சனி, 17 டிசம்பர், 2011

பகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை ரஷ்ய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், Times of Moscow எனும் பத்திரிகை எதிர்வரும் திங்கட்கிழமை சைபீரிய நீதிமன்றத்தால் பகவத்கீதை தொடர்பான இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் நோக்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக