இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்
ஈழவிடுதலை வரலாற்றில் திலீபன் ஒரு திருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன.
5 October 2009
[விரிவு]
பொதுத்தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத்திட்டம் – திஸ்ஸ விதாரண
பொதுத் தேர்தலின் பின்னரே இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரனகூறியுள்ளார்.
5 October 2009
[விரிவு]
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்
வடக்கில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு அழைப்பாளருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 October 2009
[விரிவு]
பிரித்தானியாவில் விமல் வீரவன்ச கூட்டம்
சிறிலங்கா அரசுடன் கைகோத்து தமிழின அழிப்பை கண்டு ரசித்த இனவாதக் கட்சியான ஜே.வி.பி யின் முக்கிய உறுப்பினரான விமல் வீரவன்ச லண்டன் வருகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
5 October 2009
[விரிவு]
மாங்குளம் நகரை புதுடில்லிக்கு ஒப்பான நகராக மாற்றியமைக்க முயற்சி
மாங்குளம் நகரை புதுடில்லிக்கு ஒப்பான நகராக மீள கட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
செங்கல்பட்டு முகாம் ஏதிலிகளை சந்திக்க பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுப்பு
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழ ஏதிலிகளை சந்திக்க இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
படையினரைக் குற்றம் கூறும் நாடுகள் அதை நிரூபிக்க முடியுமா…? – மகிந்த சவால்
சிறிலங்காவின் பாதுகாப்பு படையினருக்கு எதிராகப் பாலியல் குற்றம் சுமத்தும் நாடுகள் அக்குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமா என்றும், தமது பாதுகாப்பு படையினர் ஒருபோதும் பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அல்லர். இது உறுதியான விடயம்.
5 October 2009
[விரிவு]
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி
இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே கௌரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வலியுறுத்தலை இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு பிரிவு விடுத்துள்ளது.
5 October 2009
[விரிவு]
டெல்லியிலுள்ள சிறீலங்கா தூதரகம் மீது புலி ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர் – லக்பிம
இந்தியாவிற்கான சிறீலங்கா தூதரகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் போராயுதமாக பயன்படுத்தப்பட்டனர் – அமெரிக்கா
அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டனின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்துக்கு, அமெரிக்கா பதிலளித்துள்ளது.
5 October 2009
[விரிவு]
லண்டனில் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம்
குமரப்பா , புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகள் நினைவு தினம், நாளை திங்கட்கிழமை (05-10-2009) அன்று பிரித்தானியாவிலுள்ள மிச்சம் சிவன் கோவிலில் (MITCHAM SIVAN KOVIL ) மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெறவுள்ளது.
4 October 2009
[விரிவு]
வவுனியாவில் பலத்த காற்றுவீச்சு! வதைமுகாம்களில் 2000 இடைத்தங்கல் கூடாரங்கள் சின்னாபின்னம்
வவுனியா மாவட்டத்தில் நிலவிய பலத்த காற்றுவீச்சில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் இரண்டாயிரம் கூடாரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.
4 October 2009
[விரிவு]
திங்கள், 5 அக்டோபர், 2009
ஞாயிறு, 4 அக்டோபர், 2009
காதில் பூ சுற்றும் சிறீலங்காவின் காமெடி
சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் பலி
[ சனிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2009, 12:15.41 PM GMT +05:30 ]
சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும், கடுமையான காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/view.php?2e30QHvcb33h9EYe4d46Wn5cb0bf7GU24d4aYp7200bJnLWSde23E2hP0cc2tj0Cde
செல்வன், வவுனியா 03/10/2009, 14:38
மன்னாரில் துப்பாக்கிச் சூடு! 2 சிறீலங்கா படையினர் பலி
மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (02.10.2009) இரவு பரப்புக்கடந்தான் பகுதியூடாகப் பயணித்த மூன்று சிறீலங்கா படையினர் மீது தானியங்கித் துப்பாக்கி ஒன்றின் சகிதம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருந்தன.
இதில் படுகாயமடைந்த மூன்று சிறீலங்கா படையினரில் இரண்டு பேர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது உயிரிழந்துள்ளனர்.
http://www.pathivu.com/news/3679/54/2/d,view.aspx

நெடுமாறன் , வைகோ, சீமான் அவர்களின் அறிக்கையின் சிறீலங்கா தூதரின் மறுப்பும்
வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்
வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்கா துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.
இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளார்.
இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.
பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார்.
அதுவும் தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலம் கடந்தாவது அகதி முகாம்களுக்கு செல்ல முயற்சி நடக்கிறதே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டே இப்படி திமிர்த்தனமாக பேசியுள்ளார். இது தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மேலும் மீனவர் பிரச்சனையிலும், ’இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது” என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.
இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குவைத்திலிருந்து தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: பழ.நெடுமாறன்
இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
“இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைப் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல” என இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கையிலுள்ள முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார்.
இந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கொண்டே, அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு தமிழக முதல்வரை மட்டுமின்றி, ஆறரை கோடி தமிழ் மக்களையும் அவமதிக்கும் போக்காகும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது பற்றி குறிப்பிடும்போது, “”இலங்கை இறையாண்மை உள்ள நாடு; கடல் எல்லையைத் தாண்டி யார் வந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறியிருக்கிறார். எந்த நாட்டுத் தூதரும் இவ்வாறு பேசியதில்லை. எனவே இலங்கை துணைத் தூதரை உடனே வெளியேற்ற வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்திய அரசை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
நெடுமாறன், வைகோ அறிக்கைகளுக்கு சிறீலங்கா துணைத் தூதுவர் மறுப்பு
தாம் கூறிய கூற்றை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை எனறும் நெடுமாறன், வைகோ ஆகியோரின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் சிறீலங்காத் துணைத் தூதர் கூறியுள்ளார்.
‘சிறீலங்காத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் வெளியிடத்தார் சென்று பார்க்கும் விலங்குக்காட்சி சாலைகளல்ல’ என இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததையடுத்து, அவரை உடனும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நெடுமாறனும், ம.தி.மு.க செயலாளர் வைகோவும் கண்டன அறிக்கைகள் விட்டிருந்தனர்.
இதையடுத்து, நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தாம் அவ்வாறு கூறவில்லை என்றும் தமது கூற்றுக்களை முழுமையாக ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் கூறியதோடு, “முகாம்களில் வாழுகின்ற தமிழர்கள் கௌரவமான மக்கள். எனவே அங்கு பல சர்ச்சைகள் இருக்கின்றபோது, ஒரே நேரத்தில் பலர் அடிக்கடி அவர்களைப் பார்க்கச் செல்வது பொருத்தமானது அல்ல” என்றே தாம் கூறியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறீலங்கா இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதே தமது முதன்மையான பணி என்றும், சிறீலங்காவுக்கு தூதுக்குழுவை அனுப்பும்படி தாம் ஏற்கனவே கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.
இதேவேளை, கிருஷ்ணமூர்த்தியை சிறீலங்காவுக்கே திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாண்டியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

வணக்கம் நண்பர்களே
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழினத்தின் நிகழ்வுகளை, செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
my google group: http://groups.google.com/group/currenttamilnews

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)