சனி, 16 ஜூலை, 2011

கொமர்சியல் பாணியிலிருந்து விலக இயக்குனர் ஹரி திட்டம்

தனுஷ்-தமன்னா இருவரின் நடிப்பில் தற்போது வெளியாகிய 'வேங்கை' படத்தின் இயக்குனர் ஹரி கொமர்சியல் படங்களை எடுத்து வந்தார்.

இயக்குனர் ஹரியிடம் ஹொலிவுட்டில் உள்ள சிலர் கொமர்சியல் படங்களை எடுத்து வரும் நீங்கள்  விருதுக்குரிய கலை படங்களையும் இயக்கலாமே?  என்று கூறினார்களாம்.

இது பற்றி அவர் கூறியதாவது:

விருதுக்கான படங்களை எடுக்க சொல்லி சிலர் என்னிடம் பேசியிருக்கிறார்கள்.

எனக்கு அந்த மாதிரி படங்களை இயக்குவதை விட, ரசிகர்கள் ஆவலாக ரசிக்கும் கொமர்சியல் படங்களை இயக்கவே விரும்புகிறேன்.

பட உலகில் தற்போது உள்ள இயக்குனர்கள்,  வெற்றிகரமான கொமர்சியல் படங்களை கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல.

இன்றைக்கு படம் இயக்க வரும் இளம் இயக்குனர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

கொமர்சியல் படங்களால் மட்டுமே பட உலகை வாழ வைக்க முடியும்.

ரசிகர்களின் வரவேற்ப்பை பெறும் வகையில் கலை, விருது படங்கள் அமைந்தால் பட உலகமும் நன்மையடையும் என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக