சனி, 17 டிசம்பர், 2011

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணம்: ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக