தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நினைவுச் சின்னங்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »
இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அந்தந்த அலுவலகங்களில் அத்தாட்சிப்படுத்தப்படும் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. மேலும் »
சிறிலங்கா வந்துள்ள வங்களாதேச இராணுவ குழு வடபகுதிக்கு விஜயம்
சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வங்களாதேச உயர்மட்ட இராணுவ குழு இன்று வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உயர்மட்ட இராணுவ குழு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள வங்காளதேஷ் தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்
இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு. சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் »
தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன?
நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர். அவரின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இவையெல்லாம் இங்கு வியாக்கியானம் செய்யப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. மேலும் »
நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
ஈகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டித்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் »
வன்னியில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது ?
சிறிலங்காப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் »
சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம் – ஆதரவை விலக்க ஆயத்தமாகும் இந்தியா மற்றும் சீனா
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒருவரையறைக்கு அப்பால் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா, சீனா உட்பட சிறிலங்காவுக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகை பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
இந்தியா என்ற அடித்தளம் உருக்குலைந்த பிரமாண்டத்தைக் கண்டு அஞ்சுவதும், அதைத் தொழுவதும் கடைந்தெடுத்த ஈனத்தனம்!
தமிழ் தேசியம் வேறு, கட்சி அரசியல் வேறு என்பதைத் தற்போதும் சிலர் மறுதலித்து வருகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களுக்கானது. அதில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் என்பதே கிடையாது. தமிழ்த் தேசிய நலன் சார்ந்து எதையும் இழக்க, எதையும் எதிர்கொள்வதற்கான தியாக சிந்தனை உள்ளவர்களே தமிழ்த் தேசிய சிந்தனை வாதிகளாக இருக்க முடியும். மேலும் »
எமது விடுதலைக்கான வாசலை இந்தியா பூட்டி வைத்துள்ளது என்பதே உண்மையானது – இதயச்சந்திரன்
கனடாவில் இருந்து கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு நக்கீரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக வீரகேசரி வாரஏட்டின் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள பதிலை இங்கு தருகிறோம். மேலும் »
வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கு 750 புலமைப்பரிசில்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது
சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு 750 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. மேலும் »
நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்:எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்யவேண்டாமா? (ஈழநாதம்)
மே 31 – ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த, ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. மேலும் »
நாம் தமிழர் இயக்க கொடி அறிவிப்பு மாநாடு
இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சிக் கொடி அறிவிப்பு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார். மேலும் »
அநீதிக் கண்டு பொங்குவாய் – கண்மணி
தமிழ் நாடு எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது விளங்கவில்லை. தமிழ் நாட்டு அரசின் ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி மக்களை மதி மயங்க செய்ததா? அல்லது இலவச தொலைக்காட்சியின் தொடர்கள் அவர்களின் மூளையை முற்றிலுமாய் அழித்ததா? புரியவில்லை. மேலும் »
உரிமைக்காக போராடிய பழங்குடிமக்களும் நவீன இந்திய காட்டுமிராண்டிகளும்
உரிமை கேட்டு ஊர்வலம் வந்த பழங்குடி இனமக்களை கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக்கொன்றனர் நவீன இந்திய காட்டுமிராண்டிகள். இந்திய காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் இந்திய தேசத்தின் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் இந்திய அரசானது நிரூபித்துள்ளது. மேலும் »
பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே! – பழ.கருப்பையா
"மொழி என்பது என்ன? வெறுஞ் சத்தந்தானே! எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" - இவ்வாறு பேசியிருப்பவர் பெரியாரின் அண்ணன் பேரன்; ஈ.வே.கி. சம்பத்தின் மகன்; காங்கிரஸின் ஒரு கும்பலுக்குத் தலைவர்! ஈ.வே.கி.ச. இளங்கோவன்! மேலும் »
விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் அமைச்சரவை அமைப்பு: சமல் ராஜபக்ஸ
நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் அதிபர் அமைச்சரவையை அமைக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் »
மீண்டுமொரு கப்பல் கடற்கொள்ளையர்களினால் கடத்தல்
இலங்கையர்களுடன் பயணித்த மற்றுமொரு சரக்கு கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து ஈரான் நோக்கி பயணித்த குறித்த கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »
5 வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெறும் கட்சிகளின் வாக்குகள் எண்ணப்படமாட்டாது
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சிகளின் வாக்குகள் கணக்கிடப்படமாட்டாது என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நேர வீண் விரயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் »
அம்பாறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
அம்பாறை வீரகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அம்பாறை சிறிலங்கா காவல்துறை தெரிவிக்கின்றது. மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக