புதன், 24 மார்ச், 2010

VIDEO: நாம் தமிழர் இயக்க கொடி அறிவிப்பு மாநாடு

நாம் தமிழர் இயக்க கொடி அறிவிப்பு மாநாடு

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சிக் கொடி அறிவிப்பு,​​ பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளதாக  நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார். மேலும் »

அநீதிக் கண்டு பொங்குவாய் – கண்மணி

தமிழ் நாடு எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது விளங்கவில்லை. தமிழ் நாட்டு அரசின் ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி மக்களை மதி மயங்க செய்ததா? அல்லது இலவச தொலைக்காட்சியின் தொடர்கள் அவர்களின் மூளையை முற்றிலுமாய் அழித்ததா? புரியவில்லை. மேலும் »

உரிமைக்காக போராடிய பழங்குடிமக்களும் நவீன இந்திய காட்டுமிராண்டிகளும்

உரிமை கேட்டு ஊர்வலம் வந்த பழங்குடி இனமக்களை  கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக்கொன்றனர் நவீன இந்திய காட்டுமிராண்டிகள். இந்திய காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் இந்திய தேசத்தின் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் இந்திய அரசானது நிரூபித்துள்ளது. மேலும் »

பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே! – பழ.​கருப்பையா

"மொழி என்பது என்ன?​ வெறுஞ் சத்தந்தானே!​ எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால்,​​ அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" -​ இவ்வாறு பேசியிருப்பவர் பெரியாரின் அண்ணன் பேரன்;​ ஈ.வே.கி.​ ​ சம்பத்தின் மகன்;​ காங்கிரஸின் ஒரு கும்பலுக்குத் தலைவர்!​ ஈ.வே.கி.ச.​ இளங்கோவன்! மேலும் »

விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் அமைச்சரவை அமைப்பு: சமல் ராஜபக்ஸ

நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் அதிபர் அமைச்சரவையை அமைக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் »

மீண்டுமொரு கப்பல் கடற்கொள்ளையர்களினால் கடத்தல்

இலங்கையர்களுடன் பயணித்த மற்றுமொரு சரக்கு கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து ஈரான் நோக்கி பயணித்த குறித்த கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

5 வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெறும் கட்சிகளின் வாக்குகள் எண்ணப்படமாட்டாது

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சிகளின் வாக்குகள் கணக்கிடப்படமாட்டாது என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நேர வீண் விரயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் »

அம்பாறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பாறை வீரகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அம்பாறை சிறிலங்கா காவல்துறை தெரிவிக்கின்றது. மேலும் »

இன்று சர்வதேச காசநோய் தினம்

சர்வதேச காசநோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24ம் திகதி காசநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. காசநோயால் பாதிக்கப்பட்டு இன்று உலகில் 1.7 மில்லியன் மக்கள் ஆண்டு தோறும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியை தேர்தலில் போட்டியிட வைத்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தான்: நக்கீரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிளவு தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் தமிழத்தேசிய சக்திகளிடையே ஒரு பிளவை – ஒவ்வாமையை தோற்றுவித்திருக்கிறது. இந்த இக்கட்டான நிலையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிக்கும் திரு நக்கீரனிடம் சில குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் விடைகாணும் நேர்காணல். மேலும் »

கஜேந்திரகுமார் அணி அடுத்தகட்ட அரசியலுக்கான தொடக்கமா? – முத்துக்குமார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும் »

தமிழ் மாணவர்களுக்கு சிங்களமொழியில் கல்வி

மாத்தறை மாவட்டதின் தவளம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிராமத்தில்  கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு பிரித்தானியா விருது

சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு ஊடகவியலாளருக்கான அனைத்துலக விருதை வழங்குவதற்கு பிரித்தானியா பரிந்துரைத்துள்ளது. மேலும் »

பொன்சேகாவுக்கு இயற்கை மரணம் ஏற்படுத்த அரசு முயற்சி – ஜே.வி.பி.

இராணுவத்தினரால் தடுத்துவைக்கப் பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கான உணவு மற்றும் காற்றோட்ட வசதிகளைத் தடுப்பதன் மூலம் அரசு அவர் இயற்கை மரணம் எய்தும் சூழ்நிலையை உருவாக்குகிறது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் »

குடாநாட்டில் தேர்தல் திருவிழா பொதுமக்கள் பாராமுகம்

அடேங்கப்பா! தேர்தல் திருவிழாவில் யாழ். குடாநாடு வண்ணத்திரையாக காட்சி அளிக்கின்றது.சுவர்கள் எங்கும் வேட்பாளப் பெருமக்களின் திருவுருவப்படங்கள். பார்க்க மகிழ்ச்சியா கத்தான் இருக்கிறது. எங்கட நாட்டில இப்படியும் நடக்கிறது. மேலும் »

சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது!

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மேலும் »

நயினாதீவு நாகவிகாரைப் பகுதியை புனிதப் பிரதேசமாக்க முயற்சி

நயினாதீவு நாகவிகாரைப் பகுதியைப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் »

பௌத்த மதத்தை அவமதித்தமையினால் அகோனின் விசா நிராகரிப்பு

சிறிலங்காவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைதரவிருந்த பிரபல சர்வதேச பாடகரான அகோனின் விசா சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் »

எமது பிரசாரத்துக்கு ஈ.பி.டி.பியினரே இடையூறு விளைவித்தனர் ஐ.தே.க. வேட்பாளர்

ஊர்காவற்றுறையில் நாம் பிரசாரத்தில் ஈடுபட்ட போது ஈ.பி.டி.பி. இயக்கத் தினரே எமக்கு இடை யூறு விளைவித்த னர். அவர்களை எமது பிரசாரப் பணிகளைத் தடுக்க முயன்றனரே தவிர எமக்கும் பொது மக்களுக்குமிடையில் எத்தகைய முறுகல் நிலையும் ஏற்படவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை  வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ் வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார். மேலும் »

உலகெங்கும் உள்ள தமிழ் எதிலிகள் திருப்பி அனுப்பப்படலாம்: அமெரிக்க தமிழர் செயலவை

மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து முகிழ்த்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக