செவ்வாய், 30 மார்ச், 2010

மாம்பழமா? தோடம்பழமா? என்ற பெயர்கள் முக்கியமல்ல – வரதராஜன்

மாம்பழமா? தோடம்பழமா? என்ற பெயர்கள் முக்கியமல்ல – வரதராஜன்

மாம்பழமா? தோடம்பழமா? என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தெரிவித்துள்ளார். மேலும் »

ஆஸ்திரேலியாவில் மூன்று தமிழர்களுக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு – விசாரணைகள் தொடர்பில் நீதிபதிகள் விசனம்

விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றசாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு முடிவுகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடர்பில் பல்வேறுபட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் »

வலிகாமத்தில் முதிய பெண்மணி கத்தியால் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய பொருட்களினால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல – இரா. சம்பந்தன்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு சம்பந்தன் உரையாற்றும் போதே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல என்று கூறினார். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைப்போம் என்கிறார் ரோகித போகல்லாகம

"நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்" என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். மேலும் »

TNA‐TNPF ஆகிய இரு தரப்புக்களையும் யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு

யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதியினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. மேலும் »

அமெரிக்காவின் விசேட படைப்பிரிவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்பு

சிறிலங்காவின் உயர் படைநிலை அதிகாரிகளுக்கு தமது நாட்டின் தளங்களில் வைத்து சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, இவ்விரு நாடுகளினதும் விசேட படைப்பிரிவினர் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கூட்டுப் பயிற்சி நடவடிக்கைக்காக அமெரிக்காவின் Air Mobile Units பிரிவை தமது நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »

கொழும்பில் ஊடகவியலாளர்களின் அறப்போராட்டம்

சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று காலை 10.30 மணியளவில் ஊடகவியலாளர்களினால் அறப்போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் »

பழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி

பனியும் குளிர்காற்றும் இல்லையென்றால் வசந்தத்தின் வெம்மையும், மனமும் எப்படி இருக்க முடியும்? துன்பங்கள் என்னை பக்குவப்படுத்தி எஃகு ஆக்கின. அவை மேலும் என் இதயத்துக்கு வலுவூட்டின. விலங்குகள் எனது கை, கால்களை இறுக பிணைக்கின்றன. மேலும் »

சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத விற்பனை பிரித்தானியா வருத்தம்

சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அமைப்புக்களின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் »

பிரதேசவாதங்களைக் கடந்து தேசியத்திற்காய் உழைக்க வேண்டும் – கெளரிமுகுந்தன்

தமிழ் மக்களும், தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தலைமைகளும் பிரதேசவாதங்களை மறந்து தமிழ்த் தேசியத்திற்காகவும், தேசியக் கொள்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் »

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த, கட்சி உறுப்பினர் இருவருக்கு அரசாங்கம் 80 லட்ச ரூபாவை வழங்கியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »

தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டி ஒட்டி மகிந்த தரப்பு சாதனை

சிறிலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறிலங்கா அரச தரப்பு அதிக வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புத்தவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டிகளை ஒட்டி ஆளும் தரப்பு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

சிறீலங்கா திரும்பிய இந்திய "பொம்மை" வரதராஜ பெருமாள்

இந்தியாவில் தஞ்சமடைந்து மத்திய உளவுப் பிரிவுகளின் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த சிறிலங்காவின் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் சிறிலங்கா திரும்பியுள்ளார். மேலும் »

இம்முறை தாம் ஆட்சி அமைப்போம் – ஐ.தே.மு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் பின் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் »

தேசிய பிரச்சனைக்கு அரசாங்கத்திடம் தீர்க்கமான நிலைப்பாடு இல்லை – ஜே.வி.பி

தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கத்திடம் தீர்க்கமான ஒரு நிலைப்பாடு இல்லையென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளது. மேலும் »

அம்பாந்தோட்டை துறைமுக சீன உதவி தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை – இந்தியா

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன உதவி தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் »

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டதாக முன்னாள் சிறிலங்கா தரைப்படைத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

சுழிபுரம் மேற்கு கல்விளான் வயல் பகுதி கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று நண்பகல் மீட்கப்பட்டது.  இது குறித்து கிராமசேவகர் மூலம் மக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தின் அருகில் இருந்து பயணப் பை ஒன்றைக் கைப்பற்றினர். மேலும் »

ஈ.பி.டி.பியினரால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக