சனி, 17 டிசம்பர், 2011

ஆலய தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

யாழ்ப்பாணம் அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலயத் தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தார் என சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் மூன்று வருடங்களின் பின் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் என்பவரே நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டவராவார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி அம்மன் ஆலயதேர் முட்டிக்குள் ஆயுதங்களையும், இராணுவச் சீருடைகளையும் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இவருக்கு எதிராக இரு இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.

எனினும், குறுக்கு விசாரணையில் மூன்று சாட்சிகளுக்குமிடையில் பல முரண்பாடுகள் தென்பட்டதை அடுத்து இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாத நிலையில், ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக