யாழ்.பூநகரி படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
யாழ்ப்பாணத்திற்கும் – பூநகரிக்குமிடையே படகு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாக வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்றல் மாதம் இந்த படகுசேவை துவக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் »
மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! பாரீஸ் ஈழநாடு
கடந்த தேர்தலில் களமிறங்கியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை இருந்தது. இலட்சியம் இருந்தது. உண்மை இருந்தது. மக்கள் சக்தி என்ற மகத்தான ஆதரவு இருந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமே இழந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. மேலும் »
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது!
பொதுத் தேர்தல் திருவிழாவில் நாடு மூழ்கியுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறும் வாக்கெடுப்போடு அந்த பிராக்கு முடிந்துவிட்டது.'அதேநேரம் திருவிழாக் காலக் கடைகள் போல வேட்பாளர்களும் காணாமல் போய்விடுவார்கள். மேலும் »
ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது
இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
சக்தி, சிரச ஊடக நிறுவனத்திற்கு விளம்பரங்களை வழங்கக்கூடாது என்ற இணக்கத்தை மீறியுள்ளனர் – விமல் வீரவங்ச
சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் அந்த ஊடக நிறுவனத்திற்கு கூட்டமைப்பின் தேர்தல் பிரசார விளம்பரங்களை வழங்குவதில்லை எனவும் ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பட்டுடனான தீர்மானத்தை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் மீறியிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சுமத்தியுள்ளார். மேலும் »
தந்தை செவ்வாவின் நினைவு தின நிகழ்வு
ஈழத்து காந்தி என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகதர்த்த நினைவு நிகழ்வு மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம் அந்தொனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் நடைபெறவுள்ளது. மேலும் »
இப்பொழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாது – தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அழைப்பு
வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி கனடாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடாத்தும் தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கும் ஒன்றுகூடல். மேலும் »
மாம்பழமா? தோடம்பழமா? என்ற பெயர்கள் முக்கியமல்ல – வரதராஜன்
மாம்பழமா? தோடம்பழமா? என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தெரிவித்துள்ளார். மேலும் »
ஆஸ்திரேலியாவில் மூன்று தமிழர்களுக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு – விசாரணைகள் தொடர்பில் நீதிபதிகள் விசனம்
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றசாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு முடிவுகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடர்பில் பல்வேறுபட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் »
வலிகாமத்தில் முதிய பெண்மணி கத்தியால் குத்திக்கொலை
யாழ்ப்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய பொருட்களினால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல – இரா. சம்பந்தன்
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு சம்பந்தன் உரையாற்றும் போதே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல என்று கூறினார். மேலும் »
நாடு கடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைப்போம் என்கிறார் ரோகித போகல்லாகம
"நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்" என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். மேலும் »
TNA‐TNPF ஆகிய இரு தரப்புக்களையும் யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு
யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதியினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. மேலும் »
அமெரிக்காவின் விசேட படைப்பிரிவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்பு
சிறிலங்காவின் உயர் படைநிலை அதிகாரிகளுக்கு தமது நாட்டின் தளங்களில் வைத்து சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, இவ்விரு நாடுகளினதும் விசேட படைப்பிரிவினர் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கூட்டுப் பயிற்சி நடவடிக்கைக்காக அமெரிக்காவின் Air Mobile Units பிரிவை தமது நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »
கொழும்பில் ஊடகவியலாளர்களின் அறப்போராட்டம்
சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று காலை 10.30 மணியளவில் ஊடகவியலாளர்களினால் அறப்போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் »
பழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி
பனியும் குளிர்காற்றும் இல்லையென்றால் வசந்தத்தின் வெம்மையும், மனமும் எப்படி இருக்க முடியும்? துன்பங்கள் என்னை பக்குவப்படுத்தி எஃகு ஆக்கின. அவை மேலும் என் இதயத்துக்கு வலுவூட்டின. விலங்குகள் எனது கை, கால்களை இறுக பிணைக்கின்றன. மேலும் »
சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத விற்பனை பிரித்தானியா வருத்தம்
சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அமைப்புக்களின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் »
பிரதேசவாதங்களைக் கடந்து தேசியத்திற்காய் உழைக்க வேண்டும் – கெளரிமுகுந்தன்
தமிழ் மக்களும், தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தலைமைகளும் பிரதேசவாதங்களை மறந்து தமிழ்த் தேசியத்திற்காகவும், தேசியக் கொள்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் »
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த, கட்சி உறுப்பினர் இருவருக்கு அரசாங்கம் 80 லட்ச ரூபாவை வழங்கியுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »
தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டி ஒட்டி மகிந்த தரப்பு சாதனை
சிறிலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறிலங்கா அரச தரப்பு அதிக வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புத்தவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டிகளை ஒட்டி ஆளும் தரப்பு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக