சனி, 16 ஜூலை, 2011

பியாவுக்கு கிடைத்த சுதந்திரம்

தமிழ் சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தெலுங்கு, மலையாளம் என தாவி செல்கிறார் ஹொலிவுட்டின்  துறு துறு  நடிகை பியா.

ஆரோக்கியமான இளமை மற்றும் அழகிற்காக ஜிம், நீச்சல் என விளையாட கிளம்பிவிடுவாராம்.

பியாவின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களை பார்த்து மாநகர மங்கைகள் வாயை பிளக்கிறார்களாம்.

எனக்கு வருகிற பட வாய்ப்புகளில், மனதுக்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

ஒரு இளம் நடிகையாக நடிப்பில் வித்தியாசமான முயற்சிகளை எடுக்க தயங்க மாட்டேன்.

என் அப்பா, அம்மா இருவரும் என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நட்பு நெஞ்சங்களை சந்திப்பது, வெளி வட்டார விசேசங்களில் பங்கேற்பது, படப்பிடிப்பிற்கு செல்வது என எனக்கு போதுமான சுதந்திரம் கொடுத்திருப்பதால் தான், நான் சினிமா நடிகையாக இருக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக