ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சிறிலங்கா முழுவதிலும் 6000 போலி வைத்தியர்கள்

சிறிலங்கா முழுவதிலும் சுமார் ஆறாயிரம் போலி வைத்தியர்கள் செயற்படுவதாக சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
27 December 2009
இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ கத்துக்கும் இடையில் மிக நீண்ட இடை வெளியின் பின்னர் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியவருகின்றது.
27 December 2009
எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தாம் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகவும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவருக்கே ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 December 2009
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் ஊடுருவல் மற்றும் செல்வாக்கு செலுத்துதல் ஆகியன அதிகரித்து வந்ததை உலகமே நன்கு அறிந்திருந்தது.
27 December 2009
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏதிலிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
27 December 2009
அரசாங்கம் சற்றும் எதிர்பாராத பாரிய அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
27 December 2009
இந்தோனேசியாவில் வைத்து மரணமடைந்த இலங்கை ஏதிலியின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியுகே பைசாஸ்யா இதனை தெரிவித்துள்ளார்.
27 December 2009
வவுனியாவிலுள்ள மெனிக் பாம் எனப்படும் வதைமுகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
27 December 2009
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள, அரச அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசத்தில் உள்ள 15 லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்த முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 December 2009
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
27 December 2009
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
26 December 2009
நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815 பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப் படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
26 December 2009
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
26 December 2009
இலங்கையில் அதிபர் தேர்தலை தனது யுத்த வெற்றியை காட்டி மீண்டும் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே அறிவித்தார் மகிந்த ராசபக்ச.   இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக அவரது நண்பரும் சிறிலங்காவின் இராணுவத்தளபதியாகவும் விளங்கிய சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
26 December 2009
ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.
26 December 2009
'இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?' – தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா!
26 December 2009
சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலக தயார் என்று எம்பி சிவாஜிலிங்கம் தமிழகத்திலுள்ள விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
26 December 2009
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எதிக்கட்சிக் கூட்டணிகளின்  அதிபர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று முற்பகல் அளவில் நடைபெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன.
26 December 2009
கடந்த அக்டோபர் மாதம் மேற்கு கனடாவில் தரையிறங்கிய கப்பலிலிருந்த 76 இலங்கையர்களில் 50பேர் விடுவிக்கப்படவுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
26 December 2009
கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
25 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக