செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தமிழீழமே தீர்வு பிரித்தானிய மக்கள் நிர்ணயிப்பு – த கார்டியன்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வாக சுதந்திர தமிழீழம் தான் அமையவேண்டும் என்பதை பிரித்தானியா வாழ் தமிழ் வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது. விரிவு… »
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் என்னையும், எங்கள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
2 February 2010
தமிழீழத்தில் நடந்துகொண்டிருந்த பேரழிவை தடுக்குமாறு தமிழக, இந்திய அரசுகளை கேட்டும் உலக நாடுகளை தலையிடுமாறு வற்புறுத்தியும் தங்களையே தகனம் செய்து தமது உயிரை ஈகம் செய்த 19 ஈகியர்களின் நினைவுநாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
2 February 2010
"சிறிலங்கா மீது எவரும் விசாரணை நடத்த முடியாது. அப்படி ஒன்றைப் பேசிக்கொண்டு என்னிடம் யாரும் வரக் கூடாது. நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர். நான் தீர்மானமாகச் சொல்கின்றேன். விசாரணைகள் எதுவும் நடைபெறாது" – என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
2 February 2010
ஐக்கிய தேசிய முன்னணியுடன் போட்டியிடுவதற்கு சனநாயக் கொள்கையுடைய யார்வேண்டுமானாலும் வரலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.கட்சி இதனை தெரிவித்துள்ளது.
2 February 2010
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2 February 2010
சிறுபான்மை இன மக்களின் பிரச்சனைகளை மகிந்தா அதிகளவில் கருத்தில் கொள்ளவேண்டும். அதனை மறந்தால், நாட்டின் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது இந்த நாட்டை ஆட்சி செய்வது கடினமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே துரைரட்ணசிங்கம் லக்பிம வாரஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
1 February 2010
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்காவின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி ஆயுததாரிகள் பிஸ்டல் மற்றும் துப்பாக்கிகள் சகிதம் மாணவர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
1 February 2010
மகிந்தவிற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு வரையில் நோர்வேயின் சிறிலங்காவிற்கான விசேட சமாதானப் பிரதிநிதியாக எரிக் சொல்ஹெய்ம் கடமையாற்றினார்.
1 February 2010
[ படங்கள்]மலேசியாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பத்துமலை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர். தைப்பூசத்தையொட்டி மலேசியா வாழ் தமிழர்களுக்கு பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 February 2010
சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் அளித்த விருந்துபசாரம் ஒன்றை சிறீலங்காவின் பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 February 2010
யேர்மன், நொய்ஸ் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்களால் கேணல் கிட்டு மற்றும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தன்னையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தை செய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனுக்கும் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
1 February 2010
கடந்த சனிக்கிழமை சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு துறையினரால் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா' நிறுவனத்தைத் திறக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 February 2010
[காணொளி] ஈழப் போரட்டத்திற்காக உயிர் நீத்த தமிழக போராளி முத்துக்குமார் நினைவஞ்சலி நிகழ்வுகள் தொகுப்பும், பழ.நெடுமாறன், வைகோ அவர்களின் உரைகளின் காணொளிகள்..
1 February 2010
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது பிரிவினர் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
1 February 2010
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நேற்று முன்தினமும் (30) நேற்றும் (31) பிரித்தானியாவில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியலில் தம்மால் முடிந்த காத்திரமான செய்தி ஒன்றை தாயகத்து மக்கள் கூறிச்செல்ல, இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்து தமிழ் மக்கள் தமது ஜனநாயகப் பாதைக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர்.
1 February 2010
சிறீலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடைந்த கையோடு நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்படும் இவ்வேளையில் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தாம் வடகிழக்கில் தனித்து தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
1 February 2010
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பான செய்திகளை சேரிக்க வந்திருந்த இந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொன்சேகாவின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரால் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக சன்டே ரைம்ஸ் வார ஏடு தெரிவித்துள்ளது.
1 February 2010
வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள எஞ்சியிருக்கும் மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.
1 February 2010
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக சுமார் 1000குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்துவரும் மழையின் காரணமாக தாழ்நிலத்திலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக