ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஊடக மைந்தனே !

ஊடக மைந்தனே !

பதிந்தவர்_மீனகம் on February 21, 2010
பிரிவு: கவிதை, செய்திகள்
மட்டக்களப்பு மைந்தனே!
மானிட உரிமை காத்த உத்தமனே!
உரிமை தெரியாத வெறியர் மத்தியிலும்
ஊடக தர்மம் காத்த உத்தமரே!ஊடகம் என்ற ஊற்றில்
ஊறிய தமிழீழ ஊடகனே!
மாணவப் பருவமதனை – ஊடகம்
மலையேற மாற்றிய எழுத்தாளரே!
போகுமிடங்கும் உண்மை
போயிட ஊடகத்தை
ஊக்குவித்து உயிர்கொடுத்த
ஊக்குவிப்பாளனே!
அறிவியலின் தோற்றம் முதல் இறுதி வரை
அளவின்றி பணி செய்த பணியாளனே!
கற்கை நெறிகளை செய்திகளாக்கிய
கள்ளமற்ற கல்வி தரும் ஆசானே!
பார்வையில் பட்டதை
பட்டென்று எடுத்தியம்பவும்
பாரளவில் விவாதிக்கவும்
பயப்படாத அறிவிப்பாளனே!
வள்ளிபுனமிருந்து இரணைப்பாலை சென்று
வளமான வன்னி மண்ணை உண்மையின் பால்
மீட்டெடுக்க வள்ளிபுனம் வந்தீர்!
உண்மைகள் மழுங்கும் உலகில்
உங்கள் உடலும் மழுங்கியதோ!
உடலது மறைந்தாலும்
உங்கள் பணியது
ஊற்றாக ஊற உரமூட்டி
ஊடகம் உயிர் பெற வழிகாட்டிய வழிகாட்டியே!
தேசமெங்கும் நினைவுகூறும் உங்கள் நினைவு
தேசியத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன!
மிருகத்தின் கையில் அகப்பட்ட ஊடகர்களின்
மிஞ்சிய உணர்வுகளை தேசியத்தில் ஊட்டி
ஊடகம் காத்த உத்தமரே!
ஊடகத்தின் உயிர்மை இருக்கும் வரை
உங்கள் நினைவுகள் மலரும்.
உங்களின் நினைவுகளுடன் தமிழீழ
உறவுகளும் மலருவார்கள்…..
விட்டுச் சென்ற ஊடகப்பணியை
தொட்டுச் செல்லாது
எடுத்துச் செல்ல தமிழினமே
ஒன்றுபடு..
ஒராண்டு காலங்கள் ஒற்றுயிராய் கழிந்தாலும்
ஓருயிராய் ஒன்றுபட்டு ஊடக தர்மம் காத்து
உண்மையை உலகிற்கு உங்களைப் போல்
தேசியத்திலிருந்து அளிக்க மீனகம் உரிமையுடனும்
தாகத்துடனும் கடைசிவரை பயணிக்கும்…

————- மீனகம் கனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக