திங்கள், 22 மார்ச், 2010

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் – திருமலை முதன்மை வேட்பாளர் கௌரிமுகுந்தன்

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் – திருமலை முதன்மை வேட்பாளர் கௌரிமுகுந்தன்

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இரா.சம்பந்தனுக்கும் எமக்கும் எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது. இவ்வாறு  தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.மேலும் »

பச்சை ரத்தம் பறிமாறிடுவோம் – கண்மணி

காங்கிரஸ் கட்சி மேடை தமிழின பழிப்புக்கு உலைகளமாக உருமாறத் தொடங்கியிருக்கிறது. இது, கடந்த கால காங்கிரஸ் திமிரின் எச்சங்கள். தமிழினத்தை மட்டுமல்ல, இந்தியாவின் தேசிய இனங்களை சூறையாடி, இந்தியன் என்கின்ற அடையாளத்தை அழுத்தமாய் முத்திரை குத்த விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் தொடங்கி, இன்றுவரை தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் இன ஒழிப்பு மேலும் »

சிரச,எம்.ரி.வி. தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதல்:16 பேர் கைது

சிறிலங்காவில் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச மற்றும் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களின், கொழும்பு பிரேபுரூக் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது  இன்று  பிற்பகல் 3.45 மணியளவில்  குழு ஒன்றினால் கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் »

சிறையில் இருந்து எங்கள் குரல்…? – ராஜ் சுதன்

சிங்கள சிறையில் இருந்து
எங்கள் குரல் கேட்கலையோ?
காடையர் கூட்டம்
இங்கே இராணுவ சீருடையில். மேலும் »

இன்று சர்வதேச நீர் தினமாகும்

உலக நீர் தினம் இன்று சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத விடயமாக கருதப்படும் நீரின் மகத்துவத்தை உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மேலும் »

யாழில் மாணவர்களிடையே கைகலப்பு ஒருவர் பலி

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.மேலும் »

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு வேண்டுகோள்

கடந்த 8 மாதங்களாக தமது ஏதிலிகள் அந்தஸ்து கோரிய விண்ணப்பங்களின் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 760 தமிழ் ஏதிலிகள் நிலை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான உயர் அதிகாரிகள் உடனடியாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.மேலும் »

இத்தாலி வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பில் 98.8 வீதமானோர் ஆம் என ஆதரவு

இத்தாலியில் அண்ணளவாக 4500 வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களில் 3680 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆம் என்று 98.8 வீதமான மக்களும் இல்லை என்று 1.2 வீதமான மக்களும் வாக்களித்துள்ளனர்.மேலும் »

கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் தடை – வேட்பாளர் திருலோகமூர்த்தி

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட சிறீலங்காப் படையினர் தடை விதித்து வருகின்றனர். மேலும் »

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவு காணப்பட வேண்டும்: பிரித்தானியா

சிறிலங்கா தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இல்லை என்ற அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்துடன் தமக்கு உடன்பாடு இல்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டனின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் லியால் கிறாண்ட் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »

பான் கீன் மூனுக்கு எதிராக செயற்பட்ட 16 பேருக்கு சிறீலங்கா அரசாங்கம் விருந்துபசாரம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 இலங்கையர்களுக்கு, சிறிலங்கா அரசாங்கம் விருந்துபசாரம் அளித்துள்ளது. மேலும் »

யாழில் பெண்களுக்கான கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகள்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே முதல் தடவையாக நடைபெற்றுவரும் பெண்களுக்கான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளின்   இறுதிப் போட்டிகள் 23 ம் திகதி  செவ்வாயக்கிழமை நன்பகல் ஒரு மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லாரி மைதானத்தில் வலிகாமம் உடற்க்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.நடராசா தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும் »

யாழ். மாநகர சபைக்கு அடிக்கல் அதுவே யாழ். நகரை அளகாபுரியாக்கும் "கல்'

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெறவுள்ளது.யாழ். பிரதான வீதியில் யாழ். பொதுநூலகம் மற்றும் நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத் தில் இருந்த யாழ்ப்பாண மாநகர சபையின் பழைய கட்டிடம் யுத்தத்தின் கோரப்பிடிக்கு இரையாகிப் போனது. மேலும் »

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பட்டியல் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

சிறீலங்கா அரச படையினரின் புலனாய்வுத்துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதல் பட்டியல் சிறீலங்காவில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் »

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன.மேலும் »

புனர்வாழ்வு என்ற பெயரில் போராளிகள் படையினரால் துன்புறுத்தல்

புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் 11,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளித்தொடர்புகள் அற்ற சிறப்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

இந்திய அரசு வரைந்துள்ள கோட்டுக்குள் சிக்கித்திணறி வரும் கூட்டமைப்பினர் – சிறீகாந்தா

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இடதுசாரி விடுதலைமுன்னணிக் கட்சி சார்பில் வேட்பாளருமாகப் போட் டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா "உதயனுக்கு" வழங்கிய செவ்வி இது. மேலும் »

சிறிலங்கா அரசை ஆட்டம் காண வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு – கலாநிதி ராம் சிவலிங்கம்

நாடு கடந்த தமிழீழ் அரசுதான் எமது இறுதிப் போரின் வடிவம், எமது மூன்றாம்கட்டப் போர். இந்த புதுமைமிக்க அரசியல் செயற்பாடு, உலக அரங்கில் இது ஓர் சாத்தியமான இராஜதந்திர நகர்வு என்று நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா செயற்பாட்டாளர் கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஜெனீவாவில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் சிறீலங்காவில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் சிங்களவர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். மேலும் »

கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்

கொக்காவில் பிரதேசம் சிங்கள இராணுவமயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக