முதன்மைச்செய்தி October 31st, 2009
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது. விரிவு… »
பிரதான செய்திகள்
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.
"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களி லிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன 'இந்து' ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. – காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள்.
ஏனைய செய்திகள்
[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்
பன்றிக் காய்ச்சல் நாட்டிற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதைப் போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தப் பீதியை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[காணொளி] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க. வலியுறுத்து… இல்லையேல் வடக்கில் வாக்குக்கொள்ளைதான் இடம்பெறும். வவுனியா அகதிமுகாம்களில் உள்ள வன்னி அகதிகள் அனைவரையும் மீளக் குடியமர்த்தி விட்டே ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
[படம்] சிறீலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் இருந்து சிறைபிடிக்கப்பட்டு வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி இன்று 9 ஆவது வெள்ளிக்கிழமையாக பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் பிரித்தானியா தமிழ் மக்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக