ஞாயிறு, 21 மார்ச், 2010

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் »

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் – வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல் திட்டம் ஒன்றை வடபகுதியில் சிறிலங்கா அரசு துவக்கியுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. மேலும் »

நாளை வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் துவக்கம்

சிறிலங்காவில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் நாளைய தினம் துவங்கவுள்ளதாக சிறிலங்காவின் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் செயலகம் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் இவைகளை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

வடக்கு-கிழக்கில் வாக்குகள் சிதறும் சூழ்நிலை:லங்காதீப

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகள், அக் கட்சிகளில் பிளவுபட்டு நிற்கும் அணிகள் மற்றும் மக்கள் அபிமானம் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றவாறு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் அமையும் பின் புலம் தொடர்பாக ஆராய்கிறது இக்கட்டுரை. பிரியந்த ஹேவகே "லங்காதீப' பத்திரிகையில் எழுதிய கட்டுரை யின் தமிழ் வடிவம் இது. மேலும் »

சிறிலங்காவின் தேர்தலில் அரச உடைமைகளைப் பயன்படுத்துவது அதிகரிப்பு

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கி்ன்றன. தேர்தல் சட்டமீறல்கள் குறித்து தமக்கு 102 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

Boycott Sri Lanka Rally in USA

Successful Boycott Sri Lanka Rally in Washington DC area (Baltimore Inner Harbor) today from 11 AM – 4 PM.  About 15-20 Tamils (from both Eelam and Tamil Nadu) took part in this boycott enthusiastically. மேலும் »

தேடிக் கண்டு கொள்வோம் தேடற்கரிய வேட்பாளரை

நாடாளுமன்றத் தேர்தல்-2010 யாழ்.மாவட் டத்தில் பதினைந்து அரசியல் கட்சிகளும் பன்னிரண்டு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடு கின்றன. ஆள்களின் எண்ணிக்கையில் கூறுவதாயின், 324 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒன்றரை அடி நீளமான வாக்குச் சீட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் »

"இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்" – மார்ச் 21

அனைத்து விளையாட்டு நிறுவனங்களும்  பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும்  இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார். மேலும் »

சிறீலங்கா தமிழ் ஏதிலிகளின் பாதுகாப்புக்களை குறைப்பது ஆபத்தானது: அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை சபை

சிறீலங்காவில் இருந்து வெளிநாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்களை ஐ.நாவின் ஏதிலிகளுக்கான அமைப்பு குறைக்கப்போதவாக அறிவித்துள்ளது. ஆனால் இது தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் நடவடிக்கை சபை தெரிவித்துள்ளது. மேலும் »

எனது அரசியல் நோக்கம் மற்றும் கொள்கைகள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் முதன்மை வேட்பாளர் திரு சி.வரதராஜன்

எதிர்வரும் மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளர் திரு சி.வரதராஜன் அவர்கள் தனது கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அதனை இங்கு தருகிறோம்.மேலும் »

இலங்கைத் தமிழ் மக்கள் உரிமைகளை பெறுவதற்கு இந்தியா உதவுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவுகட்டவும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா உதவிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. மேலும் »

நோர்வே ஈழத்தமிழ் அவையின் வாழ்த்துச் செய்தி

இத்தாலி தேசத்தில் இன்று மார்ச் மாதம் 21ம்திகதி நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பிலும், மக்கள் பேரவை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலிலும் இத்தால் வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென நோர்வே ஈழத்தமிழர் அவை வேண்டி நிற்கின்றது. மேலும் »

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சிங்கள வியாபாரிகளின் தளங்கள்

யாழ்ப்பாண நகரிலும் நல்லூர் வீதியிலும், அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத வியாபாரத் தளங்களினால், நிரந்தர வியாபாரிகள் பாதிப்பு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் »

"சண்" மற்றும் "டெய்லி மெயில்" பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு

2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய ராச்சியத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பரமேஸ்வரன் உண்ணாவிரத நாட்களில்  "பிக் மக்" பேகர்களை தொடர்ந்து சாப்பிட்டதாக "சண்" மற்றும் "டெய்லி மெயில்" பத்திரிகைகள் குற்றச்சாட்டியிருந்ததாக தெரிவித்து, குறித்த  நிறுவனங்களுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும் »

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு (Federalism) என்பது ஒரு அருவருப்பான வார்த்தை: மகிந்தா ராஜபக்சா

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு (Federalism) என்பது சிறீலங்காவை பொறுத்தவரையில் ஒரு அருவருப்பான சொல், அது பிரிவினைக்கு வழிவகுக்கும். நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வீட்டுக்கு செல்லவேண்டுமானால் பெடரலிஸம் தொடர்பாக பேசினால் போதும் என சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா த ஸ்ரெய்ற் ரைம்ஸ் சிங்கப்பூர் என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.மேலும் »

தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது! இதில் பங்கெடுங்கள்! – பிரய்ன் செனிவரத்னா

'தமிழீழம்' மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, 'இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்' என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார். மேலும் »

ஈழ ஏதிலி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உண்மை கண்டறியும் குழு விசாரணை

கரூர் அருகே ஈழ ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை தமிழக காவற்துறையினர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகார் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்த உள்ளது. கடந்த 17.05.2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்தது. மேலும் »

சிங்கமும் எருதுகளும் – கண்மணி

இலங்கையில் அடுத்த மாதம் நடக்க இருக்கின்ற பொதுத் தேர்தல் உலக அரங்கில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் களம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து இன்று எதிர்பாராத நிலையை அடைந்திருக்கிறது. உலக அரங்கில் இந்த தேர்தலை எதிர்மறை, நேர்மறை கூற்றோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும் »

இந்தோனேசிய படகில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலிகளை விடுவிக்க ஒபாமா தலையிட வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம்

இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் உள்ள ஈழ ஏதிலிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினால் இது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று, பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் : மதியுரைக்குழுவின் இறுதி அறிக்கை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான இறுதி அறிக்கையின் தமிழ்வடிவம் நேற்று (19.03.2010) வெளியிடப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் பொழிப்பு கீழே தரப்படுகிறது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக