சந்தானத்தின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தானத்தின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூலை, 2011

சந்தானத்தின் வருகைக்காக காத்திருக்கும் படக்குழு

முன்னாள் முதல்வரின் பேரனும், முன்னாள் துணை முதல்வரின் மகனுமான உதயநிதி,  ரெட்ஜெயண்ட் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, பல படங்களை திரையிட்டார்.

முன்னர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் யாருமே ரெட்ஜெயண்ட்டை பகைத்ததில்லை.

அந்த சமயத்தில் தான் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது.

படத்தில் கதாநாயகன் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்க கொமெடி நடிகர் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

முன்னர்  கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது  முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம்.

அநேகமாக கதாநாயகன் உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால் தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

வேறு வேறு படங்களில் பிசியாக இருக்கும் சந்தானம் மீண்டும் எப்போது  இப்படப் பக்கம் வருவாரோ தெரியவில்லை என படக்குழுவினர் கவலைப்படுகின்றனராம்

வியாழன், 14 ஜூலை, 2011

கொமடியன் சந்தானத்தின் ரகளை

சிறுநீரக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நடிகர் ரஜினிகாந்த் பூரண சுகம் பெற்று நேற்று இரவு சென்னை திரும்பினார்.

உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நிபுணர் குழுவினர் அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் 27ம் திகதி அழைத்துச் சென்றனர்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று சென்னை திரும்பினார்.

நேற்று இரவு 10.10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலைய வருகை மையத்தின் வரவேற்பு அறையின் வி.ஐ.பி. க்கள் தங்கும் இடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர், அவருக்காக தயாராக இருந்த இன்னோவா காரில் ரஜினிகாந்த் வீட்டிற்கு புறப்பட்டார். வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார்.

அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சவுந்தர்யா ஆகியோர் வந்தனர். சென்னை விமான நிலையத்தின் 6ம் எண் கேட் வழியாக ரஜினி வெளியே வந்தார்.

ரஜினிகாந்தை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து ரஜினி கையசைத்தார். பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை திரும்பிய ரஜினி ளேம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.