[படங்கள்] மாவீரன் முத்துக்குமார் மற்றும் பதினெட்டு மாவீரர்கள் தங்களின் இன்னுயிரை ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஈகை தந்து வரலாற்று நாயகர்களாக விளங்கியுள்ளனர். அளப்பரிய ஈகை தந்துள்ள இம்மாவீரர்களை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் வாழ் தமிழர்கள் முத்துக்குமாருடைய ஈகையின் ஓராண்டு நினைவு நாளையொட்டி 2010- ஆம் ஆண்டு ஜனவரி 29- ஆம் நாள் இம்மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன உணர்வு எழுச்சி நாள் புனித நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் பல சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக