தற்போது விஜய் ஜோடியாக “வேலாயுதம்”, உயதநிதி ஸ்டாலின் ஜோடியாக “ஒருகல் ஒரு கண்ணாடி” படங்களிலும் நடித்து வருகிறார்.
“ஒருகல் ஒருகண்ணாடி” படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு பக்கத்தில் தான் படக்குழுவினர் இருந்துள்ளனர். படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா காரில் அந்த வழியாக சென்றுள்ளார்.
அவர் கடந்து சென்ற சில வினாடிகளில் குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடனடியாக உறவினர்களையும் நண்பர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார், கடவுள் அருளால் தப்பினேன் என்று அவர் கூறினார்.
படக்குழுவினர் கூறும் போது படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா வீடு திரும்பினார்.
குண்டு வெடிப்பு நடந்த பகுதியை அவர் கடந்து சென்ற சில வினாடிகளில் அந்த பயங்கரம் நடந்துள்ளது என்றனர்.
படத்தின் இயக்குனர் ராஜேஷ் கூறும்போது படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக இருக்கிறோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக