வியாழன், 18 பிப்ரவரி, 2010

சீன உதவியுடன் சிறீலங்காவில் கூகிள் இணையத்தளம் முடக்கப்படும் சாத்தியம்

சிறீலங்கா அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை சிறீலங்கா அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை சிறீலங்காயில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
18 February 2010
யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
18 February 2010
சிறீலங்கா அரசாங்கம் தமது அரசியல் லாபத்திற்காக அனைத்தையும் பிளவு படுத்த முயல்வதாக எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
18 February 2010
சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் துணை ஆயுதக் குழுக்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
18 February 2010
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைத்திட்டத்திற்காக நாட்டை விற்கமுடியாது என சிறிலங்காவின் மத்தி வங்கி ஆளுநர் தெரிவிக்கின்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைத்திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
18 February 2010
மக்களின் கவலையீனம் காரணமாக சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதவரையில் 41பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
18 February 2010
சிகிரியா மொறவேவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக சிகிரிய சிறிலங்கா காவல்துறையின் தெரிவிக்கின்றார்கள்.
18 February 2010
உள்நாட்டுப் போர் முடிவுற்றாலும் எதிர்பார்த்த அமைதி சிறிலங்காவில் ஏற்படவில்லை முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கடும் போர் நடத்திய பிரான்சும் ஜேர்மனியும் இன்று உறுதியான நட்பு நாடுகளாகி விட்டன இது போன்ற ஒரு நிகழ்வைச் சிறிலங்காவில் காணமுடியாது தமிழ்-சிங்களப் பகைமை பல நூற்றாண்டுக்குப் பழமை வாய்ந்தது மனதிலே பகை உதட்டிலே நட்பு என்ற அடிப்படையில் இரு பக்க உறவுகள் இடம் பெறுகின்றன சிறிலங்கா இனப்பிரச்சனை புற்று நோய் போன்றது அது மறைவது போல் இருந்து மீண்டும் தோண்றி விடும் தமிழர்களைத் தோற்கடிக்கும் நோக்குடன் ஒன்றிணைந்த சிங்கள இனத்தவர்கள் மத்தியில் போர் முடிந்ததும் வெடிப்புக்கள் தோன்றிவிட்டன சிங்கள ஒற்றுமைக்கு ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது.
18 February 2010
வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
17 February 2010
தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகளை நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை.
17 February 2010
மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.
17 February 2010
கண்டியில் நாளை வியாழக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த பெளத்த தேரர்களின் மாநாடு, அரசு ஆதரவு குண்டர்கள் விடுத்த இனக்கலவர மிரட்டலினால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
17 February 2010
[படங்கள்] சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி.சூளுரைத்தது.
17 February 2010
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றாக தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலான பிரதிநிதிகளை கொண்ட அரசியல் கட்சி ஒன்றை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
17 February 2010
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் விலைமனுக் கோரலில் மோசடி செய்து 35 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
17 February 2010
போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் HURIDOCS அமைப்பினால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  தகவல் ஆவணப்படு;த்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது.
17 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக