சிறிலங்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் நேற்று இரவு 10.30 மணியளவில் சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சிறிலங்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் அரச மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை யின் மாநாட்டில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் பங்குகொண்டமை இலங்கை அர சாங்கத்தைச் சீற்றமுற வைத்துள்ளது. அது மாபெரும் குற் றம் என்றும் மில்லிபான்ட் தெரிவித்த கருத்துக்களை இலங்கை அரசு காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சரவையின் புதிய பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் அதன் நீளம் நான்கு அடியை தாண்டி விட்டதாம். அதனை போலவே எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர் தொகைகள் மிக மிக அதிகம். சிறீலங்கா முழுவதிலும் 196 ஆசனங்களுக்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். குடாநாட்டில் இப்போது இருவகைச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த இருவகைச் சட்டம் எழுதாத யாப்பாக நடைமுறையில் உள்ளதெனவும், இதனை யாழ்ப் பாணக் குடாநாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், படையினரும் இதனை எழுந்த மானமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களின் பேச்சில் உள்ளது.
மேலதிக செய்திகள்
- தமிழ் இனத்தின் பிளவுகளும், அதனைச் சீர்செய்ய வேண்டிய அவசியமும்..
- தேர்தலும், தமிழீழ விடுதலையும் – கண்மணி
- கடலோரக் காவல்படையை உருவாக்கியது சிறிலங்கா – உதவிகளை வழங்கியது அவுஸ்ரேலியா?
- ஜே.வி.பி அரசு அமைக்கும் போதே பொன்சேகா விடுதலை செய்யப்படுவார்: சோமவன்சா
- ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம்: இரா.சம்பந்தன்
- கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள் – வேதனையின் விளிம்பில் தமிழர்கள்
- சிறீலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிறீலங்கா பயணம்
- குடிநீர் தட்டுப்பாட்டில் மண்டைத்தீவு
- தடங்கலுக்கு வருந்துகிறோம்
- திரு.நாகரத்தினம் சிவலிங்கம் அவர்களது மறைவு தமிழ்த் தேசியத்துக்குப் பெரும் இழப்பு
- சிறிலங்காவின் நீதித்துறை மக்களை பாதுகாக்கவில்லை: ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு
- ஈழத்தமிழர்களின் தேவை இந்திய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு புரிந்ததா? புரியவில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக