இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏதிலிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
அரசாங்கம் சற்றும் எதிர்பாராத பாரிய அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் வைத்து மரணமடைந்த இலங்கை ஏதிலியின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியுகே பைசாஸ்யா இதனை தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள மெனிக் பாம் எனப்படும் வதைமுகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள, அரச அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசத்தில் உள்ள 15 லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்த முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்த எம்.பி சிவாஜிலிங்கம் திருச்சி விமானநிலையத்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815 பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப் படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.
கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக தான்தேன்றித்தனமாக அரச உடமைகளை கையாளுதல் மற்றும் அரச பணத்தை செலவு செய்தல் சம்பந்தமாக சுமார் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ட்ரான்பெரன்சி இன்ரநெஷனல் அமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கையில் நடந்த இறுதிபோரில் தாங்களாகவே முன்வந்து சரணடைய வந்த விடுதலைப்புலி தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ரசபக்சதான் என்று சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என்று பன்னாட்டுச் சட்ட நிபுணர் பிரான்சிஸ் போய்ல் கூறியுள்ளார்.
முகாம்களில் இருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வாழ்வாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொள்வதில் சிக்கலை சந்தித்து வருவதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலனை காரணம் காட்டி, தேர்தல்களுக்காக இலங்கை அரசாங்கம் பாரிய கடன்களை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக செய்திகள்
- தேர்தல் கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபடாது – இலங்கைக்கான பிரதிநிதி
- மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த இரு வாரங்களில் வெளியாகும்
- இடம்பெயர்ந்தோர் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு
- சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதை முகாமில் துப்பாக்கிப் பிரயோகம் – சிறுவர்கள் பெண்கள் உட்பட 5 பேர் காயம்
- பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு – கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- ஐநாவின் கோரிக்கை – முரண்பாடான பதிலளிக்கும் சிறிலங்கா அரசு
- உள்நாட்டு அரசியலில் தலையிட வேண்டாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை!
- தமிழ்கூட்டமைப்பின் முடிவு தமிழ்மக்களின் நலன் சார்ந்தே இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன்
- போரின் போது உலகளவில் மிகப்பெரிய மனித அவலம் இடம்பெற்ற பட்டியலில் சிறிலங்காவிற்கு 10வது இடம்
- இந்தோனேசிய கப்பலில் தவித்த ஈழத்து அகதி இறப்பு
- தம்பி பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதரம் உண்டு – பழநெடுமாறன்
- எந்த வகையிலும் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லை-பொன்சேகா சூளுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக