100 நாட்களுக்கு மேலாக இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலில் இருக்கும் 254 தமிழ் ஏதிலிகளுக்குமான அவசர வேண்டுகோள் விரிவு… »
பிரதான செய்திகள்
கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியற் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஏனைய செய்திகள்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ
வயதில் இளையவரான இராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியைப் (NDP) பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்" இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் (Jack Layton) கடந்த ஞாயிற்றுக் கிழமை (சனவரி 17) புதிய சனநாயகக் கட்சி; சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக