சனி, 16 ஜூலை, 2011

விருது வழங்கும் விழாவை ஒத்திவைத்த ஐஸ்வர்யா ராய்

சினிமா உலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு 'செவாலியர் விருது' வழங்கி கௌரவிப்பதை பிரான்ஸ் அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான 'செவாலியர் விருது' முன்னாள் உலக அழகியும், இன்னாள் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் அரசு  வழங்க முடிவு செய்தது.

இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் விழாவுக்கு வந்தார்.

மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பிரான்ஸ் நாட்டு தூதர் ஜெரோம் போனபான்ட் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மிகவும் சோகமாக காணப்பட்ட ஐஸ்வர்யா ராய், இந்த துக்ககரமான நேரத்தில் விருது விழா கொண்டாடுவது சரியல்ல. எனவே விழாவை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ் அதிகாரிகள் விழாவை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

விருது வழங்கப்பட இருந்த அரங்கத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கிருந்த கூடியிருந்த பிரபலங்கள் அனைவரும் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ச்சியால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தபடி கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக