திங்கள், 22 மார்ச், 2010

சிறிலங்கா அரசை ஆட்டம் காண வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு – கலாநிதி ராம் சிவலிங்கம்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பட்டியல் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

சிறீலங்கா அரச படையினரின் புலனாய்வுத்துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதல் பட்டியல் சிறீலங்காவில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் »

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன.மேலும் »

புனர்வாழ்வு என்ற பெயரில் போராளிகள் படையினரால் துன்புறுத்தல்

புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் 11,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளித்தொடர்புகள் அற்ற சிறப்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

இந்திய அரசு வரைந்துள்ள கோட்டுக்குள் சிக்கித்திணறி வரும் கூட்டமைப்பினர் – சிறீகாந்தா

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இடதுசாரி விடுதலைமுன்னணிக் கட்சி சார்பில் வேட்பாளருமாகப் போட் டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா "உதயனுக்கு" வழங்கிய செவ்வி இது. மேலும் »

சிறிலங்கா அரசை ஆட்டம் காண வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு – கலாநிதி ராம் சிவலிங்கம்

நாடு கடந்த தமிழீழ் அரசுதான் எமது இறுதிப் போரின் வடிவம், எமது மூன்றாம்கட்டப் போர். இந்த புதுமைமிக்க அரசியல் செயற்பாடு, உலக அரங்கில் இது ஓர் சாத்தியமான இராஜதந்திர நகர்வு என்று நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா செயற்பாட்டாளர் கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஜெனீவாவில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் சிறீலங்காவில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் சிங்களவர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். மேலும் »

கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்

கொக்காவில் பிரதேசம் சிங்கள இராணுவமயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் »

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு

தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் போராளிகளுக்கு தங்க இடமும் , உணவும் கொடுத்தவர்களில் ஒருவரான  திருமதி சி.மாதம்மாள் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது இறுதி நிகழ்வினை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர். மேலும் »

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி

சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார். மேலும் »

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும் – கண்மணி

மகிந்தாவிற்கு எப்படி வந்தது இந்த தைரியம்? தமிழ் தேசிய இயக்கத் தலைவர்கள், புலிகள் கோரிய தாய் தமிழகம் குறித்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு துணிச்சலை தர, நமது தலைவர்களே பெரும் காரணமாகி விட்டார்கள். மேலும் »

தமிழ் கொலைக் களம் – இளமாறன்

நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. மேலும் »

ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னிணியின் சார்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய நான் எனது கொள்கை நிலைப்பாடு பற்றியும், என்மீது சேறு பூசும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் வதந்திகள் தொடர்பாகவும், எனது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டமைப்பு தலைமையின் தவறான நடவடிக்கைகள் காரணமாக நாம் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டமை தொடர்பாகவும்  தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மேலும் »

பதினேழாவது சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் அரசியல் யாப்பில் 17வது அரசியல் சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது.மேலும் »

பொதுவான குற்றவாளியை விட மோசமாக நடத்தப்படுகிறேன்" : சரத் பொன்சேகா

பொதுவான குற்றவாளியை காட்டிலும் தாம் மோசமாக நடத்தப்படுவதாக கொழும்பில் உள்ள கடற்படைத்தளத்தில் கடந்த 6 வார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் »

கனடியத் தமிழர் பேரவை எங்கே போகின்றது?

கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்ற உன்னத உயரிய நோக்குடன் கனடியத் தமிழர் பேரவையை (Canadian Tamil Congress)  சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. மேலும் »

தமிழ்த்தரப்பு பேசும் விடயத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்ஜனாதிபதி கூறமுடியாது: சம்பந்தன்

"தமிழ் மக்களின் பிரதிநிதி என்ன பேசவேண்டும் என்பதை மக்கள் தான் கூறவேண்டுமே தவிர, ஜனாதிபதி கூறமுடியாது".என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்றத் தேர்தலில் தெளிவான முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் »

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் »

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் – வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் ஒன்றை வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. மேலும் »

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு சிறீலங்கா இணங்கியுள்ளது?

அவசரகாலச்சட்டத்ததையும், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களையும் மறுஆய்வு செய்ய தாம் தயாராக இருப்பதாக சிறீலங்கா அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நாளை வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் துவக்கம்

சிறிலங்காவில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் நாளைய தினம் துவங்கவுள்ளதாக சிறிலங்காவின் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் செயலகம் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் இவைகளை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக