செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த கோரி புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்கம் – ஓவியக்காட்சி

முதன்மைச்செய்தி
February 16th, 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும் நடைமுறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவு… »

பிரதான செய்திகள்

"விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

15 February 2010

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.

15 February 2010

தமிழகத்தில் தன்னுயிர் ஈந்து எழுச்சியூட்டிய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவும் செய்த அக்கிரமங்களை நான் எழுதிய கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பாக நீண்ட கட்டுரையை வரைந்துள்ளார். அது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் பிரச்சார (பரப்புரை) கட்டுரையாக அமைந்துள்ளது.

15 February 2010

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு நேற்று (12) தெரிவித்துள்ளது.

 

லங்கா செய்திதாளின் ஆசிரியர் சந்தன ஸ்ரீமல்வத்த இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர், குற்றப்புலனாய்வுத் துறையினரால், தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

16 February 2010

எந்தவொரு ஊடகவியலாளர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் முன்னர் தமக்கு அறிவிக்குமாறு ஊடக அமைச்சரான சனாதிபதி மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

16 February 2010

மன்னார் மாவட்டத்திலுள்ள கொண்டச்சி சிலாவத்துறை, தலைமன்னார் மற்றும் மடு ஆகிய பகுதிகளை இலக்காக வைத்து சிங்கள-பௌத்த மற்றும் அனுராதபுர மாவட்ட மதவாச்சிய பகுதிகளிலிருந்து வில்பத்து ஊடாக மன்னார் நோக்கி வருவதாகவும், வரும்போதே தமக்குரிய குடியிருப்புகளை அமைப்பதற்கான பொருட்களுடன் வருவதாகவும் தெரியவந்துள்ளது.

16 February 2010

கடந்த மாதம் 26 ஆம் நாள் சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலை முழுமையாக ஆராயும் போது அது ஜனநாயகமற்ற தேர்தல் என தேர்தலை கண்காணிப்பதற்கு சிறீலங்கா வந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பு தமது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

16 February 2010

சிறீலங்காவில் சனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பொன்சேகா விடுதலைசெய்யப்பட வேண்டும் எனவும் கோரி பிரான்சில் வாழும் சிங்கள மக்கள் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்பாக நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

16 February 2010

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட்டல் விட்டிருக்கின்றார் அவர்.

16 February 2010

[படங்கள்] சென்னை- பெரம்பூரில் தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை  செயல்படுத்த கோரி 15-02-2010  அன்று மாலை 3.00 மணியளவில்  புரட்சிகர மாணவர் முன்னணி  சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சியும் நடைபெற்றது.

16 February 2010

சிகிரியா குன்றை பார்வையிடச் செல்லும் அனைவரும் பாதுகாப்பு கவசங்களை அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

16 February 2010

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி அநுராதபுரத்தில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

16 February 2010

சிறீலங்காவின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

16 February 2010

சிறிலங்காவில் அரச நியமனங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் என சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

16 February 2010

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்காவின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் தேர்தலகள் செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

16 February 2010

சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா ஒரு அப்பாவி என்பதை என்னால் எந்த நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்த முடியும் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.

16 February 2010

சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

16 February 2010

பிராந்திய வல்லரசுகளின் நிலைப்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை எனவும், இவ்வல்லரசுகளின் நலன்களும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் ஒன்றாக இணையக்கூடிய காலம் கனியும் எனவும் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

16 February 2010

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

16 February 2010

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 February 2010

இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில்  நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.

15 February 2010

கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன்  நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.

15 February 2010

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் கூட்டணி அமைப்பதிலும் வேட்பாளர்களைச் தெரிவு செய்வதில் அரசியல் கட்சிகள் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன. மேலும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக்கொடுப்பதற்கு இறுக்கமான நிலையும் காணப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

15 February 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக