வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

புதிய வேட்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ளதாகவும் ஆனால் அதில் தற்போது உள்ள உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் இல்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று (18) தெரிவித்துள்ளார்.
19 February 2010
இன்று வெள்ளிக்கிழமையில் (19) இருந்து எதிர்வரும் ஏப்பிரல் 15 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவில் பேரணிகளை மேற்கொள்வதற்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக மூத்த உதவி காவல்துறை ஆணையாளர் காமினி நவரட்னா தெரிவித்துள்ளார்.
19 February 2010
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங் கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை திடுதிப்பென விலக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில்   வேட்புமனு ஏற்கும் காலம் நெருங்கும்போது  எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
19 February 2010
இலங்கையின் அரசியல் யாப்புகள் நாட்டின் பொது நன்மை கருதி ஆக்கப்பட்டவை அல்ல. அவை, சிங்களப் பெரும்பான்மை இனத்தின் நலன் கருதி இயற்றப்பட்டவை. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை அறிமுகம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் முழுநோக்கமும் சிறுபான்மைத் தமிழர்களை அப்படியே அமிழ்த்திவிடுவதாகும்.
19 February 2010
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
"இந்தி"ராணியிடம் உத்தரவு கேட்டு
19 February 2010
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை-கொத்மலை புதிய வீடமைப்புத்திட்டம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்னறில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
18 February 2010
[படங்கள்] தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவியும் அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரவ் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
18 February 2010
தமிழச்சிகளை இழிவாக பேசிய மலையாள நடிகர் ஜெயராமன் வீட்டைதாக்கி அதன் பின்  ஜெயராமன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க செய்த இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் 16 பேரும் இன்று பிணையில் வெளிவந்தனர்.
18 February 2010
சாலான் தெமெர்லோவில் உள்ள லூபுக் லாயாம் கிராமத்தில் குடியிருக்கும் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதியரின் வீடு கரையான்களால் சேதம் அடைந்துள்ளது.
18 February 2010
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அரசாங்கம் கொடுத்த நிலத்தில் ஆறு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டடம் கட்டப்படாததால் எப்படி அந்த இடம் அந்நிய நாட்டுக்காரர்களால் புறம் போக்கு குடிசைப் பகுதியாக மாறியது?
18 February 2010
ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை விவகாரத் தில் இலங்கைத் தேசம், இனிமேல், மியன்மார், வட கொரியா, ஸிம்பாப்வே போன்ற நாடுகளின் வரிசையில் சேர்க்கப்படலாம் என ஊடகவியலாளரைப் பாதுகாப் பதற்கான சர்வதேசக் குழு கோடி காட்டியிருக்கின்றது.
18 February 2010
சிறீலங்கா அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை சிறீலங்கா அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை சிறீலங்காயில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
18 February 2010
யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
18 February 2010
ஒரு காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்து வருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அதனால் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களை சிங்கள தேசம் கைவிட்டுவிடவா போகின்றது?
18 February 2010
சிறீலங்கா அரசாங்கம் தமது அரசியல் லாபத்திற்காக அனைத்தையும் பிளவு படுத்த முயல்வதாக எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
18 February 2010
சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் துணை ஆயுதக் குழுக்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
18 February 2010
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைத்திட்டத்திற்காக நாட்டை விற்கமுடியாது என சிறிலங்காவின் மத்தி வங்கி ஆளுநர் தெரிவிக்கின்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைத்திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
18 February 2010
மக்களின் கவலையீனம் காரணமாக சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதவரையில் 41பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
18 February 2010
சிகிரியா மொறவேவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக சிகிரிய சிறிலங்கா காவல்துறையின் தெரிவிக்கின்றார்கள்.
18 February 2010
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக பெளத்த தேரர்கள் கூட்டவிருந்த மாநாடு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெளத்த நாடு என்ற நினைப்பில் பெளத்த பிக்குகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது இந்த நாட்டின் மரபு.
18 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக