ஞாயிறு, 17 ஜூலை, 2011

கவர்ச்சியாக நடிப்பதை தவிர்க்க முடியவில்லை: பாவனா

”அசல்” படத்திற்கு பிறகு தமிழ்ப்பட வாய்ப்பு இல்லாமல் கரையொதுங்கி நிற்பவர் நடிகை பாவனா.

கவர்ச்சி காட்டுவதில்லை என்ற கொள்கை முடிவுடன் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக கருதப்பட்ட பாவனா சில படங்களில், சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்தார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்:

தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றிக் கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்தால் கவனம் செலுத்துகிறேன்.

ஹொலிவுட், டோலிவுட்டிலும் கதாநாயகர்களுக்கு இமேஜ் முக்கியம்.

அதே போல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையான பின் நான் எடுத்த முதல் முடிவு கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால் சில படங்களுக்காக அந்த விடயத்தை விட்டுக் கொடுக்க வேண்டியாதாகி விட்டது.

கவர்ச்சியாக நடிப்பதை தவிர்க்க முடியவில்லை. தமிழ், தெலுங்கில் கவர்ச்சியாக நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது.

மலையாள படங்களில் அப்படியில்லை, என்று கூறியுள்ளார். தமிழ்ப்படங்களில் நடிக்காதது பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள பாவனா, ”அசல்” படத்துக்குப் பின் நிறைய வாய்ப்புகள் வந்தன.

அவை பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன், அது கிடைத்தால் உடனே நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக