வியாழன், 4 பிப்ரவரி, 2010

[photos and vides] செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

[படங்கள் காணொளி] செங்கல் பட்டு சிறப்பு முகாமில் ஈழ ஏதிலிகள் தமிழக காவற்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழினப் பாதுகாப்பு போராட்டக்குழு தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4 February 2010
"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர். இச்சம்பவம் செவ்வாய் கிழமை மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுந்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம்.
4 February 2010
தமிழீழ பகுதியில் உள்ள பலாலி விமானத்தளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம். அதேபோல, சில துறைமுகங்களையும் மறு சீரமைக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக சிறிலங்காவிற்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.
4 February 2010
வடக்கு கிழக்கு மீள் குடியேற்றப் பணிகளிற்கு அமெரிக்கா மூன்று மில்லியன் நிதி உதவி வழங்கத் தீர்மானித்துள்ளதாக லக்பிம எனும் சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
4 February 2010
வவுனியா வதைமுகாம்களில் உள்ள சிறுவர்கள் கல்விகற்பதற்கு பாடசாலையொன்று ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி முகாம்களிலுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4 February 2010
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இளம் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
4 February 2010
சிறிலங்காவின் 62வது சுதந்திர தினம் இன்றாகும். 1948ம் ஆண்டு இதுபோன்ற ஒரு தினத்தில் பிரித்தானிய அரசிடமிருந்து சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.
4 February 2010
சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு மற்றுமோர் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு வழங்க முன்வந்துள்ளது.
4 February 2010
செங்கல் பட்டு  சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படடிருந்த 33 தடுப்புக் கைதிகள் மீது இன்று (புதன்கிழமை)  காலை தமிழக காவல்படை மேற்கொண்ட கண்மூடித்தனமான தாககுதலில்   18 க்கும் மேற்பட்ட கைதிகள்  படுகாயமடைந்துள்ளார்கள். ஒருவர் கை முறிந்த நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4 February 2010
வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
3 February 2010
சிறிலங்காவில் இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தை தவறான வழியில் இட்டுசெல்லக்கூடாது என கல்கிஸ்ஸை நீதவான் இன்று எச்சரிக்கை விடுத்தார். அப்பாவிகளை கைது செய்வதையும், குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடவிடும் நடவடிக்கைகளையும் இரகசிய காவற்துறையினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
3 February 2010
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
3 February 2010
சிறிலங்கா வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய அரச அதிபர் மகிந்தவிற்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
3 February 2010
ஊடகங்களுக்கு செய்திகளையோ அல்லது நேர்காணல்களையோ வழங்குவதற்கு சிறீலங்கா படையினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல நேற்று தெரிவித்துள்ளார்.
3 February 2010
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலுக்கு கெடுபிடிகளை மீண்டும சிறிலங்கா அரசு கொண்டுவந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலினை ஒட்டியதாக சில தினங்களுக்கு முன்னர் மீன் பிடித்தலுக்கான தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக சிறிலங்கா அரசு அறிவித்தது.
3 February 2010
மகிந்த ராசபக்சவின் இரண்டாவது பதிவிக்காலம் எதிர்வரும் கார்த்திகை மாதம் 19ம் திகதி ஆரம்பமாவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகாலம் இருக்கும் நிலையில் மகிந்த ராசபக்ச அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
3 February 2010
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாக பணியாற்றுவதாகவும் தான் முன்னர் அறிவித்தபடி ஓய்வுபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
3 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக