தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்த கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக தெரியவருகின்றது. இதன்படியாக எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாது என தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கின்றார்.
விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.
Read more: http://meenakam.com/#ixzz0gFl7KOtJ





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக