[காணொளி] குவைத் நாம் தமிழர் பேரியக்கத்தின் சார்பில், மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் தமிழர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டது. மாவீரன் அப்துல் ரவூப் நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக மாவீரன் முத்துக்குமார், மேதகு வேலுப்பிள்ளை உள்ளிட்ட ஈகியர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செந்தில் குமார் அவர்கள் மாவீரர் நாள் பாடலை பாடினார்.
[படங்கள்] மாவீரன் முத்துக்குமார் மற்றும் பதினெட்டு மாவீரர்கள் தங்களின் இன்னுயிரை ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஈகை தந்து வரலாற்று நாயகர்களாக விளங்கியுள்ளனர். அளப்பரிய ஈகை தந்துள்ள இம்மாவீரர்களை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் வாழ் தமிழர்கள் முத்துக்குமாருடைய ஈகையின் ஓராண்டு நினைவு நாளையொட்டி 2010- ஆம் ஆண்டு ஜனவரி 29- ஆம் நாள் இம்மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன உணர்வு எழுச்சி நாள் புனித நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் பல சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலதிக செய்திகள்
- சிறிலங்கா புலம்பெயர் தமிழர்களை கைது செய்வதற்கு கண்டனம்
- என்மீதான மிரட்டல்களை நிறுத்தாவிடின் அரசின் இரகசியங்களை வெளியிடுவேன்
- தமிழீழத்தில் இந்தியா ஊடுருவல்
- ஊடகவியலாளர் கைது கடத்தலை நிறுத்தக்கோரி மகிந்தவுக்கு கடிதம் – ஊடகவியலாளர் அமைப்பு
- மாசி 04 தமிழீழ துக்கநாள் – பெல்ஜியம் நோக்கி தமிழினம் அணிதிரள்வு
- பிரித்தானிய மண்ணில் வரலாற்றை எழுதுவோம்.!
- தமிழீழத்தின் எதிர்காலம் எம் கைகளில் – பிரித்தானியா இளைஞர் அமைப்பு
- நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்
- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி விடுவிப்பு
- தமிழ்த் தேசியத்தை அழித்த மகிந்தாவை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது சிங்கள தேசம்
- லங்கா ஈ நியூஸ் அலுவலகத்திற்கு தடை
- மகிந்தவின் பதவிக்காலத்தில் சர்ச்சை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக