செவ்வாய், 2 மார்ச், 2010

[photos & audio] சீனாவின் ஆதிக்கத்தில் தமிழர்களின் கச்சத்தீவு

[படங்கள் செவ்வி] கச்சத்தீவு தேவாலய திருவிழாவிற்கு தமிழக உறவுகள் சென்ற பொழுது அங்கே சீன எழுத்துக்களுடைய கூடாரங்களையும் பொருட்களையும் கண்டுள்ளார்கள். அவர்கள் மீனகம் ஊடகத்துக்கு அளித்த செவ்வியும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Google Buzz
2 March 2010

இங்கு டேசா ரியா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கூடிய விரைவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Google Buzz
2 March 2010

அரசாங்கத்தில் 106 அமைச்சர்களும், அமைச்சரவையில் 50 அமைச்சர்களும் இருப்பதாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை உரிமையற்ற அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Google Buzz
2 March 2010

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்துடன் பேச்சுநடாத்த உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறும் அரசாங்கத்துடன் தமது ஒன்றியம் பேச்சு நடாத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றித்தின் சிறிலங்காவிற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Google Buzz
2 March 2010

வடபகுதியில் நீதிக்கட்டமைப்பை முழுமையாக நிறுவுவதற்கு சிறிலங்காவின் நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வடபகுதியில் நீதிக்கட்டமைப்பை செயற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது.

Google Buzz
2 March 2010

திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! பாரிஸ் ஈழநாடு. தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை சட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது.

Google Buzz
2 March 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைக்கும் முயற்சியில் தமது அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய தெரிவித்துள்ளார்.

Google Buzz
1 March 2010

எதிர்வரும் 03ம் திகதிக்கு முன்னதாக நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Google Buzz
1 March 2010

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராயுமாறு உயர் நீதிமன்றம் சிறிலங்காவின் சட்டமா அதிபருக்கு இன்று அறிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

இன்று நடைபெறவிருந்த ஊவா கல்வியல் கல்லூரிகளின் இறுதி தவணைப்பரீட்சைக்கான ஒரு தொகுதி வினாத்தாள்கள் காணமல் போயுள்ளன. இதனால் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகளும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Google Buzz
1 March 2010

யுத்தம் காரணமாக வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தும் பணியில் மேலும் ஒரு கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன், பள்சைப்பள்ளி ஆகிய பகுதிகளிலும் முல்லைத்திவு மாவட்டத்தில் நெடுங்கேணிப்பகுதியிலும் இந்த பணிகள் இடம்பெற்றுவருவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Google Buzz
1 March 2010

எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களது இலக்கங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
1 March 2010

சிறிலங்காவில் தொடரூந்து சங்கத்தின் 6 பிரதான தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளதாக தொடரூந்து தொழிலாளர் சங்கத்தின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

தேர்தல் தினத்தை அண்மித்து மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றங்கள் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புக்களை பதிக்கலாம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட முயற்சிப்பதனை கண்டித்து ஆர்ப்பட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

Google Buzz
1 March 2010

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அவசியமெனில் அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் அதுசம்பந்தமாக விண்ணப்பிக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
1 March 2010

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு – கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

Google Buzz
28 February 2010

சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் பொதுமக்களின் ஒரு சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது. இதுவரை காலமும் நகரப் புற மக்களே இந்நோயின் தாக்கங்களுக்கு உள்ளாகி வந்தார்கள். தற்போது இதன் தாக்கம் கிராமப் புறங்களிலும் காணப்படுகின்றது.

Google Buzz
28 February 2010

கண்டி கடுகன்னாவை பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சிறுவன் ஒருவன் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

Google Buzz
28 February 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினைமேற்கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ம் திகதி வெளியிடப்படும்.

Google Buzz
28 February 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக