தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்த கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக தெரியவருகின்றது. இதன்படியாக எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாது என தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கின்றார்.
விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஐஎன்எஸ் சுகன்யா" என்ற இந்தப் போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் கொமாண்டர் பரீஷ் சௌனி தலைமையிலான 110 ற்கும அதிகமான கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்தின் யாழ். மாவட்ட உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை தேர்தலில் களம் இறங்க இடமளிக்கப்படாமை யின் பின்னணியில் பிராந்திய சக்தி ஒன்று இருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
மேலதிக செய்திகள்
- வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான தேர்தல் தொடர்பாக இத்தாலி தமிழர்கள்
- ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காயும் கலைஞர்
- பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை மே 14 ஆம் திகதிக்குள் நடத்தவேண்டிய நிலை
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?
- பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தும் தகைமையை தக்கவைத்திருக்கும் மேற்குலகம் -வேல்ஸிலிருந்து அருஷ்
- தென்னிலங்கை அரசியல் வியூகங்களும் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களும் -இதயச்சந்திரன்
- அரசின் அழுத்தம் காரணமாகவே நாம் ஒன்றுகூடலை கைவிட்டிருந்தோம்: பௌத்த சங்க பேச்சாளர்
- ஆறுதல் தரும் "ஆறுதல்' அமைப்பு
- அர்ஜனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்டர்களில் 3 பேர் அரசுடன் இணைந்து போட்டியிட முடிவு
- தமிழ் மக்களை வேவுபார்த்த சிறீரங்கா: கொழும்பு இணையத்தளம்
- யாழில் மக்களை ஏமாற்றி சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக