சனி, 17 டிசம்பர், 2011

வாகன விபத்தில் நாளொன்றுக்கு 6 பேர் மரணம்: மோட்டார் போக்குவரத்துப் பிரிவு

இலங்கையில் நாளொன்றுக்கு 92 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதனால் ஆறு மரணங்கள் சம்பவிப்பதாகவும் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சேனக்க கமகே தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களினால் இந்த நாட்டுக்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா சொத்து நட்டம் ஏற்படுவதாகவும் இந்த நிலைமை நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களில் 85 வீதமானவை சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனத்தால் ஏற்படுவதாகவும், ஏனைய 15 வீதம் இயந்திர கோளாறுகளினால் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்தும் போது உறங்குதல், பிள்ளைகளை கொஞ்சுதல், உரையாடலில் ஈடுபடல், தொலைபேசி பேசுதல், மது அருந்துதல், உணவு உட்கொள்ளல் போன்ற காரணிகளினால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் இடம்பெறுகின்றது.

ஒரு வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படும் சந்தர்ப்பங்களினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக