தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 நவம்பர், 2009

1989 இல் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? கொளத்தூர் மணி

maniannai[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

வியாழன், 5 நவம்பர், 2009

முல்லைபெரியாரில் உரிமை மீட்கிறாராம் திருமா! – தமிழன்பன்

thiruma_questionராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆங்கிலேயே கர்னல் பென்னிகுக் என்ற புண்ணியவானின் தயவால் உருவாக்கப்பட்ட முல்லைபெரியார் ஆணையில் தமிழனின் தார்மீக உரிமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் காலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒழுங்காக நீர் சென்று வந்தது.
5 November 2009
leader family001பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
5 November 2009
eelam_flagஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரணாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன.
5 November 2009
arunthathi_vaeniமாத்தளன் பகுதியில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் போரின்போது பதுங்குகுழியில் இருந்தபோது காயமடைந்த தனது மனைவியை படையினர் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அவரை காணவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
5 November 2009
child_rapeசிங்களவர்களுக்கே உரிய அரக்க குணங்களில் ஒன்று பெண்களைக் கற்பழிப்பதாகும். இந்த கற்பழிப்புகள் சிங்கள பகுதிகளில் பரவலாக நடந்து வருவது வழக்கம் எனும்போதும் இந்த தடவை பாதிப்புக்கு உள்ளாகியது 4 வயது சின்னஞ்சிறு சிறுமி
5 November 2009
leaders familyதமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
5 November 2009
sarath-ponseke_sசிறீலங்காவின் கூட்டுப்படை தளபதி, சரத் பொன்சேகா இன்று அதிகாலை 5.30 அளவில் நாடு திரும்பியுள்ளார்.
5 November 2009
ausi shipஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டு இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு விடுத்துள்ளது.
5 November 2009
siva300ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று  இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் காத்திருக்கின்றது.
5 November 2009
vattukottaiபாடல்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் – தமிழர் வாழ்வில் வெகுமானம்
5 November 2009
tamilguy_killed_in_beach_by_srilankans_s[படங்கள்] சமீபத்தில் பம்பலப்பிட்டியில் பொலிசாராலும் சிங்கள காடையர் கூட்டத்தாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்த தமிழனின் கடைசிக் கதறல்.
5 November 2009
Uruthrakumaran1இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
5 November 2009
camp_child001வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் 230 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 November 2009
colombo_04102009002பம்பலப்பட்டி கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
5 November 2009
arivan_01தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன் தெரிவித்துள்ளார்.
5 November 2009
nedumaaran2009கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
4 November 2009
sarath_fonsekaசிறீலங்காப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறார்.
4 November 2009
Ship Sinkingபடகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாகத் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 November 2009
mahinda rajapaksa  in wanni[படங்கள்] சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் அதிகாரிகளுடன் திடீரென இன்று வியாழக்கிழமை வன்னிக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
4 November 2009
Refugee_India4_06தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்ற  மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் ஆய்வறிக்கை.
4 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

ஞாயிறு, 1 நவம்பர், 2009

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்

முதன்மைச்செய்தி
October 31st, 2009

siva300முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது. விரிவு… »


பிரதான செய்திகள்


nedumaranஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.

31 October 2009

europe_flag"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

31 October 2009

barbwire_peoplesஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களி லிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன 'இந்து' ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. – காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள்.

31 October 2009

dailymirror_28102009[2ஆம் இணைப்பு] நேற்று காலையில் பம்பலப்பிட்டி கடற்கரையில் பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நபரை சிலர் பலவந்தமாக கடலில் மூழ்கடித்துள்ளனர்.

30 October 2009


ஏனைய செய்திகள்


rajapakse_kanimozhiதமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

1 November 2009


karunaமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'மைனாரிட்டி அரசு' என்கிற வார்த்தையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதைப்போல், 'சகோதர யுத்தம்' என்கிற வார்த்தையை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

31 October 2009


[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

31 October 2009


siva300பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

31 October 2009


hand-bombமட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட ஊறுகாமம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

31 October 2009


vaiko-33சிறீலங்கா அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர திட்டமிட்டார். அதன்படி சிறீலங்கா அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜபக்சே திருப்பதி வருவது உறுதியானது.

31 October 2009


Rajapaksa visiting Tirupatiசிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்குச் சென்று வெங்கசடாசபதியை தரிசனம் செய்துள்ளார்.

31 October 2009


ranil001sபன்றிக் காய்ச்சல் நாட்டிற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதைப் போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தப் பீதியை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


s.p.tisanayakaசிறீலங்கா அதிபர் தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் நியமம் குறித்த முடிவு இன்றும் ஒரு வார காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

31 October 2009


siva[காணொளி] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

31 October 2009


unp_logoதேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க. வலியுறுத்து… இல்லையேல் வடக்கில் வாக்குக்கொள்ளைதான் இடம்பெறும். வவுனியா அகதிமுகாம்களில் உள்ள வன்னி அகதிகள் அனைவரையும் மீளக் குடியமர்த்தி விட்டே ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

31 October 2009


gspஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை நீக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வருகையில், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

31 October 2009


uk_30102009[படம்] சிறீலங்கா அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக்கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

31 October 2009


Bishop de Chickeraகொழும்பு பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

31 October 2009


Indonesia_flagஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

31 October 2009


5 media orginizationசண்டே லீடர் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் அதன் செய்தி ஆசிரியர் முன்ஸ் முஜ்தாக் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.







--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

நெடுமாறன் , வைகோ, சீமான் அவர்களின் அறிக்கையின் சிறீலங்கா தூதரின் மறுப்பும்

வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்


வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்கா துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.
இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளார்.
இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.
பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார்.
அதுவும் தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலம் கடந்தாவது அகதி முகாம்களுக்கு செல்ல முயற்சி நடக்கிறதே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டே இப்படி திமிர்த்தனமாக பேசியுள்ளார். இது தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மேலும் மீனவர் பிரச்சனையிலும், ’இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது” என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.
இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குவைத்திலிருந்து தெரிவித்துள்ளார்.


சிறீலங்கா துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: பழ.நெடுமாறன்

இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைப் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல” என இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கையிலுள்ள முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார்.
இந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கொண்டே, அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு தமிழக முதல்வரை மட்டுமின்றி, ஆறரை கோடி தமிழ் மக்களையும் அவமதிக்கும் போக்காகும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது பற்றி குறிப்பிடும்போது, “”இலங்கை இறையாண்மை உள்ள நாடு; கடல் எல்லையைத் தாண்டி யார் வந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறியிருக்கிறார். எந்த நாட்டுத் தூதரும் இவ்வாறு பேசியதில்லை. எனவே இலங்கை துணைத் தூதரை உடனே வெளியேற்ற வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்திய அரசை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

நெடுமாறன், வைகோ அறிக்கைகளுக்கு சிறீலங்கா துணைத் தூதுவர் மறுப்பு

தாம் கூறிய கூற்றை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை எனறும் நெடுமாறன், வைகோ ஆகியோரின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் சிறீலங்காத் துணைத் தூதர் கூறியுள்ளார்.
‘சிறீலங்காத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் வெளியிடத்தார் சென்று பார்க்கும் விலங்குக்காட்சி சாலைகளல்ல’ என இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததையடுத்து, அவரை உடனும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நெடுமாறனும், ம.தி.மு.க செயலாளர் வைகோவும் கண்டன அறிக்கைகள் விட்டிருந்தனர்.
இதையடுத்து, நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தாம் அவ்வாறு கூறவில்லை என்றும் தமது கூற்றுக்களை முழுமையாக ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் கூறியதோடு, “முகாம்களில் வாழுகின்ற தமிழர்கள் கௌரவமான மக்கள். எனவே அங்கு பல சர்ச்சைகள் இருக்கின்றபோது, ஒரே நேரத்தில் பலர் அடிக்கடி அவர்களைப் பார்க்கச் செல்வது பொருத்தமானது அல்ல” என்றே தாம் கூறியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறீலங்கா இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதே தமது முதன்மையான பணி என்றும், சிறீலங்காவுக்கு தூதுக்குழுவை அனுப்பும்படி தாம் ஏற்கனவே கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.
இதேவேளை, கிருஷ்ணமூர்த்தியை சிறீலங்காவுக்கே திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாண்டியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

வணக்கம் நண்பர்களே

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழினத்தின் நிகழ்வுகளை, செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.



my google group: http://groups.google.com/group/currenttamilnews