சனி, 6 மார்ச், 2010

தேசியத்தலைவரின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வெளிநாடு பயணம்

தமிழ் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார்.

Google Buzz
6 March 2010

சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ.நாவில் வேலை எடுக்க  நம்பியாரின் பரிந்துரையை கேட்டுள்ளார்.

Google Buzz
6 March 2010

தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Google Buzz
6 March 2010

சிறீலங்கா அரசாங்கத்தினதும் அதன் ஒட்டுக் கட்சிகளினதும் இனவாதப் போக்கானது தமிழ் பேசும் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளதுடன் நம்பிக்கையிழக்கவும் செய்துவிட்டது. இந் நிலையில் அரசியல் தீர்வு  தொடர்பில் சர்வதேசத்தின் விஷேடமாக இந்தியாவின் அனுசரணை அவசியமானது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Google Buzz
6 March 2010

சிறீலங்கா விவகரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைக்கும் ஆலோசனைக் குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனைகளை கூறப்போவலதில்லை என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகோலகம தெரிவித்துள்ளார்.

Google Buzz
6 March 2010

யாழ். குடாநாட்டில் இப்போது இருவகைச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த இருவகைச் சட்டம் எழுதாத யாப்பாக நடைமுறையில் உள்ளதெனவும், இதனை யாழ்ப் பாணக் குடாநாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், படையினரும் இதனை எழுந்த மானமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களின் பேச்சில் உள்ளது.

Google Buzz
6 March 2010

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கருத்து மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா பயணம் செய்துள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னனியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Google Buzz
6 March 2010

சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்கள் கவலை தருகின்றன. இந்த சூழல் ஊடகத்துறையையும், பொதுமக்களையும் அதிகம் பாதித்துள்ளது என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்கா தூதரகத்தின் பிரதி தலைவர் வலெரி பௌலர் நேற்று தெரிவித்துள்ளார்.

Google Buzz
6 March 2010

சிறீலங்காவில் இடம் பெற்ற நீண்டகால போருக்குப் பின்னர் முதற்தடவையாக மன்னார் மறைமாவட்டத்தில் தவக்கால பாத யாத்திரை நடத்துவதற்கு அம்மறைமாவட்டம் திட்டமிட்டுள்ளது.

Google Buzz
5 March 2010

'நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்' 1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும்.

Google Buzz
5 March 2010

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தரூவான் சேனாதீர அவரது உயர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளதாக மிகவும் நம்பத் தகுந்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சேனாதீர சிறீலங்காவில் சிங்கள இணையத்தளங்களை பிரபலப்படுத்துவதற்காக முக்கிய பங்காற்றியிருந்தார்.

Google Buzz
5 March 2010

அரசு வழங்கிவரும் மானியங்களை வங்கியில் போட்டு அழகு பார்க்காமல் அவற்றை உரிய தேவைகளுக்கு பயன்படுத்துமாறு மாநில அரசின்மானியங்களைப் பெற்றுக்கொண்ட மாநில தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

Google Buzz
5 March 2010

தம்பின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடையும் புத்தகப்பையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மலாக்கா மாநில ஐபிஎப் தலைவர் நாகையா இந்த அன்பளிப்பை வழங்கினார். நேற்றுக்காலை நடைபெற்ற இந்நிகழ்வு ஆசிரியர், மாணவர்கள் முன் நடந்தது.

Google Buzz
5 March 2010

வடபகுதியில் இடம்பெற்ற போரினாலும், சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதனாலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட சிறுவர் பாதுகாப்பு (Redd Barna) அமைப்பு என்ற உதவி அமைப்பின் பணியாளர் விடர் ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.

Google Buzz
5 March 2010

லெம்பா சுபாங் பிபிஆர் அடுக்கு மாடியில் வாழும் மக்கள் குறிப்பாக தமிழர்கள் படும் துன்பமும் துயரமும் என்றுதான் தீருமோ என்று அங்குள்ள சமூகத் தொண்டர் வைத்தியர் விக்னேஸ்வரன் ஆதங்கம் தெரிவித்தார்.

Google Buzz
5 March 2010

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு மற்றொரு பிளவைத் தற்பொழுது சந்தித்து நிற்கின்றது. இலங்கை என்ற மேடையில் நின்றபடி தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைச் சந்திக்கும்படியாக மிகுந்த பிரயத்தனங்களின் பின் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தளம் கிட்டத்தட்ட நாலாக உடைந்துபோயுள்ளது.

Google Buzz
5 March 2010

இங்குள்ள சிலாங்கூர் ரிவர் தோட்டத்தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் பள்ளிக்கு நேரடியாக வருகை தந்து 24 ஆயிரத்து 845 வெள்ளி 60 காசு காசோலையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

Google Buzz
5 March 2010

இந்தியாவின் தேர்தல் அமைப்புக்கும் அல்லது நடைமுறைக்கும், இலங்கையின் தேர்தல் அமைப்புக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி ஏதும் இல்லை. ஒவ்வொருமுறை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திரைப்பட நடிகர்கள், மட்டைப் பந்து வீரர்கள் என, தங்களுடைய முகத்தை மக்களிடம் காட்டி தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்கு சேகரிப்பது என்பது ஒரு நடைமுறையாக மாறிவிட்டது.

Google Buzz
5 March 2010

[படங்கள்] சிறிலங்கா அரசாங்கம் நேற்று கடலோரக் காவல்படை என்ற புதிய கடல் பாதுகாப்புப் படையொன்றை உருவாக்கியுள்ளது. காலி துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கடலோரக் காவல்படையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார்.

Google Buzz
5 March 2010

ஜே.வி.பி அரசு ஒன்றை அமைக்கும் போதே ஜெனரல் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்சா அமரசிங்கா நேற்று தெரிவித்துள்ளார்.

Google Buzz
5 March 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக