புதன், 13 ஜனவரி, 2010

”தம்பி உயிரோடு இருக்கிறார்… கனடாவில் என்னை சந்திப்பார்!” – பார்வதி அம்மாள்

"எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!" என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன். விரிவு… »


பிரதான செய்திகள்

சிறிலங்கா அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
11 January 2010
வகுப்பறையில் தமிழில் பேசக்கூடாது, மீறினால் அடி உதை என சக மாணவர்களை சதா தொந்தரவு செய்து வந்ததாக நம்பப்படும் மாணவர் கும்பலொன்று அவர்களை பள்ளிக்கு வெளியே தாக்கியதாகவும் தெரிய வருகிறது.
11 January 2010
யாழ் குடநாட்டிற்கு மகிந்த மேற்கொண்ட பயணத்திலிருந்து மகிந்தவிற்கு யாழ் குடாநாட்டில் மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாக தென்படுகிறது.
11 January 2010
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.
10 January 2010


ஏனைய செய்திகள்

'ஜனாதிபதி ராஜபக்ஷேவைப் போற்றும் வகையில் இயற்றப் பட்ட 'வணக்கம் மாமன்னரே' என்ற பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி ரோசனா கமகே ரகசிய இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
13 January 2010
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர் படகுகளின் வலைகளை சிறீலங்கா கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.
13 January 2010
தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள்.
13 January 2010
பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 January 2010
இயற்கையின் படைப்புக்களில் மிகவும் அரிதான காட்சியாக கருதப்படும் சூரிய கிரகணம் நாளை நடைபெறவுள்ளது. இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் மத்திய ஆபிரிக்கா பகுதியில் ஆரம்பித்து உகண்டா கென்யா, சோமாலியா வழியாக இந்து சமுத்திரப்பகுதியில் பயணிக்கும் என கூறப்படுகின்றது.
13 January 2010
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம் தெரிவித்துள்ளது. மாத்தறை தங்காலை பகுதியில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் கூட்டுக்கொல்லப்பட்டு சிலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை தனது விசனத்தை தெரிவித்துள்ளது.
13 January 2010
எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் தான் பதவியில் இருந்து ஒதுங்கப்போவதாக சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
13 January 2010
அரச  தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்பாகத நடாத்த திட்டமிட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
13 January 2010
இந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால கைது செய்யப்பட்ட 186 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
13 January 2010
தமிழராகிய எம்மைப் பொறுத்தவரை வேட்பாளர் எவராயிருப்பினும் எவ்விதத் தேர்தலுக்கும் இது உகந்த நேரமில்லை. தமிழரது மரபுவழித் தாயகத்தில் வாழ்வோர் போரினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து முற்றாக மீளாதுள்ளனர்.
13 January 2010
நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் நாயின் எந்த உடல் பாகத்தில் பட்டாலும் நாய் தனது காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.அது போலத்தான் தென்னிலங்கை அரசியல் தலை வர்களும். அவர்களுக்கு இடையேயான ஆட்சி அதிகாரத் துக்கான போட்டி என்று வந்தவுடன் அவர்கள் உருட்டு வது சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களின் விவகாரத்தைத்தான்.
13 January 2010
விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசில் உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்டகாலம் வெறுமனே தடுத்து வைத்திருக்க முடியுமா என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் அசோக என். சில்வா கேள்வி எழுப்பினார்.
13 January 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவெ தொடர்ந்தும் இருந்து வருவதாக புளொட்ட அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் குறிப்பிட்டுள்ளார்.
12 January 2010
முருகன் தமிழ்க் கடவுள். அவனே தமிழின் மன்னன். அவன் வீற்றிருந்து அரசாட்சி புரியும் இடம் நல்லூர். தமிழ் மன்னன் சங்கிலியன் நல்லூரைத் தன் இராசதானியாகப் பிரகடனம் செய்ததும் தமிழ்க் கடவுள் அங்கு வீற்றிருந்ததனால் என்ற முடிபுக்கு நாம் வரலாம்.
12 January 2010
தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரும் தேசிய தலைவரின் மனைவி மதிவதனியின் தாயாரும் அவர்கள் விரும்பினால் இந்தியா செல்லலாம் என்று அரச தலைவர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
12 January 2010
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள திருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சிறிலங்காவின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
12 January 2010
முன்னாள் போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மகிந்த விடுத்த அறிவிப்பை அடுத்து, அன்றைய கூட்டத்தில்வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் மீண்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
12 January 2010
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து பேரூந்து பிரச்சனை காரணமாக  மலேசியா கோலமூடா கோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
12 January 2010
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
12 January 2010
மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் கேட்கப்படும் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பதிலளிக்கப்படும் என பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக