முன்னர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் யாருமே ரெட்ஜெயண்ட்டை பகைத்ததில்லை.
அந்த சமயத்தில் தான் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தில் கதாநாயகன் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்க கொமெடி நடிகர் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
முன்னர் கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம்.
அநேகமாக கதாநாயகன் உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால் தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.
வேறு வேறு படங்களில் பிசியாக இருக்கும் சந்தானம் மீண்டும் எப்போது இப்படப் பக்கம் வருவாரோ தெரியவில்லை என படக்குழுவினர் கவலைப்படுகின்றனராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக