ஞாயிறு, 21 மார்ச், 2010

கொளத்தூரில் பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு

தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் போராளிகளுக்கு தங்க இடமும் , உணவும் கொடுத்தவர்களில் ஒருவரான  திருமதி சி.மாதம்மாள் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது இறுதி நிகழ்வினை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர். மேலும் »

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி

சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார். மேலும் »

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும் – கண்மணி

மகிந்தாவிற்கு எப்படி வந்தது இந்த தைரியம்? தமிழ் தேசிய இயக்கத் தலைவர்கள், புலிகள் கோரிய தாய் தமிழகம் குறித்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு துணிச்சலை தர, நமது தலைவர்களே பெரும் காரணமாகி விட்டார்கள். மேலும் »

தமிழ் கொலைக் களம் – இளமாறன்

நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. மேலும் »

ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னிணியின் சார்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய நான் எனது கொள்கை நிலைப்பாடு பற்றியும், என்மீது சேறு பூசும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் வதந்திகள் தொடர்பாகவும், எனது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டமைப்பு தலைமையின் தவறான நடவடிக்கைகள் காரணமாக நாம் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டமை தொடர்பாகவும்  தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மேலும் »

பதினேழாவது சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் அரசியல் யாப்பில் 17வது அரசியல் சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

பொதுவான குற்றவாளியை விட மோசமாக நடத்தப்படுகிறேன்" : சரத் பொன்சேகா

பொதுவான குற்றவாளியை காட்டிலும் தாம் மோசமாக நடத்தப்படுவதாக கொழும்பில் உள்ள கடற்படைத்தளத்தில் கடந்த 6 வார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் »

கனடியத் தமிழர் பேரவை எங்கே போகின்றது?

கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்ற உன்னத உயரிய நோக்குடன் கனடியத் தமிழர் பேரவையை (Canadian Tamil Congress)  சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. மேலும் »

தமிழ்த்தரப்பு பேசும் விடயத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்ஜனாதிபதி கூறமுடியாது: சம்பந்தன்

"தமிழ் மக்களின் பிரதிநிதி என்ன பேசவேண்டும் என்பதை மக்கள் தான் கூறவேண்டுமே தவிர, ஜனாதிபதி கூறமுடியாது".என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்றத் தேர்தலில் தெளிவான முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் »

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் »

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் – வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் ஒன்றை வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. மேலும் »

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு சிறீலங்கா இணங்கியுள்ளது?

அவசரகாலச்சட்டத்ததையும், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களையும் மறுஆய்வு செய்ய தாம் தயாராக இருப்பதாக சிறீலங்கா அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நாளை வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் துவக்கம்

சிறிலங்காவில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் நாளைய தினம் துவங்கவுள்ளதாக சிறிலங்காவின் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் செயலகம் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் இவைகளை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி முன்வைக்கின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற தீர்வுதிட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பது பற்றியும் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். மேலும் »

வடக்கு-கிழக்கில் வாக்குகள் சிதறும் சூழ்நிலை:லங்காதீப

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகள், அக் கட்சிகளில் பிளவுபட்டு நிற்கும் அணிகள் மற்றும் மக்கள் அபிமானம் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றவாறு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் அமையும் பின் புலம் தொடர்பாக ஆராய்கிறது இக்கட்டுரை. பிரியந்த ஹேவகே "லங்காதீப' பத்திரிகையில் எழுதிய கட்டுரை யின் தமிழ் வடிவம் இது. மேலும் »

சிறிலங்காவின் தேர்தலில் அரச உடைமைகளைப் பயன்படுத்துவது அதிகரிப்பு

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கி்ன்றன. தேர்தல் சட்டமீறல்கள் குறித்து தமக்கு 102 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

தேடிக் கண்டு கொள்வோம் தேடற்கரிய வேட்பாளரை

நாடாளுமன்றத் தேர்தல்-2010 யாழ்.மாவட் டத்தில் பதினைந்து அரசியல் கட்சிகளும் பன்னிரண்டு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடு கின்றன. ஆள்களின் எண்ணிக்கையில் கூறுவதாயின், 324 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒன்றரை அடி நீளமான வாக்குச் சீட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் »

"இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்" – மார்ச் 21

அனைத்து விளையாட்டு நிறுவனங்களும்  பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும்  இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார். மேலும் »

சிறீலங்கா தமிழ் ஏதிலிகளின் பாதுகாப்புக்களை குறைப்பது ஆபத்தானது: அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை சபை

சிறீலங்காவில் இருந்து வெளிநாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்களை ஐ.நாவின் ஏதிலிகளுக்கான அமைப்பு குறைக்கப்போதவாக அறிவித்துள்ளது. ஆனால் இது தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் நடவடிக்கை சபை தெரிவித்துள்ளது. மேலும் »

எனது அரசியல் நோக்கம் மற்றும் கொள்கைகள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் முதன்மை வேட்பாளர் திரு சி.வரதராஜன்

எதிர்வரும் மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளர் திரு சி.வரதராஜன் அவர்கள் தனது கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அதனை இங்கு தருகிறோம். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக