வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை – இதயச்சந்திரன்

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை – இதயச்சந்திரன்

இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் »

இந்தோனேசியா அரசு 254 தமிழர்களையும் வேறு எந்த நாட்டினரும் சந்திக்க அனுமதிக்கவிடாமல் அடைத்து வைத்திருப்பது உச்சகட்ட மனித உரிமை மீறல்: க.கிருஷ்ணசாமி

சென்னையில் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தோனேசியா அரசு 254 தமிழர்களையும் வேறு எந்த நாட்டினரும் சந்திக்க அனுமதிக்காமலும் ஐ.நா அகதிகள் அமைப்பு அதிகாரிகளையும் சந்திக்க விடாமல் அடைத்து வைத்திருப்பது உச்சகட்ட மனித உரிமை மீறலாகும் என்று கூறியுள்ளார். மேலும் »

தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம் சிங்களக் காடையர்களால் உடைக்கப்பட்டு வருகின்றது

போர்க்காலத்திலும் அதன் பின்னரும் அந்த வீட்டினை மிகப் பெறுமதியான பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்துவந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற மக்கள் அனைவரும்  வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. மேலும் »

தினக்குரல் ஆசிரியருக்கு ஆயுததாரி டக்ளஸ் பகிரங்க மிரட்டல்

ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அங்கயன் மீது இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டனர். இச்செய்தியை யாழ் தினக்குரல் பத்திரிகை தமது முற்பக்கச் செய்தியாகப் பிரசுரித்திருந்தமைக்கு சிறிலங்கா அரசின் துணை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் »

யாழ் பிரச்சார கூட்டத்தில் மக்கள்தொகை குறைவால் மகிந்த அதிருப்தி

இன்று யாழ்பாணத்தில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நானூறுக்கும் குறைவான மக்களே கலந்து கொண்டதால் இதனையடுத்து சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவு தெரியவருகிறது. மேலும் »

கருணாநிதிக்கு அண்ணா எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி,  கருணாநிதிக்கு அண்ணா எழுதிய கடிதம்.. மேலும் »

மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆதரவாளர்கள், ஆளுங்கட்சியினருடன் நாவலப்பிட்டியில் மோதல்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்டக் குழுத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் நாவலப்பிட்டி நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. மேலும் »

நான் தமிழீழத்தை சார்ந்தவன் – கண்மணி.

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் உண்மையான தமிழீழ விடுதலைக்கான போர் வீச்சமடைந்திருக்கிறது. கடந்த காலங்களில் நாம் களங்களில் பெற்ற வெற்றிகளும், அடைந்த தோல்விகளும், இழந்த உயிர்களும் நம்மை இந்த போர் முறையின் புதிய தத்துவத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. மேலும் »

பொதுமக்களுக்கு ஆபத்தான நாடாக சிறீலங்கா

ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் ஆபத்தான நாடாக சிறீலங்கா வேகமாக மாற்றம் பெற்று வருகின்றது என தென்னிலங்கை சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் »

வீரச்சாவடைந்ததாக கூறப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சி சேரலாதன் உயிருடன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக  தெரியவருகின்றது. மேலும் »

தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் மீது சிறீலங்கா அரசு வன்முறையை பிரயோகித்துள்ளது

சிறீலங்காவில் பணிபுரிந்துவரும் உதவி அமைப்புக்கள் மீது தொடர் வன்முறைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீதும் தனது வன்முறைகளை பிரயோகித்துள்ளது. மேலும் »

வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து திறந்தமடல்

என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில் இருபடுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் அரசுடன் துணைபோகும் ஆயுதக்குழுக்கள்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கருத்துக்களை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். மேலும் »

1300 சிறுவர்கள் பெற்றோரிடம் விடுவிப்பு

புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் அடங்கிய 1300 பேர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் »

சிறிலங்கா தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி நிறைவு

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலக்கான வாக்கு சீட்டுக்கள் அச்சடிக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது தயார்நிலையிலுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மேலும் »

போதைப் பொருள் வர்த்தகம் – குவைத் சிறையில் 69 இலங்கையர்

குவைத் நாட்டில் வைத்து சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள்  என்ற சந்தேகத்தில் போரில் 69 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 11பெண்களும் அடங்குவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

சிறிலங்காவில் H1N1 வைரஸ் தடுப்பு முயற்சி வெற்றி

சிறிலங்காவில் H1N1வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைககள் வெற்றியளித்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. மேலும் »

தனித்தனியாகக் செயல்பட்டாலும் புரிதலும் இணக்கமும் இருந்தால் தமிழீழத் தனி அரசு சாத்தியமே!

இறுதி யுத்தம் என்ற பெயரில் இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு சிங்களவன் நடத்திய தமிழின அழித்தொழிப்புப் போர் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவல்ல. தமிழீழ விடுதலைப் போரின் மூன்றாம் கட்ட அரசியல் யுத்தத்திற்கான ஆரம்பம். மேலும் »

தேசியக் கொள்கைகளை முன்னெடுப்போருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை ஆதரித்து, அதனை முன்னெடுப்பவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் »

யாழில் சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல்

மகிந்தவின் நேரடி வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் குழுவினர் மீது ஈபிடிபி நடத்திய தாக்குதலில் அங்கஜன் மயிரிழையில் உயித் தப்பியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் மூவர் ஈபிடிபியினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் »

இந்தோனேசியாவில் எலிக்கடிக்குள் ஈழ ஏதிலிகள்

ஆறு மாத காலமாக கப்பலிலேயே தங்கியிருக்கும் 31 சிறுவர்கள் உள்ளடங்கலாக 254 ஈழ ஏதிலிகளின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுவருகிறது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக