செவ்வாய், 23 மார்ச், 2010

மாவீரன் பகத்சிங் வீரவணக்க நாள் இன்று 1931 மார்ச் 23

மாவீரன் பகத்சிங் வீரவணக்க நாள் இன்று 1931 மார்ச் 23

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், இந்திய ஆதிக்கசாதியினரையும் எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் போராளிகள் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் வீரவணக்க நாள்(1931 மார்ச் 23) இன்று. மேலும் »

எம்.வி.சி ஊடக வலையமைப்பின் தாக்குதல்காரர்கள் பிணையில் விடுதலை

எம்.ரி.வி. எம்.வி.சி ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீதும் அதன் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொம்பனி வீதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 16பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி உண்ணாநிலைப்போராட்டம்

[இணைப்பு] உலகச்செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ் மொழியினை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆக்கவேண்டும், பெயர் பலகையினை தமிழ் மொழியில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் 30 வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் »

தியாகி திலீபன் நினைவுத் தூபி சிங்களக் காடையர்களால் அழிப்பு

சிதைத்து  அழிக்கப்பட்ட நிலையில்

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவுத் தூபி சிங்கள காடையர்களால் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி பான் கீ மூன் அமைக்கும் நிபுணர்கள் குழுவை தடுக்க வாய்ப்பு

சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. மேலும் »

போரின் கொடூரத்தை உணர்ந்தவர்கள் தமிழ் தேசியத்தை என்றும் கைவிடுவதில்லை: திருலோகமூர்த்தி

இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பொய்ப்பரப்புரைகள், அரசின் கெடுபிடிகள் என பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மக்கள் தமிழ் தேசியத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை கை விடவில்லை. மேலும் »

ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்!

முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திய அரசு மீதான அதிருப்திகள் அதிகரித்தே செல்கின்றது. மேலும் »

ஜெனீவா ஐ.நா அலுவலகத்தில் தமிழர்களை அச்சுறுத்தும் சிங்களவர்களின் செயல்கள்

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் நுழைவாயிலில் சிங்களவர்கள் கூடி நின்று அங்கு செல்லும் தமிழர்களை நிழற்படம் எடுத்து அச்சுறுத்துவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் »

இரவில் பெண் அதிகாரிகள் துணையின்றி அனோமாவிடம் 8 மணி நேர விசாரணை

தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடம் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நேற்று திங்கட்கிழமை வரை இரவில் பெண் அதிகாரிகள் துணையின்றி கிட்டத்தட்ட 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் »

யாழில் சிங்கள மொழியில் மட்டும் நடத்தப்பட்ட நிகழ்விலிருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு

நேற்று திங்கட்கிழமை நல்லூரில்  சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் திறப்புவிழாவானது சிங்கள மொழியில் மட்டுமே  நடந்ததால் யாழ் ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்தனார். மேலும் »

சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க பிரார்த்தனை

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் சிறி சிறி ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரிற்கு 20.03.2010 சனிக்கிழமை மாலை வருகைதந்து பிராத்தனையை முன்னின்று நடாத்தினார். மேலும் »

மகிந்தவின் ஆட்சி நாட்டிற்கு ஒவ்வாத போலியான அரசாங்கம்: தம்பர அமில தேரர்

சிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராசபக்சேவின் ஆட்சி நாட்டிற்கு ஒவ்வாத போலியான அரசாங்கம் எனவே, இதனை விரட்டியடிக்க பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையின் கௌரவத்தை பாதுகாப்பது சகல இன மக்களினதும் பொறுப்பாகும் என தேசிய பிக்கு தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். மேலும் »

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் வன்முறைகளை அவதானிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் »

ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி அநுரகுமார திசநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றும் நாளையும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் »

ஈழப்போராட்டத்தை வணிகமாக்கி பணம் பண்ணும் தமிழக ஊடகங்கள்

பெரும் உயிர் தியாகங்களுடனும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்ட ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தையும், கடந்த மே மாதத்திற்குப் பின்னான நிகழ்வுகளையும் தமது வணிக நோக்கத்திற்கான செய்திகளாக மட்டும் பார்த்துப் பரபரப்பான செய்தித் தலைப்புகளாக்கி பணம் பண்ணுவதிலேயே சில ஊடகங்கள் (குறிப்பாகத் தமிழக ஊடகங்கள்) குறியாய் இருப்பது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் »

வாடகை வீட்டுச் சமாச்சாரம் நீதிபரிபாலனம் தலையிட வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அதிரடிச் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையைத் தருகின்றன. தென்பகுதி மக்கள் இலட்சக் கணக்கில் யாழ்ப் பாணத்துக்கு வருகை தருவது, நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கண்காட்சிக்குரிய இடம்போல் கூடுவது, திருவிழாக் காலங்கள் தங்கள் ஜீவனோபாயத்திற்காக சிறுவர்த்தகம் நடத்திய நல்லூர் வளாகத்தில் நடைபாதை வியாபரம் நடத்துவது, மேலும் »

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு. மேலும் »

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் – திருமலை முதன்மை வேட்பாளர் கௌரிமுகுந்தன்

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இரா.சம்பந்தனுக்கும் எமக்கும் எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது. இவ்வாறு  தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார். மேலும் »

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை வகுப்பு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கடந்த வாரம் முதல் இடம் பெற்று வந்து கலாசாலை ஆசிரிய மாணவாகளின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று அதிபரின் இடமாற்றத்தைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் »

கோஹேனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐநா முடிவு

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்து வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு எதிராக நியூயோர்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருந்தளித்தமை தொடர்பில் பாலிதகோஹேனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜநா தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக