இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் விழா எடுப்பதும் விழாவில் கலந்துக்கொண்டு பேசுவோர் சொறிந்து விடுவதில் சூரன் நீயா? நானா? என் போட்டிபோட்டுக்கொண்டு கருணாநிதிக்கு புகழ் மலர்கள் சொரிவதும் அந்தப் புகழுரைகளைக் கூச்ச நாச்சமில்லாமல் முதுகெலும்பே முறிந்தாலும் கவலையில்லை என கருணாநிதி காலை முதல் மாலைவரை இருந்த இடத்திலேயே இருந்து ரசிப்பதும் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வாகிப்போனது அனைவரும் அறிந்ததே.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் கூட்டணி அமைப்பதிலும் வேட்பாளர்களைச் தெரிவு செய்வதில் அரசியல் கட்சிகள் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன. மேலும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக்கொடுப்பதற்கு இறுக்கமான நிலையும் காணப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக