புதன், 17 பிப்ரவரி, 2010

“ஆவி” விஸ்கி, சோடா குடிக்கும் ‘ஆவி’யை படம் பிடிக்கலாம் என்பது மோசடி!

திரைப்பட உலகை "ஆவி" ஆட்டத் தொடங்கி யுள்ளது. அண்மையில் கனகா என்ற நடிகை, ஆவி அமுதா வழியாக இறந்து போன அவரது தாயார் நடிகை 'தேவிகா' ஆவியுடன் பேச வைத்தாராம். தேவிகாவின் ஆவி, கனகாவுக்கு ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்ததாம். அந்த மாப்பிள்ளை கனகாவை ரகசிய திருமணம் செய்து, மறைந்து விட்டாராம். 'ஆவி நம்பிக்கை மனநோய் தொடர்பானது' என்று ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் தான் சந்தித்த மனநோயாளிகள் பற்றி டாக்டர் கோவூர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் இது ஒரு 'ஆவி'யின் கதை
17 February 2010
வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
17 February 2010
தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகளை நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை.
17 February 2010
மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.
17 February 2010
கண்டியில் நாளை வியாழக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த பெளத்த தேரர்களின் மாநாடு, அரசு ஆதரவு குண்டர்கள் விடுத்த இனக்கலவர மிரட்டலினால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
17 February 2010
[படங்கள்] சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி.சூளுரைத்தது.
17 February 2010
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றாக தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலான பிரதிநிதிகளை கொண்ட அரசியல் கட்சி ஒன்றை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
17 February 2010
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் விலைமனுக் கோரலில் மோசடி செய்து 35 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
17 February 2010
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. தமிழில்  ஏராளமான படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
17 February 2010
முன்னரள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணையை விமானப்படை தளபதி ரோசான் குணதிலக தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 February 2010
பிப்ரவரி 17 அன்று சென்னை மெமோரியல் ஹாலில், இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை அளிக்கக் கோரி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்பாட்ட முடிவில் வீரமணி செய்தியாளர்களிடம் "இலங்கையில் தமிழினம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்னும் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை ஆயிரக்கணக்கான இளஞர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை" என்று அறியப் பெரிய உண்மைகளையெல்லாம் இப்போது தான் துப்பறிந்து வந்தது போல் அடுக்கியவர் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.
17 February 2010
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
17 February 2010
சமீபத்தில் டப்ளின் நகரில்     (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்தத் தான் விடமாட்டேன் எனக் கூறினார்.
17 February 2010
ஆதாரங்கள் இன்றி ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரை கைது செய்துள்ள குற்றப்புலானாய்வுத் துறையினரின் நடவடிக்கைகள் கோமளிகளை போல் உள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
17 February 2010
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது.
17 February 2010
ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன.
17 February 2010
சிறிலங்காவின் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டமானது இன்று நண்பகலிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின தலைவர் தெரிவித்துள்ளார்.
17 February 2010
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இங்கு நடத்தப் பட்ட முறைமை குறித்தும், அதன் பெறுபேறுகள் குறித் தும் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பின்புலத்தில் இந்தத் தேர்தல் தொடர்பாகக் கண் காணிப்புக் குழுக்கள்  அதுவும் சர்வதேசக் கண்காணிப் புக் குழுக்கள்  வெளியிடும் அவதானிப்பு அறிவிப்புகள் மிக முக்கியமானவையாகின்றன.
17 February 2010
இந்தியா இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதே எம்மிடையே இப்போதும் வாழும் இந்திய தாசர்களின் கருத்தாக உள்ளது. இந்தியா என்ற பிரமாண்டத்தையும், அதன்மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த காதலுமே நடந்து முடிந்த அத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை இந்த இந்திய தாசர்கள் உணர்ந்து கொள்ள மறுத்தே வருகின்றார்கள்.
16 February 2010
லங்கா செய்திதாளின் ஆசிரியர் சந்தன ஸ்ரீமல்வத்த இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர், குற்றப்புலனாய்வுத் துறையினரால், தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
16 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக