, 27 டிசம்பர், 2009

குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம் – லக்பிம

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏதிலிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
27 December 2009
அரசாங்கம் சற்றும் எதிர்பாராத பாரிய அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
27 December 2009
இந்தோனேசியாவில் வைத்து மரணமடைந்த இலங்கை ஏதிலியின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியுகே பைசாஸ்யா இதனை தெரிவித்துள்ளார்.
27 December 2009
வவுனியாவிலுள்ள மெனிக் பாம் எனப்படும் வதைமுகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
27 December 2009
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள, அரச அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசத்தில் உள்ள 15 லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்த முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 December 2009
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
27 December 2009
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
26 December 2009
நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815 பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப் படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
26 December 2009
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
26 December 2009
இலங்கையில் அதிபர் தேர்தலை தனது யுத்த வெற்றியை காட்டி மீண்டும் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே அறிவித்தார் மகிந்த ராசபக்ச.   இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக அவரது நண்பரும் சிறிலங்காவின் இராணுவத்தளபதியாகவும் விளங்கிய சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
26 December 2009
ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.
26 December 2009
'இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?' – தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா!
26 December 2009
சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலக தயார் என்று எம்பி சிவாஜிலிங்கம் தமிழகத்திலுள்ள விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
26 December 2009
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எதிக்கட்சிக் கூட்டணிகளின்  அதிபர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று முற்பகல் அளவில் நடைபெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன.
26 December 2009
கடந்த அக்டோபர் மாதம் மேற்கு கனடாவில் தரையிறங்கிய கப்பலிலிருந்த 76 இலங்கையர்களில் 50பேர் விடுவிக்கப்படவுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
26 December 2009
கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
25 December 2009
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக தான்தேன்றித்தனமாக அரச உடமைகளை கையாளுதல் மற்றும் அரச பணத்தை செலவு செய்தல் சம்பந்தமாக சுமார் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ட்ரான்பெரன்சி இன்ரநெஷனல் அமைப்பு தெரிவிக்கின்றது.
25 December 2009
இலங்கையில் நடந்த இறுதிபோரில் தாங்களாகவே முன்வந்து சரணடைய வந்த விடுதலைப்புலி தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ரசபக்சதான் என்று சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என்று பன்னாட்டுச் சட்ட நிபுணர் பிரான்சிஸ் போய்ல் கூறியுள்ளார்.
25 December 2009
முகாம்களில் இருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வாழ்வாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொள்வதில் சிக்கலை சந்தித்து வருவதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
25 December 2009
இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலனை காரணம் காட்டி, தேர்தல்களுக்காக இலங்கை அரசாங்கம் பாரிய கடன்களை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
25 December 2009


மேலதிக செய்திகள்


செவ்வாய், 10 நவம்பர், 2009

கிழக்கு மாகாண தளபதி ராம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாராம் – த ஐலண்ட்



island_logoவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ராம் பொலனறுவை கிரிதலே பகுதியிலுள்ள ஒரு ராணுவ முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை தப்பியோடியதாகவும், ஆனால் அவரை மீண்டும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்து விட்டதாகவும் த ஐலண்ட் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
10 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

ஞாயிறு, 1 நவம்பர், 2009

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்

முதன்மைச்செய்தி
October 31st, 2009

siva300முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது. விரிவு… »


பிரதான செய்திகள்


nedumaranஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.

31 October 2009

europe_flag"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

31 October 2009

barbwire_peoplesஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களி லிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன 'இந்து' ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. – காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள்.

31 October 2009

dailymirror_28102009[2ஆம் இணைப்பு] நேற்று காலையில் பம்பலப்பிட்டி கடற்கரையில் பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நபரை சிலர் பலவந்தமாக கடலில் மூழ்கடித்துள்ளனர்.

30 October 2009


ஏனைய செய்திகள்


rajapakse_kanimozhiதமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

1 November 2009


karunaமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'மைனாரிட்டி அரசு' என்கிற வார்த்தையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதைப்போல், 'சகோதர யுத்தம்' என்கிற வார்த்தையை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

31 October 2009


[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

31 October 2009


siva300பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

31 October 2009


hand-bombமட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட ஊறுகாமம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

31 October 2009


vaiko-33சிறீலங்கா அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர திட்டமிட்டார். அதன்படி சிறீலங்கா அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜபக்சே திருப்பதி வருவது உறுதியானது.

31 October 2009


Rajapaksa visiting Tirupatiசிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்குச் சென்று வெங்கசடாசபதியை தரிசனம் செய்துள்ளார்.

31 October 2009


ranil001sபன்றிக் காய்ச்சல் நாட்டிற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதைப் போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தப் பீதியை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


s.p.tisanayakaசிறீலங்கா அதிபர் தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் நியமம் குறித்த முடிவு இன்றும் ஒரு வார காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


siva[காணொளி] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

31 October 2009


unp_logoதேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க. வலியுறுத்து… இல்லையேல் வடக்கில் வாக்குக்கொள்ளைதான் இடம்பெறும். வவுனியா அகதிமுகாம்களில் உள்ள வன்னி அகதிகள் அனைவரையும் மீளக் குடியமர்த்தி விட்டே ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

31 October 2009


gspஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை நீக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வருகையில், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

31 October 2009


uk_30102009[படம்] சிறீலங்கா அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக்கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

31 October 2009


Bishop de Chickeraகொழும்பு பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

31 October 2009


Indonesia_flagஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

31 October 2009


5 media orginizationசண்டே லீடர் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் அதன் செய்தி ஆசிரியர் முன்ஸ் முஜ்தாக் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.







--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews