சிறீலங்காவின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
பிராந்திய வல்லரசுகளின் நிலைப்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை எனவும், இவ்வல்லரசுகளின் நலன்களும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் ஒன்றாக இணையக்கூடிய காலம் கனியும் எனவும் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் கூட்டணி அமைப்பதிலும் வேட்பாளர்களைச் தெரிவு செய்வதில் அரசியல் கட்சிகள் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன. மேலும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக்கொடுப்பதற்கு இறுக்கமான நிலையும் காணப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு. எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம். நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழினத்தை நோண்டிப் பார்க்கும் கைங்கரியத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியது.
மேலதிக செய்திகள்
- இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தாமதமானால்: தி.மு.க. வேடிக்கை பார்க்காதாம்! கருணாநிதி எச்சரிக்கை
- த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு: சுரேஸ் பிரேமச்சந்திரன்
- சிறீலங்காவில் ஊடகங்களுக்கு எதிராக ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்
- சர்வதேச முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியல்
- வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது அதிக கவனம் செலுத்துங்கள் பவ்ரல் அமைப்பு
- தமிழ் மீட்பு தமிழர் மீட்புக்காக மக்களைச் சார்ந்து இயங்குவோம் – தோழர் தியாகு
- விரைவில் தமிழகமெங்கும் முத்துக்குமரன் பாசறை தொடக்கம் – தொல்.திருமாவளவன்
- தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம்
- லெப். கேணல் பொன்னம்மான் வீரவணக்க நாள்
- இயக்குநர் சீமானின் உரை நேரலை
- செங்கல்பட்டு, பூந்தமல்லி, வதை முகாமை இழுத்து மூடு
- சிறீலங்கா இன அழிப்பு போரில் உயிர் நீத்த ஊடகவியலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக