திங்கள், 1 பிப்ரவரி, 2010

தேசியத்தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு வந்துவிட்டதாம் – சொல்கிறார்

இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 February 2010
சிறீலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடைந்த கையோடு நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்படும் இவ்வேளையில் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தாம் வடகிழக்கில் தனித்து தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
1 February 2010
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பான செய்திகளை சேரிக்க வந்திருந்த இந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொன்சேகாவின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரால் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக சன்டே ரைம்ஸ் வார ஏடு தெரிவித்துள்ளது.
1 February 2010
வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள எஞ்சியிருக்கும் மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.
1 February 2010
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக சுமார் 1000குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்துவரும் மழையின் காரணமாக தாழ்நிலத்திலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 February 2010
சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்திருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர். சிறிலங்காவில் அரச அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தனர்.
1 February 2010
நெதர்லாந்தில் நேற்று (31.01.2010) வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 1ம் ஆண்டு நினைவுவணக்கம் "ரொத்தர்டாம்" நகரில் நடைபெற்றது. இதில் முத்துக்குமார் அவர்களின் நிழற்படம் வைக்கப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் அங்கு வந்திருந்த மக்களால் செலுத்தப்பட்டது.
1 February 2010
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினருக்கு வெளிநாடுகள் பயிற்சி அளிக்க கூடாது என்றும் ஹெய்டி உட்பட எந்த நாட்டுக்கும் சிறிலங்கா இராணுவத்தினரை அமைதி படைகளாக அழைக்க கூடாது என்றும் பன்னாட்டு அமைப்புக்கள அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டுள்ளது.
1 February 2010
1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இரண்டாவது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்று வருவதுடன், சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
1 February 2010
[படங்கள்] மாவீரன் முத்துக்குமார் மற்றும் பதினெட்டு மாவீரர்கள் தங்களின் இன்னுயிரை ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஈகை தந்து வரலாற்று நாயகர்களாக விளங்கியுள்ளனர். அளப்பரிய ஈகை தந்துள்ள இம்மாவீரர்களை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் வாழ் தமிழர்கள் முத்துக்குமாருடைய ஈகையின் ஓராண்டு நினைவு நாளையொட்டி 2010- ஆம் ஆண்டு ஜனவரி 29- ஆம் நாள் இம்மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன உணர்வு எழுச்சி நாள் புனித நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் பல சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
31 January 2010
[படங்கள்] ஏ-9 பாதையில் வழி நெடுகிலும் புத்தருக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு சுற்றுமதில்களும் கட்டப்பட்டு வெள்ளைப் பூச்சுக்களும் பூசப்பட்டுவிட்டன. ஆனால், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை தூக்கி நிறுத்த சிறீலங்காவிடம் பொருளாதார வளம் இல்லை.
31 January 2010
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புச் சான்றிதழ் சிறிலங்கா அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
31 January 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
31 January 2010
[படங்கள்] 1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இரண்டாவது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
31 January 2010
[காணொளி] வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னர் பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்களின் காணொளிப்பதிவு
31 January 2010
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
31 January 2010
ஜே.ஆர்.ஜயவர்த்தன வினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
31 January 2010
தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம்: வெளுக்குமா கிழக்கு நிகழ்வில் ஊடகவியலாளர் க.அய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
31 January 2010


மேலதிக செய்திகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக