பிரித்தானியாவில் கடந்த 24ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட "உலகத் தமிழர் பேரவை" அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசுத் தலைவர் வேட்பாளரும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவிற்கு மிகவும் நெருங்கியவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டார்.
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதித் தருணங்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதி காரிகள் இருவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஐ.நா வின் தற்போதைய அதிகாரி. மற்றவர் ஏற்கனவே இலங்கையில் ஐ.நா. அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்துடன் பேச்சுநடாத்த உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறும் அரசாங்கத்துடன் தமது ஒன்றியம் பேச்சு நடாத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றித்தின் சிறிலங்காவிற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! பாரிஸ் ஈழநாடு. தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை சட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது.
மேலதிக செய்திகள்
- 3ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் விளம்பரங்களை அகற்றுமாறு கோரிக்கை
- எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை ஆராயுமாறு நீதிமன்றம் கோரிக்கை
- வினாத்தாள்கள் மாயம் – பரீட்சைகள் இரத்து
- வன்னியில் ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றம் – சிறிலங்கா அரசு
- வேட்பாளர்களது இலக்கம் வழங்கும் பணி இன்று ஆரம்பம்
- தொடருந்து பணியாளர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்
- இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சாத்தியம் – தேர்தல் ஆணையம்
- போராளிகளை பராமரிக்க போதிய பணமில்லை பிச்சை கேட்கும் சிறிலங்கா
- பிரித்தானியாவின் நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
- வேட்பாளர்களுக்கு தேவையெனில் பாதுகாப்பு – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
- நமது கண்ணோட்டம்: ஆரோக்கியமற்ற ஆபத்தான ; அபத்தமான போக்கு…
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக