இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட்டல் விட்டிருக்கின்றார் அவர்.
சிறீலங்காவின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
பிராந்திய வல்லரசுகளின் நிலைப்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை எனவும், இவ்வல்லரசுகளின் நலன்களும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் ஒன்றாக இணையக்கூடிய காலம் கனியும் எனவும் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.
மேலதிக செய்திகள்
- எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்
- இலங்கையை கடல்போல் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள்
- தமிழீழக் கொள்கை தற்போதும் சாத்தியமானதாக உள்ளது: இராணுவத் தளபதி
- ராஜபக்சேக்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நடந்தது என்ன…? – அனோமா பொன்சேகா
- கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்
- போர்க் குற்றவாளிகளை பொன்சேகா இனம்காட்டலாம் என்ற அச்சமே கைதுக்கு காரணம்: த இன்டிபென்டன்ட்
- ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள்
- ரஷ்யாவின் இலங்கையுடனான ஒப்பந்தம்: அடுத்த குளிர்கால போருக்கான ஒத்திகையா?
- மட்டு ஒந்தாச்சிமடத்தில் சடலம் ஒன்று மீட்பு
- இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தாமதமானால்: தி.மு.க. வேடிக்கை பார்க்காதாம்! கருணாநிதி எச்சரிக்கை
- த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு: சுரேஸ் பிரேமச்சந்திரன்
- சிறீலங்காவில் ஊடகங்களுக்கு எதிராக ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக